நினைவுகள்..
ஒரு வருடத்திற்கு முன்பு..
"கயல் கும்பல்ல தொலைச்சிடாதா..கையைப்பிடி ஓடாத ..!" என்று சூர்யாவின் குரல்கள் கயலை சுற்றியே இருந்தது.
"ஹான் சூர்யா அதோ பாரு.. ஜஸ்கீர்ம் வாங்கி தா ப்ளீஸ்" என்று கயல் கெஞ்ச..
"நோ ஜஸ்கீர்ம்ஸ் ஒன்லீ புக்ஸ்" என்று சூர்யா கூற..
"ஒண்ணே ஒன்னு சூர்யா ப்ளீஸ் ..!" என்று கயல் குட்டி சூர்யாவின் கன்னத்தை பிடித்து கேட்க..
"அச்சோ அழகி.. வாங்கி தரேன் ஆனா ஒண்ணே ஒண்ணு தான்.." என்று அவளிற்கு பிடித்த சாக்லேட் பிளேவரில் வாங்கி கொடுத்தாள் சூர்யா.
புக்ஸ் ஸ்டாலுக்குள் ஒவ்வொன்றாக கடந்தனர்.
"ஐ சூர்யா அங்கபாரு.. டிராயிங் புக் வாங்கி தா..""உனக்கு என்ன புக் வேணுமோ..! நீ வாங்கிக்கோ.. கயல் ஆனா என்னை விட்டு அதிக தூரம் போக கூடாது.." என்று தான் தேடி வந்த பொக்கிஷத்தை தேடினாள்..
சூர்யாவின் கண்களுக்கு சரியாக தென்பட்டது. அவள் ரசித்து ரசித்து காத்திருந்த அந்த புத்தகம் அவளின் கண்முன்னே காதலிக்க வருவாயே..! அதன் கீழே அகில் என்று இருந்தது அதனை விட்டு கண்கள் அகல மறுத்தது.'அகில் என்காதலே உன்னை காதலிக்க தானே உயிர் கொண்டு வாழ்கிறேன்.. ஏன்டா இப்படி எல்லாம் எழுதுவ..?' என்ற ஏக்கத்தோடு அந்த புத்தகத்தையே பார்த்துக்கொண்டு நின்றாள்.
சூர்யாவை பார்த்த கடையின் உரிமையாளர்.."நீங்களும் அகில் ஸார் பேன்னா..?" என்று கேட்க..
'இல்லை அவனுடைய காதலி' என்று அவள் மனம் சொல்லியது. சிறுபுன்னகையோடு உள்ளே நுழைந்தவள் அந்த அறையின் முழுவதும் அகில் ரசித்து ரசித்து எழுதி அத்தனை புத்தங்களின் தொகுப்பு.
'எத்தனை வருட ஏக்கங்கள் எந்த புத்தகத்தில் நீ எந்த இடத்தில் எந்த வரியை கேட்டாலும் எனக்கு அத்துபடி ஆயிற்றே.. உன்மீது பைத்தியமாகியதாலோ என்னவோ.. உன்மீது காதல் வந்துவிட்டது உன் எழுத்துகளின் மீது பேராசை வந்துவிட்டது டா..' என்று எண்ணம் முழுவதும் சிந்தனையில் நிறைந்து நின்றான் அகில்.
CZYTASZ
உயிர் கொள்கிறேன் உன்னால் - Good Ending(முடிவுற்றது)
Fantasyகாதலால் காதலை வெல்ல முடியுமா...? வென்றார்கள் இருவருமே ஒருவரை ஒருவர் அன்பால்... ஆதி ❤️சூர்யாவாக