நிஜம்..!
நேற்று ஆதியிடம் பேசியதே சூர்யாவின் மனதில் நின்றது.
'ஒரு காதல்ல இருந்தே என்னால மீட்டு வரமுடியல மறுபடியும் இன்னொரு காதலா இந்த ஜென்மத்தில வாழ்ந்தா அது அகில் கூட மட்டும்தான்'
'அவனுக்கு வேணுமுன்னா நான் முக்கியம் இல்லாம இருக்கலாம் ஆனா எனக்கு அகில் முக்கியம் நான் உயிர் வாழ..! என் உணர்வுகளுக்கு அவன் வேணும்..' என்று சூர்யாவின் மனம் ஆலமரத்தின் விழுது போல் வர்மாவின் நினைவுகளை தாங்கியப்படியே நின்றது.
'ஆதி ப்ளீஸ் என்னை மாதிரி நீங்களும் இந்த காதல் வலையில சிக்கி தவிக்காதீங்க அது ரொம்பவே கஷ்டம் அதிலிருந்து மீண்டு வரது..'
'உயிரோடு புதையறதுக்கு சமம் அந்த வலிகளை எப்பவும் நான் உங்களுக்கு தரவே கூடாது நீங்க என்னை பார்த்த முதல் பார்வையிலேயே புரிஞ்சுது நீங்க என் மேல உயிரையே வச்சு இருக்கீங்கன்னு ஆனா வேண்டாம் மிஸ்டர் ஆதி இது நடக்காது நடக்கவும் கூடாது இந்த உடலும் மனசும் அகிலுக்கு மட்டும் தான்' என்று சூர்யாவின் மனம் அகிலனின் நினைவுகளை தேட ஆரம்பிக்க வழக்கம் போல் இரவின் மடியில் அகிலனின் நினைவில் தன்னை தொலைத்தாள் சூர்யா.
காலைபொழுதனில்
மயக்கம்கொள்ள வைக்கும்..
அவனது நினைவுகள்..!
வழக்கம் போல் கயலை பள்ளிக்கூடத்தில் சூர்யாவிடவும் மாலையில் நித்திலாவே வீட்டிற்கு கூட்டி வருவதாக வீட்டில் முடிவு எடுக்க அனைவரும் ஒத்துக்கொள்ள..
கிளம்பி தயாராகி.. சூர்யா சாப்பிட டேபிளில் வந்து அமர.." அண்ணி கயல்குட்டி சாப்பிட்டாளா..?"
"சாப்பிட்டா சூர்யா.." என்று நித்திலா கூற.
"நானும் ரெடி லன்சும் ரெடி.." என்று கயல்குட்டி ஸ்கூலுக்கு தயாராகி நிற்க
"இரண்டு நிமிஷம் கயல் கண்ணா.. நான் வந்திடறேன்" என்று சூர்யாவின் தட்டில் நித்திலா இட்லிகளை வைக்க..
"சூர்யா இன்னைக்கு தேதி ஏழு கரண்ட் பில் கட்ட லாஸ்ட்டேட்.." என்று நித்திலா நினைவுபடுத்த..
ஏழாந்தேதி என்பதை தவிர சூர்யாவிற்கு எதுவும் நினைவு வரவில்லை. "என்ன அண்ணி சொன்னீங்க ..?"என்று சூர்யா நினைவிற்கு வர..
"இன்னைக்கு கரண்ட்பில் கட்ட லாஸ்ட் டேட் சூர்யா ப்ளீஸ் கட்டிடு"என்று நித்திலா..கூற..
சாப்பிட உட்கார்ந்த சூர்யா எழுந்தாள்
"என்னாச்சு சூர்யா.." என்று கயல் கேட்க..
நித்திலா சூர்யாவை பார்க்க.. "மறந்தே போயிட்டேன்.. அண்ணி இன்னைக்கு ஆபிஸ்ல முக்கியமான மீட்டிங் எதுவுமே பிரிப்பேர் பண்ணல நான்" என்று சூர்யா பதறினாள் வேகவேகமாக வீட்டை விட்டு வெளியே வந்தவள்..
நித்திலா கூற கூற சூர்யா ஓடி வந்துவிட்டாள் அவசர அவசரமாக
கயல் சூர்யாவின் பின்னால் ஓடி வந்தாள். "கயல் இந்தா உன்னுடைய லன்ஜ்" என்று கயல் நீட்ட..
ஸ்கூட்டியில் கயலை உட்கார வைத்துவிட்டு வண்டியை எடுத்தவளின் மனதில்..
'இன்னைக்கு தானே அகில் முதல் தடவையா நாம பேசின நாள்..! எப்படி டா நான் மறந்து போனேன்.. நீ என்னை விட்டு விலகி போனாலும் உன்னை தானே நினைக்க தோணுது மனசுல..! அகில் நீ என் உயிர்மூச்சுல ..! எப்படி டா மறந்தேன் உன் சூர்யா முட்டாள்டா..! இப்ப வர வர உன்னை சரிவரநினைக்கிறது கூட இல்லை..!'
"சூர்யாஎன்னஆச்சு..?" என்று கயல் கேட்க..
"ஒண்ணுமில்லை..கயல் மீட்டிங்ல கொஞ்சம் டென்ஷனா இருக்கேன் அவ்வளவு தான்" என்று சூர்யா கயலை பள்ளியில் விட்டு விட்டு ஆபிஸிற்கு விரைந்தாள்.
மனம் முழுவதிலும் முதல் முதலாய் நடந்த உரையாடல்களே..! தோன்ற சூர்யா அந்த நினைவுகளில் தோற்று தான் போனாள்.
தனிமை அது எப்போது தனக்கு கிடைக்கும் என்று தேடி அலைந்தாள் சூர்யா தனிமையில் அகிலின் நினைவில் அழுது தன்னை கரைக்க வேண்டும் என்று நினைத்தாள்.
'ஆபிஸிலோ முடியாது' அப்போது அனு வர..
"என்ன ஆச்சு சூர்யா..?" என்று அனு சூர்யாவின்முகவாட்டத்தை கண்டவள்..
"எனக்கு முடியல அனு மா.. வீட்டுக்கு போக முடியாது இன்னைக்கு உன்கூட இருக்கட்டா ப்ளீஸ்" என்று சூர்யா கேட்க..
"ஏய் என்னஆச்சு சூர்யா..?" என்று சூர்யாவின் நெற்றியையும் கழுத்தை தொட்டு பார்த்தவள்.
"எனக்கு ஒரு மாதிரியா இருக்கு அனு.. ஈவினிங் வீட்டுல சொல்லிட்டு உன் கூட இருக்கேன் ப்ளீஸ் மறுக்காத" என்று சூர்யாகெஞ்ச..
"சரிசரி ஈவினிங் போகலாம் "என்று அனு சூர்யாவை சமாதானப்படுத்தினாள்.
'எப்படியடா நேரம்ஓடும்..உன்னை நினைத்து நினைத்து பொழுதுகள்பல கழித்தவள் நான்..! ஆனால் இப்போது உன்னை நினைத்து அழ கூட.. உரிமை இல்லாத பொழுதை நினைத்து ஆத்திரமே வருகிறது' என்று மாலை ஆறுமணிஆனதும்.. வீட்டிற்கு கால் செய்தாள்..சூர்யா..
அண்ணியை சமாளிப்பது மிகவும்கடினம் அதனால் தன் அண்ணனிடம்பேசினாள்.
"சொல்லு சூர்யா என்னவிஷயம்..?" என்று ராஜேஷ்கேட்க..
"அண்ணா ஆபிஸ்ல ரொம்ப முக்கியமான வொர்க் போயிட்டு இருக்கு அண்ணா.. அனுவோடை சேர்ந்துதான் வொர்க் பார்க்கனும்..நான் இன்னைக்கு அனு வீட்டுல தங்கி வேலையை முடிக்கிறேன் நீங்க.. அண்ணிக்கிட்ட சொல்லிடறீங்களா..? அண்ணிபயப்புடுவாங்க" என்று சூர்யாகூற..
"சரிமா நீ போயிட்டு வா ஆனா ரொம்ப சிரமம் எடுத்துகாத புரியுதா.. எவ்வளவு வேலைனாலும் சரி சாப்பிட்டு வேலையைபாரு.." என்று ராஜேஷ் உரைக்க..
"சரி அண்ணா" என்று சூர்யா தொண்டையை சொருமினாள்.
அனுவால் சூர்யாவை புரிந்துக்கொள்ளவே முடியவில்லை" என்னஆச்சு சூர்யா..?" என்று அனு கேட்டு கேட்டு சலித்தாள்.
"எதுவுமே என்னால சொல்ல முடியாது அனு இது சொல்ல முடியாத வலி உன்னால புரிஞ்சுக்கவும் முடியாது விட்டுரு ப்ளீஸ்" என்று சூர்யா கையெடுத்து கும்பிட முதல் தடவையாக சூர்யாவை வேறுமாதிரியாக பார்க்கிறாள்..
அனுவின்வீட்டிற்குள் சென்றவள்.
"அண்ணி கால் பண்ணா நான் பிஸியா இருக்கேன் இல்லை தூங்கிட்டேன் னு சொல்லனும் அனு ப்ளீஸ் எனக்காக இதை மட்டும் பண்ணு போதும்" என்று ரூமை லாக் செய்து கொண்டாள் பெட்டில் சரிந்தாள் சூர்யா.
"அகில் அகில்.." என்று சூர்யாவின்மனம் அவனது பெயரையே உச்சரித்தது..
நினைவுகள்
சரியாக ஒருவருடத்திற்கு முன்பு..!
"அகில் உன் எழுத்துகள் அதிக போதையைதருது..! உன்னை உடனே பார்க்கனும்முடியுமா டா.." என்று சூர்யாவின் மனதினுள்.. அகிலின் எண்ணங்கள்..!
"விடியட்டும் டாஉன்னை தேடி நான் வரேன் நீ எங்க இருந்தாலும் நான் வருவேன்.." என்று இரவை வேகமாக நகர்த்த முயன்றாள் சூர்யா.
விடிந்தது வீட்டில் காலேஜ் போவதாக சொல்லிவிட்டு அகிலை தேடி போனாள். அவள் நேராய் சென்றது அன்று நிகழ்ச்சி நடத்தியவரை நேரில் கண்டு அகில் இருக்கும் இடத்தை தேடி போக நினைத்தாள்.
"ஸார் குட் மார்னீங்.. நான் நேத்து கேட்டேனே..?" என்று சூர்யா கூற..
"என்னமா உன்பிரச்சனை..? அகில் ஸார் எதர்ச்சியா வந்தாரு பேட்டி எடுத்தோம். அதுவும் அவரை வற்புறுத்தி வீடியோ கூட எடுக்கலமா அவர் அனுமதிக்கவே இல்லை இப்போ அவரு எங்க தங்கி இருப்பாருன்னு என்னை கேட்டா எப்படி மா" என்று ஆங்கர் கையை பிசைய..
"மச்சி என்ன டென்ஷனா இருக்க" என்று அவனது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வர..
சூர்யா சற்றுதயங்கி போக..
"அகில் சார் எங்க தங்கி இருப்பாருன்னு தெரியுமா ஸார்.? .." என்று ஆங்கர் அவரிடம் கேட்க..
"யாருரைட்டர் அகில் சாரா.."என்று அவர் கேட்க..
"அட ஆமா ஸார் நேத்து வீடியோ வேண்டான்னு சொன்னாரே" என்று ஆங்கர் நியாபகப்படுத்த..
"ஆமா ஸார் ரொம்ப ஓவர் தான்" என்று அவர் கூற..
"ஸார்" என்று அவரை கட்டுபடுத்தியவன்..
"என்னஓவர் .." என்றுசூர்யா புருவத்தை தூக்கினாள்.
"நீங்க பண்றதை விடவா.. ஒரு வீடியோ எடுத்தா.. அதை ஒரு தடவை போட்டா பரவாயில்லை..ஆனா ஓயாமபோட்டு பணத்தை சம்பாதிக்கிற நீங்க ஆனா தன்எழுத்து மூலமா மத்தவங்களுக்கு ஆறுதலா மாறி இருக்காரு அகில் சார் ..!"
"அவர் எங்க நீங்க எங்க..? அவர் ராயல்ட்டி பத்தி பேச ஆரம்பிச்சா நீங்க அவ்வளவு தான் அதான் அவர் உங்களை மாதிரி ஆட்களை விட்டு தள்ளி இருக்காரு..?" என்று சூர்யா பொரிந்துதள்ளினாள்.
"ரிலாக்ஸ் ரிலாக்ஸ் மேடம்" என்று சூர்யாவை ஜில் செய்தான் ஆங்கர் ..
"ஸார் சொல்லி வைங்க அகில் சாரை பத்தி இனி எங்கேயும் தப்பா பேச கூடாதுன்னு அதுவும் என்முன்னாடி கூடவே கூடாது”
என்று சூர்யா அவரை எச்சரித்தாள்.
அவருக்கு.. கோபமே வரவில்லை மாறாக ஆச்சரியம் தான் மிச்சியது.. இப்படிஒரு ரசிகையா என்று அதுவும்யார்என்று தெரியாத ஒருவர் மேல்..
சூர்யா கோபத்தில் பொரிந்துக்கொண்டே போக..
"நீங்க அகிலை பார்க்கனுமா ..?" என்று அவர் கேட்க..
"ஓர்நிமிடம் தான்" அவளிற்கு வார்த்தைகள் தடுமாறியது.
"என்ன சொன்னீங்க..?" என்றுசூர்யா ஆச்சரியமாக கேட்க..
"அகில் இல்லை அகில் ஸாரை பார்க்கனுமான்னு கேட்டேன்..?"
"என் கனவு ஸார்..? என்றுசூர்யா கூற..
"சரி இருங்க ஒரு நிமிஷம்" என்று.. தனது மொபைலை எடுத்தவன் எங்கெங்கோ பேசி ..இறுதியாக அகிலனை பேட்டி எடுக்க சென்ற பெண்ணினை தொடர்ப்பு கொண்டு அட்ரஸை வாங்கி கொடுத்தார்அவர்..
"ரொம்ப தேங்ஸ் ஸார்" என்று சூர்யா பதிலுக்கு காத்திராமல் பறந்தோடினாள்.
அந்த பிரபல ஹோட்டலில்..
ரிஷப்சனில்.. "மிஸ்டர் அகில் ஸார் இருக்காங்களா பார்க்கனும்.? " என்று சூர்யா ஆர்வம் தாங்கமாட்டாதவளாய் கேட்க..
"வெயிட் பண்ணுங்க மேடம்.." என்று ரிஷப்சனில் இருந்த பெண்.. தன் முன் இருந்த கணிணியில் தேடி பார்க்க.." ரூம் நம்பர் தெரியுங்களா மேடம்" என்று அந்த பெண் கேட்க..
"நோ மேடம் மிஸ்டர் அகில் ஸார் நேம் மட்டும் தான் தெரியும்.." என்று சூர்யா அப்பாவியாய்கூற..
தங்களது கணினி திரையில் செக் செய்தவள்.." அவங்க வெக்கேட் பண்ணிட்டாங்க மேடம் ..? அரைமணி நேரத்திக்கு முன்னாடி தான்ரூமை வெக்கேட் பண்ணி இருக்காங்க ..!" என்று அந்த பெண் கூற..
"அவங்க அட்ரஸ் போன் நம்பர் ஏதாவது.. கிடைக்குமா..? ப்ளீஸ்" என்று சூர்யா கெஞ்ச..
"மேடம் அப்படி எல்லாம் கஸ்டமர்ஸ் உடைய டீட்டெய்ல் தர முடியாது" என்று அந்த பெண் உறுதியாக கூற..
"ப்ளீஸ் மேடம் நான் அவரை பார்க்கனும் அட்லீஸ் அவங்ககிட்ட பேசனும்..! என்று சூர்யா விடுவதாய்இல்லை ..
"மேடம் புரிஞ்சுக்கோங்க.."
"ப்ளீஸ் மேடம் என்னை புரிஞ்சுக்கோங்க.. அட்லீஸ்ட் நீங்களே கால் பண்ணுங்க நான் பேசறேன்.." என்று சூர்யாகூற..
சூர்யாவை பார்க்க பாவமாக இருந்ததால் அந்த பெண்ணே அகிலின் பி.ஏவிற்கு போன் செய்தாள்.
ரிங் போகியது..! "ஹலோ" என்று லைன் கிடைக்க..
"ஸார் நீங்க தங்கி இருந்து ஹோட்டல்ல ஒரு பொண்ணு வந்து இருக்காங்க.. உடனே உங்களை பார்க்கனுமுன்னு சொல்லறாங்க.." என்று ரிசிவரை எடுத்து சூர்யாவிடம் நீட்டினாள்.
"ஹலோ அகில் ஸார்.. என் பேர் சூர்யா என்று கூறுவதற்குள்..
"மேடம் எதுனாலும் ஸார்க்கு மெயில் பண்ணுங்க.." என்று பி.ஏ கூற..
"மெயில் அட்ரஸ் ஸார்.." என்று சூர்யா கேட்க..
"நோட் பண்ணிக்கோங்க.." என்று அவர் கூற சூர்யா குறித்துக்கொண்டாள்.
"சரிங்கமேடம்"என்று போனை வைத்தவன்.
"யாரு அண்ணா லைன்ல..?"
"அதான் ஸார்.. அதான் ஸார் பங்ஷன்ல கூட மீட்பண்ணமே ஏதோ முக்கியமான விஷயம் உங்கிட்டபேசனுமுன்னு சொன்னாங்க பங்ஷன்ல அடுத்த கதையை அவங்க தான் ரிலிஸ் பண்ணுவேன்னு சொன்னாங்க அதை பத்தி உங்கிட்ட பேசனுமுன்னு சொன்னாங்க.."
"ஆமா அண்ணா நான் பார்த்துக்கிறேன் நீங்க கிளம்புங்க.." என்று அகில் அடுத்து பிளைட்டில் அமெரிக்கா புறப்பட்டான்
BẠN ĐANG ĐỌC
உயிர் கொள்கிறேன் உன்னால் - Good Ending(முடிவுற்றது)
Viễn tưởngகாதலால் காதலை வெல்ல முடியுமா...? வென்றார்கள் இருவருமே ஒருவரை ஒருவர் அன்பால்... ஆதி ❤️சூர்யாவாக