உயிர் -26

387 16 0
                                    

"என்கிட்ட இருந்து எங்க தப்பிச்சு போக நினைக்கிற"  என்று ஆதியின் பின்னால் சூர்யா கை கட்டியப்படி நின்று இருந்தாள்.
அவளை பார்த்ததும் அழுகை எங்கிருந்து வந்ததோ தெரியவில்லை.. ! கண்கள் குளமாகியது ஆதிக்கு.
"என்னை விட்டு போக உனக்கு எப்படிடா மனசு வந்துச்சு சாருக்கு ஏதோ பெரிய பிரச்சனை தீர்த்துடுவேன்னு சொன்னீங்க சென்னையில என்னை விட்டு தள்ளி இருக்கிறது தான் பிரச்சனையா ..!" என்று சூர்யா கேள்விகளை அடுக்கிக் கொண்டே போக..
"அம்மு" என்று‌ அதற்கு மேல் ஆதியினால் அடக்கமுடியவில்லை சூர்யாவை இறுக்க தழுவினான்.
ஆதியின் கண்களில் கண்ணீர் சூர்யாவையும் உலுக்க தான் செய்தது.
"ஆதி" என்று அவனை மேலும் இறுக்கினாள். "என்னடா ஆச்சு ஏன் இப்படி அழுவற..?" என்று சூர்யா மேலும் உடைந்தாள்.
ஆதி அவளது அணைப்பிலும் அருகாமையிலும் ஆறுதல் தேட ஆறுதலாய் சூர்யா துணை நின்றாள்.
"அழுகாதடா நான் இருக்கேன் என்ன நடந்திருந்தாலும் சரி..!" என்று சூர்யா கூற..
"ம்ம்ம்" என்று முனகலோடு ஆதி கூற..
"சாப்பிட்டியா இல்லையாடா இரண்டு நாள்ல நீ ஏன் இப்படி இளைச்சு போயிட்ட" என்று சூர்யா ஆதியை அழைத்துக் கொண்டு கேன்டின் சென்றாள்.
முகத்தை கழுவி விட்டு வந்தவன்.. சூர்யாவை பார்த்தவன் ஆதிக்கு ஏதோ புதியதாக தோன்றினாள். "என்ன ஆச்சு சூர்யா ஏன் அப்படி பார்க்கிற..?"
"இல்லை இதுவரைக்கும் உன்னை கொஞ்சம் ஹஸ்பெண்டாவும் நிறையா அம்மாவாகவும்  பார்த்த எனக்கு இப்போ முதல் தடவையா குழந்தையா தெரியற..?" சூர்யா கூற..
ஆதி தலையை குனிந்துக்கொண்டான் கொடுத்த ஆர்டர் வர..
"இட்லி யார் சொன்னது இரண்டு காபி மட்டும் கொண்டு வாங்க..!" என்று ஆதி கூற..
"இல்லை நீங்க வச்சுட்டு போங்க..!" என்று சூர்யா கூற..
பிளேட்டை ஆதியின் பக்கம் தள்ளி வைத்தாள் "சாப்பிடு பர்ஸ்ட்டு அப்புறம் எதுவானலும் சண்டை போடலாம் பேசலாம்..?" என்று சூர்யா கூற அமைதியாக உண்டு முடித்தான்.
"இப்போ சொல்லு உன்னுடைய முக்கியமான பிரச்சனை என்ன..?"
"அது வேண்டாம் சூர்யா ரொம்பவே வலிக்கும்..!" என்று ஆதி எழுந்தான்.
"வா உன்னை வீட்டுல விட்டு வரேன்.." என்று எழுந்தான்.
"ஏய் உட்காருடா..! " என்று  கோபமாக கூறியவள்.
ஆதி ஒரு நிமிடம்‌ தடுமாறினான்..முதல் முறையாக சூர்யாவின் உண்மையான கோபத்தை காண்கிறான். "சூர்யா அது வந்து..!" என்று ஆதியை கூறவிடாமல்..
"முதல்ல உட்காருடா என்ன நினைச்சுட்டு இருக்க..நீ..!
"நான்‌ யாரோ வா உனக்கு..? நீ ஏன் இங்க வந்த என்னை பாலோ பண்ணி வந்தியா..? இல்லை உனக்கு" என்று எழுந்து ஆதியின் நெற்றியையும் கழுத்தையும் தொட்டு பார்த்தவளின்  கையை தன்னோடு பற்றியவன் அவளது மெல்லிய கரங்களில் முத்தமிட்டவன்.
"என் அப்பா அம்மு" என்று ஒற்றை வார்த்தையை உதிர்க்க..
"ஆனா உனக்கு" என்று சூர்யா புரியாமல் விழிக்க..
அவனது அருகில் அமர்ந்தவள்" சொல்லுடா உன்சூர்யாக்கிட்ட சொல்ல மாட்டியா..?" என்று ஆதியின் கையை இறுக்கமாக பற்றினாள்.
"சாந்தலட்சுமி என் அம்மா அம்மு..அவங்களை ரொம்ப பிடிக்கும்..! சின்ன வயசுல இருந்தே அம்மா தான் என்‌ உலகம் அப்புறம்‌ தான்‌அப்பா..!"
"அம்மாவுக்கு ரொம்ப உடம்பு சரியில்லாம போக தனிமையில விடப்பட்டவன் நான்..! அம்மா தான் என் உலகமாக இருந்தாங்க எனக்கு..!
"ஒரு நாள் அம்மா இறந்து உடல் மட்டும் தான் வந்துச்சு அம்மு..! உயிர்‌ இல்லை மூச்சு இல்லை பேச்சு இல்லை பைத்தியமா இருந்தேன்."
"இரண்டு வருஷம்.. வீட்டுக்குள்ளே அடைஞ்சு அழுது தீர்த்தேன்.. ஆனா என் அம்மா அவங்க வரவே இல்லை அம்மு..!"
"நான் அழுதா என் அம்மா தாங்கவே மாட்டாங்க அழுகாதடா கண்ணா நான் இருக்கேன்னு கண்ணை துடைச்சு விடுவாங்க ஆனா நான்‌ ஒவ்வொரு தடவையும் அழுகறேன் ஆனா..! என் அம்மாவோ என் அப்பாவோ யாருமே வரல அம்மு.. !"
"அப்ப தான் முடிவு பண்ணேன் இந்த உலகத்தில யாரும் நிரந்தரம் இல்லைன்னு.. என்னை பார்த்துக்கிறதுக்கு தான் அகிலாண்டேஷ்வரிங்கிறவங்களை எங்க அப்பா  மேரேஜ் பண்ணிட்டு வந்தாரு.."
"ஆனா என் அம்மா விட்டு போன இடத்தை நிரம்ப முடியல யாராலேயும் அம்மு என் அம்மா உடைய நினைவுகள் எல்லாம் மெல்ல மெல்ல அந்த வீட்டுல இருந்து கரைச்சு போச்சு இல்லை மறைய வச்சாங்க அவங்க ..!"
"அம்மு அம்மா இல்லை அட்லீஸ்ட் அப்பாவாச்சும் இருப்பாருன்னு பார்த்தா அவருக்கு அடுத்த வாரிசு வரவும் என்னை மறந்து போனாரு இப்படி யாருமில்லாத வாழ்க்கை எதுக்கு அப்படின்னு வீட்டை விட்டு ஓடி வந்துட்டேன்.. ஒரு அனாதை ஆசிரமத்தில் சேர்ந்து வளர்ந்தேன்..!”
"ஆனா என் அப்பா என்னை கண்டுபிடிச்சு வந்திட்டாரு..? அப்போ என்னால வர முடியாதுன்னு சொன்னேன்..! "
"வாழ்க்கை மொத்தமும் இனி அந்த வீட்டுபக்கம் போக கூடாதுன்னு நினைச்சேன்..சஞ்சய் வந்தான் சூர்யா லைப்பே மாறி போச்சு கஷ்டத்தை எல்லாம் தூர தொலைச்சு  சந்தோஷமா வாழ ஆரம்பிச்சேன்.. படிப்பு எல்லாம் முடிஞ்சதும்.. என்னை தேடி மீண்டும் வந்தாரு..!"
"ஆனா .., நான் அவருடைய முகத்தை கூட பார்க்க விரும்பல பிஸினஸ் பண்றியா பணம்  எவ்வளவு வேணுமுன்னு தான் கேட்டாரு அம்மு..!"
"ஆனா எனக்கு பணம்‌ எதுவும் வேண்டாம் நீங்க மட்டும் தான் வேணுமுன்னு கத்திசொல்லனும் போல இருந்துச்சு அம்மு.." என்று கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது சூர்யாவிற்கு ஆதிக்கோ மூச்சு முட்டும் அளவிற்கு கண்ணீர் நிறைந்திருந்தது.
"ஆதி" என்று அதற்கு மேல் அவனை பேச விடவில்லை. "போதும் டா நீ பட்ட கஷ்டம் எல்லாம் இனி ஒரு‌ போதும் அந்த கஷ்டம் எல்லாம் வேண்டாம் இனி உன் சூர்யாவா நான் வாழ்வேன்டா.." என்று சூர்யா  கூற..
ஆதி புன்னைகைத்தான் வலியிலும்.. "நான் ரொம்ப ஆசை வைக்கிறவங்க எல்லாம் என் லைப்புல இருந்ததே இல்லை அம்மு..!"
"என்னடா சொல்லற அப்போ உனக்கு உன் அம்மு வேண்டாமா"  என்று கண்களை துடைத்தப்படி கூற..
ஆதி பதில் எதுவும் சொல்லாமல் எழுந்தான். "சூர்யா நீ வீட்டுக்கு கிளம்பு எதுவானாலும் அப்புறம் பேசிக்கலாம்" ஆதி‌கூற
"அப்பாவை பார்த்துட்டுபோறேன்..!"  என்று சூர்யா கேட்க..
"ம்ம்ம் ..!" என்று ஆதிமுன் செல்ல சூர்யா அவன் பின்னால் சென்றாள்.
ஐசியூவின் முன்.. ! அகிலாண்டேஷ்வரி கோபத்தோடு நின்றுக் கொண்டு இருந்தாள்.
ஆதி அறையினுள் செல்ல.. " ஏய்..!  உன்னை இங்க காவலுக்கு இருக்க சொன்னா எங்க டா போயிதொலைச்ச உன்னை நம்பி தானேவிட்டு போனேன்.." என்று அகிலாண்டேஷ்வரியின் கண்களில் நீர் பெருக்கெடுக்க..
சூர்யாவோ கோபமாய் அகிலாண்டேஷ்வரியை நெருங்க.."ம்ம்ம் நீ கிளம்பு " என்று ஆதி கோபமாய் முறைக்க சூர்யா பிடிவாதம் பிடித்தாள்.
ஆதி சூர்யாவின் கையைப்பிடித்து ரிஷப்ஷன் வரை வந்துவிட்டான்.."போ ன்னு சொல்லறேன்ல அம்மு நானே வரேன்.."  என்று கூறிவிட்டு ஆதி உள்ளே சென்றான்..
'ஏன் இப்படி நடந்துக்கிறான் ' என்று புரியாமல் நிற்க
'எவ்வளவு தைரியம் இருந்தா ஆதியவே திட்டு வாங்க' என்று சூர்யாவிற்கு சுள்ளென்று கோபம் வந்தது ஆதிக்காக பொறுத்துக்கொண்டாள்.
ஒருமணிநேரத்திற்கு பிறகு
வீட்டிற்கு வந்ததும் ஆதியிடம் இருந்து போன் வர எடுத்தவள்.." வீட்டுக்கு போயிட்டியா ..?" என்று ஆதி கேட்க..
"ம்ம்ம்" என்று மட்டும் பதில் வந்தது.
"ஐ லவ் யூ அம்மு" என்று ஆதி அவளிற்கு செல்லிலேயே  முத்தமிட..
"ம்ம்ம் ..!" என்று சூர்யா பதில் அளிக்க
"எப்பவும்‌ என்‌கூடவே இருப்பேல அம்மு..! " என்று ஆதி குரலிலேயே உடைந்தான்.
"நான் எப்பவும் உன் கூடவே இருப்பேன்.. நீயே என்னை வெறுத்தாலும் உன்னை விட்டு போக மாட்டேன் டா..! " என்று சூர்யா கூற
"என்னை விட்டு எங்கேயும் போக கூடாது..?" என்று ஆதி திரும்ப திரும்ப கேட்க
"உன்னை விட்டு எங்கேயும் போக மாட்டேன் டா நான் " என்று சூர்யா முடிப்பதற்குள்
"சூர்யா.. ஒரு‌நிமிஷம்..!" என்று ஆதி போனை வைக்க..
சூர்யாவிற்கு சங்கடமாய் தோன்றியது இரவு முழுவதும் தூங்காமல் இருந்தவள் தூங்கிபோனாள்.
ராம் பிளைட்டை விட்டு இறங்கிய உடன் நேராக ஹாஸ்பிட்டல் வந்து சேர்ந்தான்.
தன் அப்பாவை கண்டவுடன் துடித்து போனவன் தன் அம்மாவிற்கு ஆறுதலாய்‌ மாறினான். ஆதியை காண்பதை  தவிர்த்தான்.
ஆதியோ எதை பற்றியும்‌ கவலை கொள்ளவில்லை எதுவாயினும் இனி நடப்பதை ஏற்றுக்கொள்ள ‌மனதை பழக்கிக் கொண்டான்.
சூர்யாவிடம்‌ பேசிய‌ பிறகு ஏனோ மனதில் புதிய ‌நம்பிக்கை பிறந்திருந்தது.
"ராம் என்னடா டாடிக்கு ஒண்ணும்‌ ஆகாதுல..! " என்று அகிலாண்டேஷ்வரி அழுகையோடு‌ கேட்க.
"ம்ம்மி ..! எதுவும் ஆகாது டாடிக்கு அழாதீங்க " என்று ராம் சமாதானம்படுத்தினாலும்.
'இன்று இரவை கடந்து விட்டால் பரவாயில்லை அப்பாவின் உயிருக்கு ஆபத்து இல்லை' என்று ராம் நினைத்தான்.
டாக்டரின் முழுகவனிப்பில் இருந்தவர். கண்களை மெல்ல திறந்தவர்..! நர்ஸிடம் பேச முயன்றார்.ஆனால் அந்த நர்ஸ்சுக்கு எதுவும் புரியவில்லை  நர்ஸ் உடனே டாக்டரை அழைக்க செல்ல.., அகிலாண்டேஷ்வரியும் ராமும் உள்ளே சென்றார்கள் ஆதி செல்ல தடுத்து நிறுத்தினாள்.
"போதும் உன்னால எங்களுக்கு ஏற்பட்ட நஷ்டம்..!" என்று கதவை மூடினாள்.
"என்னங்க..! " என்று அகிலாண்டேஷ்வரி அழுகையோடு வெடித்தாள்.
"ம்ம்மி ரிலாக்ஸ்.. எமோஷ்னல் ஆகாதீங்க அது டாடியைதான் பாதிக்கும்..!" என்று துயரங்கள் அனைத்தையும்‌ மனதிற்கு அடக்கினான்.
"டாடி " என்று ராம் கையைப் பற்றியவன் அவரின் கண்கள் அந்த அறையை நோட்டமிட்டது.
கண்கள் வெளியே செல்வதை பார்த்தவர்கள். அகிலாண்டேஷ்வரிக்கு கோபம் தான் மிச்சியது.."ம்ம்ம் மம்மி போங்க போய் அவனை வர சொல்லுங்க..!" என்று ராம் கூற..
வெளியே வந்தவள்.. "உள்ள போ ஆனா..! அவருக்கு ஏதாவது ஒண்ணுனா நீ மட்டும் தான் காரணமா இருப்ப..!" என்று எச்சரித்து அனுப்பினாள்.
ஆதி அவரின் முன் செல்லவும்.. அவரின் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது.
ஏதோ சொல்ல வாய் எடுத்தவர் ராம் வெளியே வந்துவிட ஆதி அருகே  சென்றான்.
அவரிடம் குனித்து அமர்ந்தவன்.. "நீங்க நல்லா இருக்கீங்க..? கவலை படாதீங்க" என்று ஆதி கையை அழுத்தினான்.
அவர் கையை இறுக்கமாக பற்றியவர்..! "ஆதி நான் உனக்கு எதுவுமே செய்யல..!" என்று அவர் சொல்ல முயன்றார்.
அதை புரிந்துக்கொண்டவன்
"நான் தான் உங்களை என் வாழ்க்கையில அனுமதிக்கல நீங்க நிம்மதியா இருங்க நான் நல்ல வாழ்க்கையை தான் வாழ்றேன்..!" என்று ஆதி கூற..
"என்னை மன்னிச்சுடு ஆதி சாந்தா போனதுக்கு அப்புறம் நான் உன்கூடவே இருந்து இருக்கனும் ..!  என்று அவர் கூற..
"இப்போ எதுக்கு பழைய விஷயங்கள் எல்லாம் பேசறீங்க உங்களுக்கு ஒண்ணுமில்லை சரியாகி வந்துடுவீங்க ..! " என்று ஆதி நம்பிக்கையோடு கூற..
"இல்லை ஆதி நான் உயிரை கையில பிடிச்சுட்டு இருக்கிறதே உனக்கு தான் கண்ணா.. என்னை மன்னிப்பியா..! " என்று அவர் கேட்க..
"மன்னிச்சுட்டேன்.!.. நீங்க ரெஸ்ட் எடுங்க உங்களுக்கு ஒண்ணுமில்லை. " என்று மீண்டும் மூச்சு குழலியை எடுத்து அவர்‌மேல் வைக்க..
அதை தடுத்தார்.
"என்னை கடைசியா ஒரு தடவை அப்பான்னு கூப்பிட மாட்டியா கண்ணா.. !"
"ஏன் இப்படி..? என்று ஆதியின் அழுகை அதிகமாகியது..
அவருக்கு மூச்சுதிணறலோ..! முன்பை விட அதிகமாக வந்தது மூச்சு குழலியை எடுத்து மீண்டும்‌வைத்தவன் பலனில்லை..‌" டாக்டர்‌" என்று ஆதி கத்தியது வராண்டாவரை கேட்டது..
"ஆதி" என்று சூர்யா தூக்கத்தில் இருந்து எழுந்தாள்..
'கடவுளே‌ என்ன‌மாதிரியா கனவு இது ஆதியுடைய அப்பாவுக்கு எந்த பிரச்சனையும் இருக்க கூடாது 'என்று வேண்டிக்கொண்டாள்.
சூர்யா போட்ட சத்தத்தில் நித்திலா எழுந்து வந்தாள்.
"என்ன ‌ஆச்சு சூர்யா.. ? ஏதாவது கெட்ட கனவா ..? "என்று  அருகில் வர
"ஆமா அண்ணி அது நடக்கவே கூடாது..!"  என்று சூர்யாவின் கண்களில் பயம் தெரிந்திருந்தது.
அதை கண்டவள் தண்ணீரை எடுத்து கொடுத்தாள். "நடக்காது சூர்யா நிம்மதியா படு..! நான் கூட படுக்கிறேன்..!" என்று அருகிலேயே படுத்துக்கொண்டாள்.
"ஆதி " என்று மனதில் சூர்யா மீண்டு எழுந்தாள்.
"அண்ணி ..! நான் ஆதியை பார்க்கனும் உடனே.." ‌என்று சூர்யா எழுந்தாள்.
"என்ன விளையாடறியா சூர்யா ஆதி ஏதோ வேலையா வெளியில போய் இருக்காரு நீ எப்படி போக முடியும் ..?"
"எனக்கு தெரியாது அண்ணி ஆனா நான் ‌பார்க்கனும் ஆதியை இப்பவே.." என்று சூர்யாவிற்கு விட்டால் அழுது விடுவாள்‌போல..
நித்திலா யூக்கித்தவள்.." சரிபோன் பண்ணி பாரு சூர்யா..? "  என்று கூற
போன் ஸ்வீட் ஆப் ஆகி இருந்தது.. 'மார்னீங் பேசினப்ப கூட உடனே கட் ஆகிருச்சு  ஆதி இருந்த சூழ்நிலையை மனதில் தோன்ற ஏதேதோ சிந்தனையில் முழ்கியவளை நித்திலா உலுக்கினாள்.
பைத்தியம்‌ பிடித்தது போல் ஆகியது சூர்யாவிற்கு .. ஹாஸ்பிட்டல் நினைவு வர அனுவிற்கு போன் செய்தாள்.
டாக்டர்கள் வர.. ஆதி சோர்ந்து போய்வெளியே வந்து விழுந்தான்.
ஆதியின் அழுகை எல்லையை தாண்டியது. "அப்பா‌..!" என்று அழுதவன் கண்களில் மட்டும்‌அல்ல உயிரும் போய் தான்‌ மிஞ்சியது.
அவரின் உயிர்பிரிந்தது என்று ‌மற்றவர்களிடம் கூற.. அவர்கள் அனைவரின் அழுகை மொழியானது.
ராமோ.. என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து நின்றான்.. தனது அம்மாவை நினைத்தவன் தேற்ற‌முயன்றான்.
முடியவில்லை ஆதியை பார்ப்பதற்கு பாவமாக இருந்தது.
அவன் அருகில் சென்றவன் அழுகையோடு "நீ அழுவாதாட..!"  என்று ஆதியின் தோளை பற்றியவன்.. ஆதி ராமை இறுக்கமாக கட்டிக்கொண்டு அழுதான்.
அனைத்தும் முடிந்த நிலையில் வீட்டில் வைத்து காரியங்களை முடிக்க சென்றான் ராம்.
ஆதி யாருமற்ற அனாதையாய் நின்றான்.

உயிர் கொள்கிறேன் உன்னால் - Good Ending(முடிவுற்றது)Onde histórias criam vida. Descubra agora