உயிர் - 1
"அன்பே நான் உயிர் வாழ
ஓர் இடம் வேண்டும்..!
உந்தன் இதயத்தில் இடம் தருவாயா ?"என்ன ஒரு அழகான வரிகள் மக்களே
அழகான கார்கால பொழுது வெளியில மழை கொட்டிதீர்த்தாலும் மனசுக்குள்ள என்னவோ இந்த காதல் தான் பெருக்கெடுத்து ஓடுது இளையராஜாவுடைய பாடல்கள் தான் எல்லோருடைய மனசுலேயும் ஒலிச்சுட்டே இருக்கும். எப்படியோ காதல் பாட்டை நீங்க போடுங்க அப்படின்னாலும் இதோ வரிசை கட்டி பாட்டு நிற்குது இந்த மழையில எங்கடா வேலைக்கு போறது ஸ்கூலுக்கு போறதுன்னு சலிப்போடு கேட்டுக்கிட்டு இருக்கிற மக்களே எனக்கு புரியிது!
என்ன பண்ண நானும் ? இன்னைக்கு சண்டேவா இருந்து இருக்க கூடாதா..? மழையை ரசிச்சுக்கிட்டே காபி குடிச்சு இருக்க கூடாதா? இப்படின்னு எனக்குள்ளேயும ஏக்கங்கள் பல இருந்தாலும்.. இதோ உங்க எல்லோரையும் காதல் மழையில நனைய வைக்க நான் வந்துட்டேன் உங்க முன்னாடி அடுத்த பாடல் உங்களுக்காக மட்டும்!"என் இனியபொன்நிலவே!
என் நினைவில் உன் கனவாவே.. நினைவிலே புது சுகம் தரதந்திடா..!"
ஓர் கை சத்தத்தை குறைந்தது எப்எம் என்ற உலகத்தில் இருந்து நிஜ உலகத்திற்குள் நுழைந்தாள்.மெதுவாக போர்வை விலகியது ஓர் கை, மழையின் சாரலின் தூரல்… போர்வை இன்னும் இறுக்கம் கொள்ள தான் செய்தது அவளை..!ஆனால் மேலும் போர்வையை இழுத்து வெளியே தள்ளியது இரு கைகள்..
“அண்ணி ப்ளீஸ்! இரண்டு நிமிஷம் !" என்று சலிப்பாக கூறினாள் அவள்..
"நேரமாகிடுச்சு எழுந்திரி வேலைக்கு போகனும் கயல் குட்டியை ஸ்கூல்ல விடனும் எழுந்திரிங்க” என்று கயலை எழுப்ப முயன்றவள்.
கயல் குட்டி அழகாய் அவளை விட சோம்பேறியாக இருந்தாள்."மம்மு..! ப்ளீஸ் அத்தை எழுந்திரிச்சா தான் நானும் எழுந்திரிப்பேன்..! என்று குட்டிபிஞ்சின் கைகள் அவளை இன்னும் இறுக்கமாக பற்றியது தூக்கத்தில் சினுங்கல்கள் கொண்டனர் இருவரும்.
தினமும் இருவரிடம் இந்த வார்த்தையை கேட்க தவறியது இல்லை நித்திலா !
BẠN ĐANG ĐỌC
உயிர் கொள்கிறேன் உன்னால் - Good Ending(முடிவுற்றது)
Viễn tưởngகாதலால் காதலை வெல்ல முடியுமா...? வென்றார்கள் இருவருமே ஒருவரை ஒருவர் அன்பால்... ஆதி ❤️சூர்யாவாக