சென்னை..!
'இந்த உலகத்தை ரசிச்சு ரசிச்சு வாழ்றவங்களுக்கும் இருக்கறாங்க அதே சமயம் வெறுப்பா வெறுத்து வாழ்றவங்களும் இருக்கத்தான் செய்யறாங்க ஆனா நான் இந்த இரண்டுக்கும் நடுவுல ..? அந்த சைடும் போக முடியாம இந்த சைடும் போக முடியாம நடுவுல இருந்து தவிச்சுட்டு இருக்கேன்..!'
நினைவுகள்அலையாய் தோன்ற ஒரு மணிநேர பயணத்தில் ஏர்போர்ட் வந்து இறங்கினான்.
"ஹாய் ஆதி ஸார்..!" என்று கம்பெனியின் ஒருங்கிணைப்பாளர் வசந்தன் கை உயர்த்தி அழைத்தார்.
"ஹாய் ஸார் எப்படி இருக்கீங்க..?" என்று அருகில் வந்தவர்."யா பைன் வசந்த் ஸார்..! எல்லாம் தயாரா இருக்கா" என்று கேட்டபடி.. தனது லக்கேஜை எடுத்தவன்.
"எல்லாம் தயார் ஆதி ஸார்.. நீங்க வருவீங்க ன்னு தான் எல்லோரும் வெயிட் பண்றாங்க.."
"ரொம்ப தேங்ஸ் ஸார்" என்று ஆதி கூறிகொண்டே ஏர்போர்ட்டை விட்டு வெளியே வர..
"ஸார் நீங்க எவ்வளவு பெரிய ஆளு.. ! என்கிட்ட போய் இப்படி சொல்லறீங்க நீங்க சொன்னா எது வேணாலும் நடக்கும் உங்க பவர் உங்களுக்கே தெரியல ஆதி ஸார் அதான் பிரச்சனையே.." என்று வசந்த் ஆதியை உச்சிகுளிர வைக்க நினைத்தவர்.
இதற்கு எல்லாம் மசியாதவன்.. "ஸார்.. நான் ரொம்ப சாதாரணமானவன்.. சரிங்களா.. வேலையை பார்க்கலாமா..?"
"பார்க்கலாம் ஸார் இந்த சிம்பிள்சிட்டி தான்.." என்று வசந் மேலும் தூபமிட..
"வேண்டாம் ஸார் ப்ளீஸ்" என்று ஆதி அவரிடம் இருந்து விலகியே இருந்தான்.
மதியவேளை..
"சூர்யா சூர்யா” என்று கயல்குட்டி அழைத்த அழைப்பிலேயே..!' சூர்யா நன்றாக புரிந்துக்கொண்டாள். ‘ஏதோ பெரிய விஷயமாக தான் இருக்கும்..!' என்று.
"சொல்லுங்க கயல் மேடம்..! சாக்லேட் தானே வாங்கிட்டு வரேன் ஈவினிங்.." என்று லன்ஜின் நடுவே சூர்யா பதில் அளிக்க.
BẠN ĐANG ĐỌC
உயிர் கொள்கிறேன் உன்னால் - Good Ending(முடிவுற்றது)
Viễn tưởngகாதலால் காதலை வெல்ல முடியுமா...? வென்றார்கள் இருவருமே ஒருவரை ஒருவர் அன்பால்... ஆதி ❤️சூர்யாவாக