தாமரையை இழுத்து சென்றவன் கிருஷ்ணாக்கு முதல டிரஸ் எடுக்க கூட்டிட்டு போனான், எனக்கு நீ செலக்ட் செய், உனக்கு நான் செய்றேன், முகத்தில் கடுமை.
தாமரை தலையை ஆட்டிவிட்டு, ஸ்கை ப்ளூ கலர்ல ஒரு சட்டையை காமிக்க, "அது நல்லா இல்ல".
அவ எது காமிச்சாலும் நல்லா இல்ல, இது நல்லா இல்லனு சொல்லிட்டே இருந்தான். கடைசியா அவ முதல்ல எடுத்த சட்டைக்கு பில் போட கொடுத்துட்டாங்க.
"இவ்ளோ டைம் வேஸ்ட் செஞ்சிட்டு, முன்னவே எடுக்கறதுக்கு என்னா?"
"என்னது காது கேக்கல".
"ஒன்னும் இல்ல சாமி ஆளவிடு",
"அது" எல்லோரும் வாங்கின அனைத்தும் வண்டியில் நிரப்பிவிட்டு, திருவிழா சிறப்பாக கொண்டாட முடிவு எடுத்தார்கள். தாமரை புடவை தேவைக்கு மட்டும் எடுத்துக்கொண்டு சுடிதார் கொஞ்சம் வாங்கினால், கிருஷ்ணாக்கு பிடிக்கும் என்று.
ஆனால் அவன் அதுக்கும் திட்டுவான் என்று அவ என்ன கனவா கண்டா.
அணைத்து ஏற்பாடும் சிறப்பாக நடந்தது, ஒருபுறம் திருவிழா ஒருபுறம் கல்யாண வேலை செய்துகொண்டு இருந்தார்கள்.
திருவிழா நாள் வந்தது, அனைவரும் கலர் புல்லா இருந்த நேரம், க்ரிஷ் கண்ணன் மல்லி செய்யும் காதலை பார்த்து, "நல்லா வாழுடா".
ஆகாஷ் வாணி வெளியே நல்லா இருப்பது போல நடித்துக்கொண்டு இருந்தார்கள். பேசி தீர்க்க வேண்டிய விஷயத்தை இழுத்துக்கொண்டு இருந்தார்கள்.
க்ரிஷ் தாமரையை எதிர் பார்த்து இருந்தான், வரும் அழகை பார்த்து அடித்து கொள்ளும் ஆத்திரம் வந்தது, யாருக்கும் தெரியாமல் நழுவிச் சென்று தாமரையை தள்ளிக்கொண்டு அவன் அறைக்கு போக.
"என்ன செய்றீங்க விடுங்க".
"இது கட்டிட்டுவா", அவன் நிலா சட்டைக்கு மேட்ச் ஆன புடவை எடுத்து குடுக்க, அதனை ஆசையாக வாங்கி,
"எனக்கா வாங்கிவச்சி இருந்தீங்க?",
"ஆவனும் மண்டையை ஆட்டிட்டு இதான் திருவிழா க்கு போடற டிரஸ்சா டி" அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், அவள் கையை பிடித்து வலிக்கும் அளவு அழுத்தினான்.