இங்கு காதல் குடும்பம்,
தாராவின் சுட்டித்தனம் கல்லூரி முடிந்த பின்பும் அடங்கவில்லை, தந்தை ஆதியின் சேட்டைகள், ரித்துமாவின் அறிவு என பார்க்கும் அனைவர்க்கும் தேவதையாக தெரிந்தாள், படிப்பு விஷயத்தில் மட்டும் மிகவும் கண்டிப்பானவளாக இருந்தாள்.
கண்ணனுக்கும், கிருஷ்ணனுக்கும் படிப்பில் பெரியதாக விருப்பம் இல்லை இருந்தாலும் தாராவிற்காக நன்கு படித்தார்கள், அதுவும் பள்ளி வரை மட்டும்தான் என்று ஒருமனதாக தாராவிடம் ஒப்பந்தம் வேறு... விளையாட்டு பசங்க.
தாரா தான் மாலை ஒரு ஐந்து மணிநேரம் வச்சி செய்வாள், காவியா சின்ன புள்ள பிடிச்சா படிக்கலாம் இல்லனா, போய் தாரா மடில படுத்து தூங்க ஆரமிச்சிடுவா.
காவியா, கவிதா மீது கொல்லை பிரியம் தாராக்கு ஆனால் அந்த வளந்து கெட்ட கவினை பார்த்தாள் மட்டும் வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பாள் தாரா.
படிப்பதற்காக ஒரு பெரிய அறையை கட்டிகுடுத்து விட்டார்கள், ஆதி, அர்ஜுன், மற்றும் ஆனந்தன்.
ஆனந்தன், செல்வி ஐந்து வருட பிரிவு, எந்நேரமும் சிறு சிறு வேலையில் கூட ஒருவர் மாற்றி ஒருவர், சிறப்பாக காதலை இன்னும் இன்னும் ரசித்து வாழ்ந்து கொண்டு இருந்தார்கள். இவர்களுக்கு காவியா என்று ஒரு பெண்குழந்தையும்... கவின், கவிதா அக்கா மகன், அக்கா மகள் என்று பாராமல் சிறப்பாக சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்கள், வேறுபாடு காட்டாமல். காவியன், கவிதாக்கு சிறுவயதிலே இருந்து இந்த விஷயம் தெரியும், ஆனந்தன் சொல்லித்தான் வளர்த்தான், அவர்கள் பெத்தவங்கள நினைக்க முழு உரிமை இருக்கு, எந்த காரணத்துக்கும் நம்ம மறக்க விட கூடாது என்று ஆனந்தன் சொல்லும் போது.
செல்வி அதை ஏற்றுக்கொள்ளவில்லை முதலில், ஆனந்தன் சொல்லி புரியவைத்த பிறகுதான் செல்வி அடங்கினாள்.
ஆனந்தன் சொன்னதுமட்டும் இல்லாம, காவியா, கவிதா அப்பா அம்மா பர்த்டே, வெட்டிங்டேனு ஒரு ஒரு நல்ல நாள் கொண்டாட வைத்தார்கள், காவியா இவர்கள் மூவர் மனதிலும் ரெண்டு அப்பா அம்மா என்று ஆனந்தன் சிறப்பாக பதிய வைத்தான்.
ஆனந்தனின் எண்ணத்தை, அவனது பக்குவத்தை நினைத்து செல்விக்கு இன்னும் காதல் பெருகியது.
“யாராவது இங்க ஆனந்தன்னு ஒருத்தர் இருந்தாங்க பாத்திங்களா” என்று செல்வி ஆனந்தனை கலாய்க்க.
“ஆமா பொறுப்பா இருப்பாருப்பா செல்வினு ஒருத்தி என்ன இப்படி பலமா மாத்திட்டா” என்று ஆனந்தன் சலித்து கொள்ள, செல்வியிடம் நான்கு கொட்டு வாங்கிக்கொண்டு உட்காந்து இருந்தான்.
செல்விக்கு எப்போதும் கவின்தான், ஒட்டி உறவாடினான்... எப்போ பாரு அம்மா பிள்ள, மேல இருந்து குதிக்க சொன்னா கூட குதிப்பான், செல்வி மீது எல்லை இல்லாத பாசம், அவன் இங்கு வரும்போது ஓரளவுக்கு விவரம் தெரிந்த வயது, அப்போதே புரிந்து கொள்ளும் பக்குவமும் கவினுக்கு இருந்தது.
கவிதா, காவியா ஆனந்தன் செல்லம் எப்போ பாரு அவனது தோளில் ஊஞ்சல் ஆடிக்கொண்டே திரிவார்கள். செல்வி சொல்லி சொல்லி சலித்து விட்டாள், “எருமைங்களா இரங்குங்கடி என் புருசனுக்கு வலிக்கும்” என்று செல்வி பார்க்கும் போது எல்லாம் திட்ட.
“3 குழந்தைகளும், அப்பா அம்மாக்கு ஓவர் லவ்வு என்று ஒரு சேர கத்த,”.
“இதுங்கள பெத்ததுக்கு நான் சும்மா இருந்து இருக்கலாம்” என்று செல்வி அழுத்துக்கொள்ள .
“நாங்க கிளம்பிட்டோம் பா ஜோடி புறாவை பிரிக்க விரும்பல, பிரிச்சாலும் பாவம் எங்களுக்கு எதுக்கு” என்று சொல்லிவிட்டு கவின் தங்கை இருவரையும் இழுத்துக்கொண்டு கிளம்ப.
“செல்வி, கவின் எவ்ளோ பொறுப்பா இருக்கான்ல” என்று ஆனந்தன் மெச்சலோடு பார்க்க.
“அப்படி என்னதான் கிழிச்சான் அவன் என்று” செல்வி கேட்க .
“அம்மா அப்பாக்கு இடைஞ்சலா இருக்க கூடாதுனு தங்கச்சிங்களாம் பொறுப்பா கூட்டிட்டு போறான் பாரு” என்று போற கவினை பார்த்து சொல்ல.
“குழந்தை இல்லாத இடத்துல, கிழவன் துள்ளி......” என்று மண்டைல நாலு கொட்டு விட்டு சமைக்க கிளம்பினாள் செல்வி.
கவின், தீவீரமாக போலீஸ்க்கு படிச்சி முடிச்சிட்டு, நாளை அவனுக்கு ஜாயிண்ட் செய்ய லெட்டர் வந்து விட்டது.
தாராக்கு எப்போதும் கவின் மேல இருக்கனும்... சட்டம் படித்து விட்டு, புகழ் பெற்ற ஒரு லாயரிடம் அசிஸ்டன்டா இருக்கா.
செல்வி ஆனந்தனுக்கு கவின் மீது பெருமை ஒரு விஷயத்தை தவிர.
தாராவிற்கும் இவனுக்கும் ஒரு பொருத்தம் கூட இல்லை, அப்படி இருக்க அப்போ இரு குடும்பத்துக்கும் இவர்கள் இருவரும் இணைய சிறுவயதில் இருந்து ஆசை, அதை ஒருமுறை பேச்சிவாக்கில் அவர்கள் இருவரும் காலேஜ் முடிக்கும் போது வீட்ல இருக்கவங்க சொல்ல...
இருவரும் சண்டை பிடிக்க ஆரம்பிச்சி ஒரு நாள் முழுவதும் சண்டை... கவின் இப்படி பேசுவான் என்று ஆனந்தன், செல்விக்கும் மிகுந்த அதிர்ச்சி.. தாராவை கண்டபடி திட்டிட்டான். அவ மட்டும் சும்மாவா, பதிலுக்கு பதில் பேசி வீடு போர்க்களம் ஆனது.
தாராவை பற்றி தெரியும், பிடிக்கலயா.. பிடிக்கல… பிடிச்சி இருந்தா உயிரையும் கொடுப்பா... ஒரு சண்டையும் இல்ல எதுக்கு இந்த ரெண்டு சண்டை கோழியும் சிலிப்பிட்டு திரியுதுனு ஒன்னும் புரியல நம்ம பெரியவங்களுக்கு.
கீழ் வீட்டில் இருக்கும் அர்ஜுன், சாரா ஒரு பக்கம். அர்ஜுன் சாராவை சரோஜா சரோஜானு வார்த்தைக்கு வார்த்தை கூப்பிட கடுப்பான சாரா.
“அர்ஜுன் அடி வேணுமா?” என்று சரோஜா அதாங்க சாரா கத்திக்கொண்டு இருந்தாள்.
“சரோஜா கூப்பிடாதன்னு எத்தனை முறை சொல்றது” என்று சாரா ஆக்ரோசமாக சுட்டுக்கொண்டு இருக்கும் தோசை கரண்டியை அர்ஜுனை அடிக்க நீட்ட, அதை தடுத்து, கைகளில் நல்ல வாங்கி கட்டிக்கொண்டான். அந்த தோசை கரண்டி பாரபட்சம் பார்க்காமல் நன்கு பதம் பார்த்தது அர்ஜுன் கையை.
சாரா கத்தி ஆர்ப்பாட்டம் செய்துகொண்டு இருக்க, “மாமா சாரி, மாமா வலிக்குதா” என்று சாராவை சமாதான படுத்த அர்ஜுன் பெரும்பாடு பட்டுவிட்டான்., இதும் பாத்தாதுன்னு...
ரித்திகா, ஆதி பதறிக்கொண்டு வர மூவரும் சேர்ந்து, பாசமழை... ஒருத்தியவே சமாதானம் படுத்த முடில. ஆதி ரித்திகாவை அதட்டிவிட்டு, சாராவை முறைத்துக்கொண்டு இருந்தான் அர்ஜுன்.
‘இவள இப்படியே விட்டா சரி பட்டு வரமாட்டா', அறைக்கு கூட்டிட்டு போனான். கொஞ்சி கெஞ்சி சமாதானம் படுத்தி, ஒரு ஒரு செயலையும் அர்ஜுன் சாராவும் மொத்த லவ்வும் இன்னும் இன்னும் ஒருவர் மாத்தி ஒருவர் குடுத்துக்கொண்டு இருந்தார்கள்.
ரித்தி, ஆதி அடிதடிதான் இன்னைக்கும் ஆனா ஒரு வித்யாசம் நாலு சுவருக்குள் அடங்கிடும் அந்த அடிதடி எல்லாம். தாரா மட்டும் நேரம் கிடைக்கும் போது எல்லாம் சிறு பிள்ளை தனமாக அர்ஜுன் ஆதியை சிறப்பாக வச்சி செய்வாள்.... அவளது முதல் உயிர் உள்ள பொம்மையாக விளையாடியது, எப்படி மறப்பாள்.
அவளுக்கு தனி அரை ஒதுக்கி குடுத்தாலும், ஆதி அர்ஜுன், எந்த ரூம்க்கு உள்ள போக முடியுதோ அங்கு சென்று ஜோடிகளுக்கு இடையிலே படுத்து விடுவாள்.
தண்ணீக்குடிக்க வெளியே தாரா வரவும் அர்ஜுனை பார்க்கவும் சரியாக இருக்க, அர்ஜுனிடம் பேசிக்கொண்டே அர்ஜுன் சாரா இடையிலே படுக்க.
அர்ஜுன் சாராவை பார்த்து தலையை சொரிய, சாரா அர்ஜுனை நக்கலாக பார்த்து கேலி செய்ய.... “லாயர் அம்மாக்கு சுத்தியும் கண்ணு..” என்று அர்ஜுன் சொல்ல.
“அப்பா நான் வேணும்னா கிளம்ப வா” என்று இருவரையும் பார்த்து சிரிக்க,
“நல்லாதான் வேலை செய்து கண்ணு லாயர் அம்மாக்கு” என்று துடங்கி அர்ஜுன் சாராவிடம் மாத்தி மாத்தி பேசி கொண்டே. அர்ஜுன் மார்பின் மீது படுத்துக்கொண்டு... துடிப்பின் ரிதம் கேட்டுக்கொண்டே, தூங்கி போனாள். சாரா அவள் தலையை தடவி விட்டு...
“நம்ம தாரா எவ்ளோ பெரியவளா ஆயிட்டாளங்க... கல்யாண வயசு வந்துடுச்சி அதுக்குள்ள”.
“ஹ்ம்ம், நேத்துதான் பொறந்தா, என் கைல வாங்கினது போல இருக்கு”.
இப்போதும் தாராதான் அர்ஜுன் சாராக்கு முதல் குழந்தை, கண்ணன் கிருஷ்ணன் எப்போ பாரு...
“தாரா நீ ஏதோ ராணி மாதிரி இந்த வீட்டை ஆட்டி வைக்கற, இரு மாமா வந்து உன்ன அடக்குவார்” மாமா என்று இருவர் சொன்னதை கேட்டு தாராவிற்கு திடீர் என்று அவன் நினைவு வர... தாரா ஒரு நொடி பதறி விட்டாள். ‘நான் எதுக்கு அவன அங்க வச்சி பாக்குறேன்’ என்று யோசித்துக்கொண்டே தாரா படுத்து விட்டாள் .
கவின் இப்போதுதான் அவனது போலீஸ் ட்ரைனிங் முடித்துவிட்டு, தலைமை காவல் இடத்தில் நியமித்தார்கள்.
அவனை வரவேற்க வீடே திருவிழா ஆனது.
மீரா ஜாலியா கோவிலுக்கு குளம்னு சுத்திட்டு இன்னும் ஒரு வாரத்துல வராங்க... வரும்போதே பெரிய ஷாக்கிங் நியூஸ் ஓட வராங்க மீரா.