அதற்கான வேலையை ஆகாஷ் தொடர்ந்தான்.
"சொல்லு ஆகாஷ் என்ன திடீர்னு கால் பண்ற" என்றான் ஆகாஷின் நண்பன்.
"நான் சொல்லி இருந்தேனேடா யோசிச்சி சொல்றேன்னு சொன்னியே" என்றான் ஆகாஷ்.
"எனக்கு ஓகே டா ஆனா அவன பத்திதான் தெரியும்ல சரியான அடாவடி பிடிச்சவன், எதுமே பிடிக்கொடுத்து பேசல".
"வீட்ல சொல்லிட்டியா கண்ணா?"
"அதுலாம் காலேஜ் படிக்கும் போதே ஸ்மெல் பன்னிட்டாங்க".
"என்னடா புதுசா இருக்கு இதெல்லாம் என்ட சொல்லவே இல்ல".
"ஏன்டா நீ வேற படிக்கற வயசுல மூடிட்டு இருன்னு, 3 குடும்பம் முன்னாடி நிக்க வச்சி அசிங்க படுத்திட்டாங்க டா".
ஆகாஷ் விழுந்து விழுந்து சிரிக்க "இதுக்கு தாண்டா உன்ட சொல்லல."
"சரிடா நான் அவனுக்கு கால் செஞ்சி கேட்டுப்பாக்குறேன்" சொல்லிட்டு ஆகாஷ் போன் கட் செஞ்சிட்டான். அவர்கள் ரெட்டை சகோதரர்கள். மல்லிக்கும் தாமரையும் பொருத்தமா பட அவங்க விருப்பம் கேட்க.
பெரியவன் தாமரை போல அமைதி ஆனா சின்னவன் இருக்கானே மல்லி விட மோசம் சரியான அடாவடி பிடிச்சவன். இப்போவும் அதான் செஞ்சிட்டு இருக்கான், கல்யாணத்துலாம் செஞ்சிக்க முடியாது லிவ் இன்க்கு பொண்ணு தேடறேன்னு சுத்திட்டு இருக்கான், அது தெரிஞ்ச ஆகாஷ், அவன்ட கேக்கலாம் இல்லாட்டி மெதுவா வேற மாப்பிள தேடலாம்னு யோசிச்சிட்டு. இன்னொருவனுக்கு கால் பண்ணா பிஸின்னு வந்தது.
ஆகாஷ் அப்புறம் பேசிக்கலாம்னு வச்சிட்டு ஹால்க்கு வரான்.
இப்போவும் அதே பஞ்சாயதுதான் வாணியும் மல்லியும் சண்டை போட, தாமரை ரெண்டு பேரையும் சமாதானம் படுத்த. ஆகாஷ் இவங்க போடற சண்டையை பாத்து காண்டாகி கண்டுக்காம போய் உட்காந்துட்டான். ஆகாஷ்க்கு பின்னாடி பைட் பண்ணிட்டு இருக்க.
பிஸி ஆனா நம்பனும் வீடியோ கால் செய்ய ஆகாஷ் எடுத்து ஹெட் செட் போட்டு , பேச "என்ன டா நான் சொன்னது யோசிச்சயா?".
