உயிர் -25

373 15 0
                                    

வேகம் என்றால் அது அவளால் மட்டுமே முடியும்..! காரின் வேகத்தை குறைக்காமல் காரில் பறந்து வந்தவள். காரின் முன் அவன் நின்று இருக்க.. அவன் மீது மோத வந்தவள் சரியாக அவனிற்கு முன் நிறுத்தினாள்.
"ஹேய் .. ரீனா என்ன இது புது விளையாட்டு..?" என்று அவன் கத்த..
காரில் இருந்து மார்டன் உடையில் வெளியே வந்தாள் அவள்.. ஜீன்சும் சகிதமாக அவள் நின்ற தோரணையில் அவன் மயக்கம் கொள்ள தான் செய்தான்..
"பேப்..உனக்கே தெரியும்ல..? அப்புறம் ஏன்‌காருக்கு முன்னாடி வந்து நின்ன ..?"
"என் ரீனா என்‌மேல மோத மாட்டான்னு நம்பிக்கை அதான் வந்து நின்னேன்..!"
"ஓகே கூல்.. பேப்.. என்ன விஷயம் என்னை தேடி வந்து இருக்க" என்று ரீனா அவனை காரில் ஏற்றினாள்.
"ரீனா நான் இந்தியா போறேன்..?"
"போயிட்டு வா..? அதுக்கு எதுக்கு என்கிட்ட பர்மிஸன் கேட்கற..?"
"ரீனா விளையாட்டை எல்லாம் ஓரமா வச்சுட்டு நான் சொல்லறதை கேளு முதல்ல காரை ஸ்டாப் பண்ணு.. நான் பேசனும்‌"  என்று அவன் வார்த்தையில் சற்று கோபம் தெரிய..
அதிவேகமாக ஓட்டிய காரை சட்டென வேகத்தை குறைத்து நயகரா நதி கரை ஒரத்தில் நிறுத்தினாள்.
"ராம் ஜஸ்ட் ரிலாக்ஸ் இந்தியா தானே போற போயிட்டு வா..?" என்று ரீனா ‌புன்னகை பூக்க..
"நான் போனா வர முடியுமான்னு தெரியல ரீனா..? டாடிக்கு என்ன ஆகும்.. என்ன கண்டிஷன்ல இருக்காரு எதுவும் தெரியல இந்த நேரத்தில் நான் தான் பிஸினஸ் அது இதுன்னு பார்த்துக்கனும்..!"
"சோ வாட் இது எல்லாம் உன் கடமை தானே அப்புறம்‌ என்ன..?" என்று‌ ரீனா ‌கேட்க..
"நான் இல்லாம நீ இருந்திடுவியா..!" என்று ராம் கேட்ட அந்த வார்த்தையில் சற்று நிலைகுலைந்தவள்.
சிறு அமைதிக்கு பின் தொடர்ந்தாள்.
"என்ன ஸாருக்கு தீடீர்ன்னு என் நியாபகம்..?" என்று ரீனா முடிகற்றை ஒதுக்கியப்படி வேறு எங்கோ பார்க்க..
"ரீனா .."என்று ராம் அவளை அழைக்கவும்..
"நீ போயிட்டு வா ராம்.. ! நான்‌ இருப்பேன்‌" என்று ரீனா ராம்மை காணாதவாறு கூற..
"நீ என் கூட வா போகலாம்" என்று ரீனாவின் கையைப்பிடித்தான்.
ராமின் முகத்தை பார்த்தவள்..
"நான்‌ உன்னை தேடி தேடி வந்தப்ப போ போ ன்னு விரட்டின இன்னைக்கு என்னவோ என் மேல இவ்வளவு அக்கறையா பேசற.. ஓஓ உன்னை விட்டு நான் விலகி இருந்தா தான் என் நியாபகம் வருமா என்ன..?"
"ரீனா..‌! ஐ லவ் யூ" என்று ராம் அழுத்தம் திருத்தமாக கூறினான்.
"நான் உனக்கு செட்‌ ஆக மாட்டேன் டா..!".
"ஐ லவ் யூ.. ரீனா.."
"உங்க ம்ம்மி ஒத்துக்க மாட்டாங்க ராம்.. உங்க ஸ்டேட்டஸ் வேற எங்க ஸ்டேட்டஸ் வேற" என்று ரீனா கூற..
"ஐ லவ் யூ" என்று ராம் வார்த்தையில் உறுதியாய் இருந்தான்.
"போடா நான்  விரும்பி உன்னை தேடி வந்தப்ப எல்லாம் விரட்டி விரட்டி அனுப்பி விட்டு சரி இனி நம்ப லைப்பை பார்க்கலான்னு நான்‌ரெடியாகி இருக்கப்ப வந்து உன் காதலை சொல்லற..!" என்று ரீனா வருத்தமானாள்.
"எனக்கு என் பழைய ‌ரீனா‌ வேணும்..என்னையே சுத்தி சுத்தி வந்தவ என்னையே உலகமுன்னு நினைச்சு சுத்தி சுத்தி வந்த என் ‌ரீனா எனக்கு வேணும்" என்று ரீனாவின் விரல்களோடு விரல் கோர்த்தவன்..
அதற்கு மேல் ரீனாவினால் முடியவில்லை ராம்மை அணைத்தவள்.." நான் எப்பவும் உன் ரீனா தான்டா உன்னை உயிருக்கு உயிரா நேசிச்ச அதே ரீனா நீ தானே சொன்ன.. என்‌ஸ்டேட்டஸ் வேற உன்‌ஸ்டேட்டஸ் வேற அப்படின்னு. ம்ம்மி ஒத்துக்க மாட்டாங்க அது இதுன்னு.." என்று ரீனா பேசிக்கொண்டே செல்ல அதற்கு மேல் ரீனாவை பேசவிடாமல் அவள் இதழோடு இதழ் பதித்தான்.
இரண்டு நிமிடம் நீடித்த அவர்களது அன்பு..
"அவனது யுத்தங்கள்
அனைத்தும்
முத்தத்திலேயே
முடித்துவிடுகிறது..!"
"ஐயம் ஸாரி.. ரீனா உன்‌ அன்பை புரிஞ்சுக்காம நான் இப்படி பண்ணிட்டேன்‌ என்னை மன்னிப்பியா..!" என்று ரீனாவின் காதோரம் காதல் போதையின் முனகலில் கூற..
"மன்னிக்க மாட்டேன் டா..!"
"ஏன்டி " என்று ரீனாவை விலக்கிவிட்டவன்..
ரீனாவோ ராம்மை இழுத்து தன்னோடு அணைத்துக் கொண்டாள்.
"எப்பவும் இப்படியே என்னை வச்சுக்கோடா அப்ப தான் மன்னிப்பேன்" என்று‌ அவர்களது காதல் பயணம் ஆரம்பமாகியது.
"ரீனா" என்று அவளது கைவிரல்களோடு விளையாடிவன்..
"நீ என் கூட வந்திடுடி..!"
"ஹான் ..! இது நல்ல கதையா இருக்கு ஆசை ஆசையா படிக்க ஆசைப்பட்டு தான் கனடாவுக்கே வந்தேன் அதை விட்டு வர சொல்லறியா..!"
"அப்ப என் மேல உனக்கு ஆசை இல்லையா..!"
"ஆசை இல்லை பேராசை யா இருக்கு டா..! ஆனா‌ இன்னும் கொஞ்ச நாள்‌ என்னுடைய பிராஜெக்ட் வொர்க் எல்லாம் முடிஞ்சுடும் நீயும் உங்க டாடியை போய் பாரு உன் பேமிலிக்கு நீ ரொம்ப இம்பார்டன்ட் டா.. எப்போ கிளம்பற..!"
"நைட்‌ "என்று சோகமாக ராம் கூற..
"நாம என்ன டா ரொம்ப பிரிஞ்சு இருக்க போறது இல்லை ..! சரியா ஒரு பத்து நாள் அப்புறம் திரும்பி வந்திடுவேல..!" என்று ரீனா கூற
"எப்படின்னு தெரியல ரீனா..?"
"சரி‌ என்‌ ராம்மை தேடி நானே வரேன்..!" என்று ரீனா கூற
"வருவியா..!"
"வருவேன் நம்புடா..!"
"நம்புறேன் டி நீ வருவேன்னு..!"
"அந்த நம்பிக்கை போதும் டா என் வாழ்நாள் முழுவதும் நான் வாழ்றதுக்கு எங்க என் அன்பை நீ புரிஞ்சுக்காம‌ போயிடுவியோன்னு‌ பயமா இருந்தேன்.. செத்திடலாம் போல தோணுச்சு.. ஆனா..!"
"வேண்டாம் ரீனா நான் இருக்கேன்ல உன் அன்பு மொத்ததையும் எனக்கு மட்டுமே பரிசளிக்கனும்.."
"கண்டிப்பா ராம் உனக்கு மட்டும்தான் என்‌ மொத்த அன்பும்" என்று அவனது நெற்றியில் முத்தமிட்டவள்.. "சரி கிளம்பலாமா..?"
"போகனும்மா‌ இப்படியே இருந்திட கூடாதா..!"
"எப்படி இப்படியே ‌என்னை பார்த்து பார்த்து ரசிச்சுட்டே இருந்தா எப்படி பிளைட் க்கு நேரமாகிடும் ரெடியாகனும்ல வா உன் கூட சேர்ந்து எல்லாத்தையும் நான் பேக் பண்றேன்‌..!” என்று காரை அதிவேகமாக ஓட்டிசென்றாள்‌ ரீனா.
ஆதியின் நினைவிலோ சூர்யா வந்து சென்று கொண்டு இருந்தாள் சஞ்சய் வேறு மூன்று‌ முறை அழைத்திருந்தான்.
தொடுதிரையில் தெரிந்த அவளது முகத்தை சோகமாக பார்த்துக் கொண்டு இருந்தவனுக்கு சூர்யாவே அழைத்தாள் காலில்..,.
ஆச்சரியம்‌ தாங்காதவன்.. மொபைலை மறுபடியும் உற்று பார்த்தவன்.
சூர்யாவே தான் அழைத்திருக்கிறாள். ‌இரண்டு முறை.. மறுமுறை வரும்போது கைகள் நடுங்க வேகமாக எடுத்தவன்.
அமைதி தான் நிலவியது மறுமுனையில் அமைதி
இரண்டு நிமிடம் மெனளமே ..
ஆதியே தொடர்ந்தான். "இன்னும் எவ்வளவு நேரம் அமைதியா இருக்க போறீங்க ..?" என்று ஆதி கேட்க..
"ம்ம்ம் ‌" என்று மட்டுமே சூர்யா பதில் அளித்தாள்.
"ம்ம்ம் ..! சரி நீ சாப்பிட்டியா..?"
அதற்கு " ம்ம்ம்.!" என்று பதில் வந்தது சூர்யாவிடம் இருந்து.
"சரி நான்‌ போனை வைக்கிறேன்..!" என்று ஆதிபோனை வைக்க..
"இல்லை வேண்டாம் இன்னும் கொஞ்ச நேரம்‌..!" என்று சூர்யா‌ கெஞ்ச..
'தெரியும்டி உன் மனசு முழுக்க நான் நிறைஞ்சு  இருக்கேன்னு..' என்று ஆதியின் மனம்‌ களிப்பில் தவழ்ந்தாலும்.
மீண்டும்‌அமைதி தான் இருவரிடமும்..
வெகு நேரம்‌ கழித்து.."சூர்யாவே சாப்டீங்களா ‌நீங்க..?” என்று‌ கேட்க..
"ம்ம்ம்..!" என்று‌ஆதி பதிலுரைக்க
"என்ன ‌ம்ம்ம்..!"
"நீங்க ம்ம்ம‌ போடலாம்.. நான்‌ போட‌கூடாதா..!"
"கூடாது‌..‌! "
"சரி ‌சாப்பிட்டேன்..! ‌என்ன‌அதிசயமா இருக்கு மேடம்.. கால் எல்லாம்‌ பண்ணி இருக்கீங்க..!"
"சரி நான் போனை ‌வைக்கிறேன் என்று டப்‌..!" என போனை வைத்து விட்டாள் சூர்யா.
"அன்பே..‌!
ஆயிரம் மொழிகள்
நான் கற்று இருந்தாலும்
உனது மெளனத்தின் மொழியை மட்டும் ‌என்னால் புரிந்துக்கொள்ள இயலவில்லையே..!
ஆனால்
அந்த மெளனத்தில் கூட நீ
ஆயிரம் அழகடி..!"
"அம்மு நீ இருக்கியே..‌கொஞ்சம் ‌காதலை என் மேல காட்டுனா தான் என்ன..? நான்‌பாவம் இல்லையா..?"  என்று ஆதியின் மனதில் தோன்ற..
'ஆதி நீ இல்லாம‌ என்னால ஒருநாளும் இனி இருக்க முடியாது இந்த மெளனமே ஆயிரம் மொழி பேசும் உன் கூட.. புரிஞ்சுதாடா.. உன்கிட்ட‌ மனசுவிட்டு பேசனும்..' என்று சூர்யாவின் மனதிலோ ஆதியை பற்றிய எண்ணங்களே நிறைந்திருந்தது.
இருவருமே அவர் அவர் காதலில் முழ்கி இருக்க..! அவர்கள் வாழ்வில் ஒரு‌புதிய புயல் வீச காத்திருந்தது.
இரவு முழுவதும் தனது தந்தையின் அருகிலேயே இருந்தவன்.. காலையில் பொழுதில் சற்று கண்களை அயர்ந்தவன்.. தீடீர் என்று ஆதியின் கைகள் இறுக்கத்தை உணர்ந்தான் அவன் அப்பாவின் கைகள் அவன் கையை இறுக்கப்பற்றியது.
அவரை பார்த்ததும் மூச்சு இழுப்பதற்கே போராடிக்கொண்டு இருந்தார். அவனை அறியாமலேயே "அப்பா"  என்று கதறினான் ஆதி..
அவரது நெஞ்சை பிடித்தவன் இதயத்துடிப்பு இருந்தது.. ஆதியின் கைகளை இறுக்கப்பற்றியவர் கையை விடவே இல்லை..‌ கண்கள் சுழன்றுக்கொண்டு மேலும் கீழும் செல்ல..‌உடல்கள் அவரது கட்டுபாட்டை இழந்து ஆதியோ "யாராவது வாங்களேன்" என்று கத்தினான்..
வேலையாட்கள்‌ ஓடி வர.. அவர்கள் உதவியுடன் ஹாஸ்பிட்டலில் சேர்த்தான்.
இரவுநேரம் தொடர் சிகிச்சைகள் நடந்த வண்ணம் இருந்தது.
அகிலாண்டேஸ்வரி பிஸினஸ் விஷயமாக வெளியில் சென்று இருக்க.. ஆதியே கூட இருந்து கவனித்துக் கொண்டு இருந்தான். இரவு பகல் பாராது என்று ஒருநாள் முழுவதும் ஹாஸ்பிட்டலிலேயே கிடந்தான்.
'அம்மு உன்னை இப்போ பார்க்கனும் உன்கிட்ட கதறி அழனுமுன்னு தோணுது டி நான் அனாதையாகிடுவேனோன்னு தோணுது' என்று மனம் முழுவதும் சூர்யாவின் நினைவினால் நிறைந்திருந்தது.
கண்களை துடைத்தவன் ஐ.சி.யு வழியே தெரிந்த தனது அப்பாவின் முகத்தை பார்த்தான்.
டாக்டர் வெளியே வர
"மேடம் இல்லையா ..? " என்று டாக்டர் விசாரிக்க
கண்களை துடைத்தவன் " வருவாங்க போன் பண்ணி இருக்கேன் இப்போ அவருக்கு ஒண்ணுமில்லையே..!" என்று ஆதி கேட்க
"அது தான் பிரச்சனை மிஸ்டர் ஆதி..!" என்று டாக்டர் கூற..
"அவரை காப்பாத்தா முடியுமான்னு தெரியல..? ஒருநாள் புல்லா அப்ஷர்வேஷன் வச்சு இருந்து பார்க்கிறோம் ஆனா எதுவும் இப்போ சொல்லற நிலையில நாங்க இல்லை.."  என்று டாக்டர்கள் சென்றுவிட ஆதி நிலை குலைந்து போனான்.
வீட்டில் இருந்து கணேஷ் பதறியப்படி வர..!" ஐயா இப்போ பெரிய ஐயாவுக்கு எப்படி இருக்கு விஷயம் கேள்விபட்டு இப்போ தான்வரேன்..!"
"நீங்களாச்சும் வந்தீங்களே ஆனா..!"  என்று வெறுப்பாய் ஆதி மாற..
"ஐயா அவங்களை விடுங்க..! ஆனா நீங்க இருக்கீங்களே ஐயாவுக்கு அதுவே போதும் டாக்டர் என்ன சொன்னாங்க ஐயா" என்று அவன் கேட்க..
"என்ன சொல்லுங்க வாங்க முயற்சி பண்றோன்னு தான் அண்ணா.." என்று ஆதி மனம்வெறுப்பின் உச்சியில் இருந்தது மனம் தாழாமையினால் உடல் முழுவதும் சோர்ந்து போனான்.
"ஐயா நைட்டுல இருந்து ஒண்ணும் சாப்பிடல..! ஏதாவது சாப்பிட்டு வாங்க..!"  என்று கணேஷ் கூற..
"எதுவுமே தோணல அண்ணா எதுக்காக எனக்கு போன் பண்ணீங்க நான் வேண்டான்னு தானே போனேன் இப்போ நெருங்கி வரப்ப இந்த வலிகளை என்னால தாங்கிக்க முடியல கணேஷ் அண்ணா.." என்று உடைந்தான் ஆதி.
"தம்பி முதல்ல நீங்க தைரியமா இருக்கனும்..அப்போ தான்தம்பி பெரியவர்  சீக்கிரம் எழுந்து வருவாரு..! நான் டீ வாங்கி வரட்டுமா தம்பி.."
"இல்லை அண்ணா நானே போறேன்..!" என்று ஆதி வராண்டாவில் நடந்தவன் எதிரே சூர்யா உள்ளே வருவதை பார்த்தவன். ரிஷப்ஷனில் உட்கார்ந்துக் கொண்டான் தெரியாத வண்ணம்..
சூர்யா ரிஷப்ஷனில் அனுவைபற்றி விசாரிக்க..! அறையை நோக்கி சென்றாள்.
ஆதியோ 'சூர்யா எதற்காக இங்கே வந்திருக்கிறாள்' என்று தெரியாமல் நினைத்தவன் அவள் பின்னேசென்றான்.
அறையில் அனு இருந்தாள் அவளை பார்த்த பிறகு தான் ஆதிக்கு நிம்மதியாயிற்று அங்கிருந்து உடனே அகல நினைத்தவன்.
"ஆதி " என்று சூர்யா அழைக்க ஒர் நிமிடம் கூட நில்லாது அந்த வராண்டாவின் கடைசி வரை சென்று மறைந்தான்.
'என்னை மன்னிச்சுடு சூர்யா இப்போ நான் இருக்கிற நிலைமையில நீ என்னை பார்க்கவே கூடாது நீ உடைச்சுபோனா என்னால தாங்கவே முடியாது பொறு இன்னும் மூன்னு நாள் நானே வந்திடறேன்' என்று ஆதி சூர்யா சென்று விட்டாளா என்று சுவரின் சாய்ந்த வண்ணம் பார்த்தவன் நிம்மதி பெருமூச்சோடு ஆதி நகர்ந்தான்.

உயிர் கொள்கிறேன் உன்னால் - Good Ending(முடிவுற்றது)Dove le storie prendono vita. Scoprilo ora