“சூர்யா எழுந்திரி ஏன் இப்படி இருக்க..?” என்று தனது பிஞ்சு விரல்களால்..கயல்குட்டி சூர்யாவை எழுப்ப முயன்றாள்.
ஆனால் சூர்யா போர்வையை விட்டு விலக்காமல் இருந்தாள்.
“சூர்யா சூர்யா” என்று கயல்குட்டி அழைத்துக்கொண்டே இருந்தாள்.
நினைவில் இருந்து ஆதியை விலக்க முடியாமல் தவித்தாள் சூர்யா..
“அம்மு அம்மு..! “ என்று ‘ஆதி கொஞ்சியப்போது எல்லாம் அவனை விட்டு விலக்கி வைத்த மனம் இப்போது ஆதி அப்படி அழைத்து கொஞ்ச மாட்டானா ‘ என்று மனம் ஏங்கி தவித்து தனது மனத்திரையில் ஆதி தன்னை கொஞ்சியதை நினைத்து நினைத்து காதல் போதை கொண்டாள் சூர்யா.
நிஜத்தில் “சூர்யா” என்று அழைப்பது கேட்டு.. போர்வையை விலக்கியவள்..எதிரே கயல்குட்டி..
அவளை விலக்கியவள்.. போர்வையை மீண்டும் போர்த்திக் கொண்டாள். கயல் சூர்யாவின் மீது ஏறி அமர்ந்தவள்..
“இப்போ எழுந்திரிக்க போறியா இல்லையா..? மணி பத்து ஆச்சு சூர்யா மாமா வேற என்கிட்ட பெரிய பொறுப்பை ஒப்படைச்சுட்டு போயிட்டாரு..” என்று தனது இடுப்பில் கையை வைத்து சூர்யாவை மிரட்டினாள் கயல்.
‘மாமா என்றால் ஆதி ஆகிற்றே’ என்று போர்வையை விலக்கியவள் “உங்க மாமா என்ன சொன்னாரு கயல் குட்டி” என்று சூர்யா கேட்க..
“அதுவா ..!” என்று கயல்குட்டி யோசித்து கொண்டே இருக்க..
“என் தங்கம்ல என் செல்லம்ல உங்க மாமா என்ன சொல்லிட்டு போனாரு சொல்லுடா கண்ணா” என்று கயல் குட்டியின் கன்னத்தை வருடியவள்.
“சொல்லறேன் சொல்லறேன் ஆனா சூர்யா நீ எனக்கு என்ன தருவா..?”
“ஜஸ்கீர்ம் புக்ஸ்..!” என்று சூர்யா அடுக்கி கொண்டே போக
“அது ரொம்ப போர் சூர்யா..!”
“அப்போ வேற என்னதான் வேணும்..!” சூர்யா சோர்ந்து போனாள்.
“மாமா மாதிரி என்னை பார்க் கேம் சென்டர் கூட்டி போறியா..!” என்று கயல் குட்டி கேட்க
‘கயலையும் விட்டு வைக்கலேயா டா நீ அவளையும் கெடுத்து வச்சு இருக்கியே..!' என்று மனதில் நினைத்தவள்.
“நீ கீழ இறங்கு தாயே ஏற்கனவே வலி ..!” என்று கயலை தூக்கி பெட்டில் போட்டவள் எழுந்தாள்..
“அப்போ வேண்டாமா சூர்யா..?” என்று கயல் கேட்க..
“உன் மாமா வந்தோட்டி நான் அவன்கிட்டேயே கேட்டுகிறேன் வருவானா..?” என்ற எண்ணத்துடன் பாத்ரூமிற்குள் நுழைந்தவள்.
‘அப்படியே அவனை மாதிரி மாத்திட்டானே கயல்குட்டி நான் கேட்டு எதையும் மறைச்சதே இல்லை இப்போ இவ்வளவு கெஞ்சறேன் அசையறாளா கல்நெஞ்சக்காரன் அவனை மாதிரியே..’ என்று திட்டி தீர்த்தாள் சூர்யா.
“நானா கல் நெஞ்சக்காரன் நீ தான்டி இதுவரைக்கும் ஒரு முத்தம்.. கொடுத்து இருக்கியா டி..!”என்று ஒரு குரல் திரும்பியவள்.. சூர்யாவின் பின்னால் ஆதி நின்றான்.
“முத்தமா..? அது ஒண்ணு தான் வேணுமா..? ஆமா இது என் கனவு அதுல நீ என்னடா பண்ற..?” என்று சூர்யா கைகட்டிக்கொண்டு கேட்க..
“உன் கனவு தான்அதுல என்னை ஏன் அம்மு நினைக்கிற..?” என்று ஆதி சூர்யாவை நெருங்க
“ஓஓ..! ப்ளீஸ் ப்ளீஸ் அம்முன்னு கூப்பிடாத எனக்கு ஒரு மாதிரியா இருக்கு டா..!”என்று கனவிலும் ஆதியிடம் இரைஞ்சினாள் சூர்யா.
இரவிலும் கூட உறங்காது..தனது அப்பா விஷ்வநாதன் அருகிலேயே இருந்தான்.
தன் அம்மாவுடன் இருந்த அப்பாவை நினைத்து நினைத்து தான் ஆதியின் மனம் ஏங்கியது..!
அவரது கையைப்பற்றியப்படியே உறங்கி போனவன்.. நர்ஸ் டூட்டிக்கு வந்து எழுப்பவும் தான்எழுந்தான்.
“மேடம்..இப்ப இவருடைய கண்டிஷன் எப்படி இருக்கு..? “
“ஸார்..! இன்னும் கொஞ்ச நேரத்தில் டாக்டர் வந்திடுவாரு அவர் தெளிவா சொல்லுவாரு” என்று இரண்டு மூன்று ஊசிகளை குளுக்கோஸ் பாட்டிலின் வழியே இறக்கியவள் பிரஷர், சுகர் என்று ஒவ்வொரையும் செக் செய்தாள்.
அகிலாண்டேஷவரியோடு டாக்டர் பேசியப்படியே வருவது..! ஆதிக்கு தெளிவாக கேட்டது.
“டாக்டர் இன்னும் எத்தனை நாளைக்கு இந்த டீர்ட்மெண்டஸ் அவருக்கு சரியாகாதா..? “ என்று அகிலா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினாள்.
“மேடம்..! நான் தெளிவா சொல்லிட்டேன் திருப்ப திரும்ப அதையே கேட்கறீங்க கடவுள் இருந்து அவரை காப்பாத்தினா தான் உண்டு” என்று டாக்டர் கூற..
“மெதுவா பேசுங்க டாக்டர் ..!”என்று அகிலாண்டேஷ்வரி எச்சரிக்க
வெளியே வந்தவன் “என்ன டாக்டர் அவருக்கு என்ன ஆச்சு..?” என்று ஆதி அவர்களின் எதிரே வந்து கேட்டவன்.
டாக்டர் சற்று தயங்கியவர்..
அகிலாண்டேஷ்வரியோ “அவருடைய பையன் டாக்டர்” என்று வேண்டா வெறுப்பாய் கூறினாள்.
“ஹலோ டாக்டர் அவருக்கு என்ன டீர்ட்மெண்ட் பண்ணணும் உடனே ஸ்டார்ட் பண்ணுங்க எவ்வளவு ஆனாலும் நான் பார்த்துக்கிறேன்” என்று ஆதி கூற..
“என்ன டீர்ட்மெண்ட் அது இதுன்னு தெரியாம பேச வேண்டாம்.. மகன்னு நீ மட்டும் இல்லை எங்க பையனும் இருக்கான்..” என்று அகிலாண்டேஷ்வரி கூற..
அதற்கு மேல் ஆதியால் எதுவும் கூறமுடியவில்லை.. இருவரிடமும் மெளனம் தான் நீடித்தது.. “ டாக்டரோ வாங்க செக் பண்ணலாம் “ என்று அகிலாண்டேஷ்வரியுடன் சென்றார்..
ஆதி வெளியிலேயே நின்றான்.
கால்மணி நேரம் கழித்து வெளியே வந்தவர் ஆதியை தனியே அழைத்து பேசினார்.
“இது என்னுடைய ஹாஸ்பிட்டல் நீங்க ப்ரியா இருந்தா நாளைக்கு ஹாஸ்பிட்டல் வாங்க பேசிக்கலாம்..” என்று டாக்டர் விடைபெற..
அகிலாண்டேஷ்வரி கோபமாகவும் இருந்தாள் ஆனால் கண்களில் கண்ணீர் நிறைந்திருந்தது.
ஆதியின் மனம் சிறிது இரக்கம்கொள்ள தான் செய்தது.
‘நாளை முதலில் டாக்டரை பார்க்க வேண்டும் என்ன ஆனாலும் சரி எனக்கென்று இருக்கும் இவரை விடபோவதில்லை எப்படியாவது உயிரோடு இவரை காப்பாற்ற வேண்டும் ‘ என்று மனம் தவிப்பில் தத்தளித்தது.
“ஏய் ஆதி.. !” என்று ஆதியின் உடலில் இருந்து அவனை போலவே இருந்த மனசாட்சி வெளியே வந்தது.
“சொல்லு..! “
“ஆதி உண்மைய சொல்லு..! உனக்கு உறவுன்னு அவர் மட்டும் தான் இருக்காரா..?”
சற்று தயங்கியவன் “ இருக்கா இவர் மாதிரி இல்லாம என் மேல உயிரே வச்சு இருக்கிறவ என் அம்மு இருக்கா..!” என்று ஆதி கூற..
“அப்புறம் ஏன் சூர்யாக்கிட்ட உண்மையை சொல்லல..!”
“சொல்லனும் டா..! நீ ஏன் இப்போ வெளியில வந்த.. உள்ளேயே இருடா அது தான் நல்லது இல்லாட்டி தேவை இல்லாம சூர்யா எண்ணங்கள் வரும் என்னால எதிலேயும் கவனம் செலுத்தவே முடியாது” என்று ஆதி இரைஞ்ச..
“நீ பண்றது தப்பு ஆதி உன்னை பத்தி எல்லா உண்மையும் சூர்யா கிட்டசொல்லு.. !”
“சீக்கிரமே சொல்லறேன் ப்ளீஸ் இப்போ வந்திடுடா..! என்று ஆதி கெஞ்ச கெஞ்ச..
சிரித்தபடி ஆதியின் உடலிற்குள் தஞ்சம் புகுந்தது ஆதியின் மனம்.
“நினைவே நினைவே..!
எந்தன் நெஞ்சில் நீ தானே.!
உயிரே உயிரே..
உன் உறவில் நானே..! “
என்று ரிங்டோனோடு ஒலி எழுப்ப சூர்யா மொபைலை எடுத்தவள்.
திரையில் “அனு..டார்லீங்” என்று இருந்தது.
மனதில் சோகம் இருந்தாலும் அதை மறைத்து அனுவிடம் பேச தொடங்கினாள்.
“சொல்லுங்க மேடம் வர வர போன் பண்றதே இல்லை..!”என்று சூர்யா சலிக்க..
“வாட் மேடம்..! மறந்துப் போயிட்டீங்களா நீங்க தான் பேசறதே இல்லை குடும்ப பெண்ணா ஆகிட்டீங்க..?” என்று அனு கிண்டல் செய்ய
“அனு நீ வேற கிண்டல் பண்ணாத..மேரேஜ்க்கு வந்ததுக்கு அப்புறம் இன்னும் ஒரு போன் இல்லை..” என்று சூர்யா கோபமானாள்.
“கூல் மேடம்..! நம்ப ஆபிஸை பத்தி தான் உங்களுக்கே தெரியுமே மூன்னு நாள் லீவு போட்டது பத்து நாள் பக்கம் விடிய விடிய வேலை வச்சு பலி தீர்த்துக்கிட்டாங்க..!”
“அப்படியா..? நீ தான் ஆபீஸ்ல வேலையே செய்யவே மாட்டியே அனு.. அப்புறம் எப்படி..?” என்று சூர்யா துடுக்காய் பேச
“என்ன பண்றது எல்லாம் கால நேரம் தான் டி நீ இருந்த வரைக்கும் என் லைப்புல எந்த பிரச்சனையும் இல்லை ஏன்னா காப்பாத்த நீ இருந்த ஆனா இப்போ ..?” என்று அனு ஏக பெருமூச்சு தான் விட்டாள்.
“சரி அது எல்லாம் விடு.. நீ எப்போ கமிட் ஆக போற..!” என்று சூர்யா கேட்க..
“அதானே பார்த்தேன் என்னாடா சூர்யா எதுவும் பேசாம இருந்தாலேன்னு உனக்கு ஒரு கஷ்டம் நடந்தா எனக்கும் நடக்குமுன்னு நினைக்கிறப்பாரு அங்க நிற்கிற டி நீ..!”
“அனு கிண்டல் பண்ணாத நான் சீரியஸா சொல்லறேன்..!” என்று சூர்யா கூற
“நானும் சீரியஸா தான் டி இருக்கேன்..!” என்று அனு சோகமானாள்.
“என்னடி சொல்லற..?”
“ஹாஸ்பிட்டல்ல நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கேன்.. !” என்று அனு கூற..
“என்ன ஆச்சு அனு..?” என்று பதறி தான் போனாள்.
“பதறாத பதறாத இந்த ஹெட் தொல்லை தாங்க முடியல அதான்.. ஒன் வீக் மெடிக்கல் லீவு போட்டு ஹாஸ்பிட்டல தஞ்சம் புகுந்து இருக்கேன்..!” என்று அனு கூலாய் பதில் கூற
“அடிப்பாவி..!”
“அப்பாவியா தான் டி இருக்கு கூடாது.. சூர்யா அந்த ஹெட்டு வருத்தப்பட்டுக்கிட்டே இன்னும் ஒருவாரம் ஆனாலும் உடம்பு சரி ஆகிவாம்மான்னு அக்கறையில அன்பை பொழிஞ்சு எடுத்துட்டாரு இப்போ நிம்மதியா மூன்னு வேலை சாப்பாடு அமைதியான உறக்கம் டிவி அது இது ன்னு ஏக போக சவுக்கியமா இருக்கேன்..!” என்று அனு கூற..
“உனக்கு எப்படி இந்த மாதிரி ஐடியா எல்லாம் வருதோ எனக்கே தெரியல ..! சரி எந்த ஹாஸ்பிட்டல்ன்னு சொல்லு வரும்போது ஆப்பிள் ஆரஞ்சுன்னு வாங்கிட்டு வந்து தொலைக்கிறேன்..!” என்று சூர்யா சொல்ல..
அனு சிரித்தாள் “அப்படியே ஹார்லீக்ஸ்சு பூஸ்ட்டு.. வாங்கிட்டு வா.”
“உனக்கு ஒரு பாட்டில் விஷம் தான் கரெக்டா இருக்கும் டி.. நீ பண்ற தில்லாலங்கடி வேலை ஹெட்டுக்கு தெரிச்சா வேலையை விட்டே தூக்கிடுவாங்க..” என்று சூர்யா எச்சரிக்கை விடுக்க
“தெரியறவரைக்கும் நிம்மதியா இருப்போம் சூர்யா.. இதை விடு நீ எப்படி இருக்க உன் ரொமாண்டிக் ஹஸ்பெண்ட் என்ன பண்றாரு..?”
“ரொமாண்டிக்கா..?” என்று சூர்யா புருவம் உயர்த்த
“பின்ன இல்லையா..!”
“அனு..”
“சரி சரி சூர்யா பர்சனல் விஷயத்தில் எல்லாம் நான் தலையிடல.. நீ ஹோப்பியா இருக்கியா..!”
“நேர்ல வரும் போது பேசறேன் அனு.. ப்ரியா ..!” என்று அனுவின் பதிலுக்கு கூட காத்திரமால் வைத்துவிட்டாள் சூர்யா..
‘ஆமா அனு ரொம்பவே என் மேல அன்பை பொழிந்தவன் தான் ஆனா ஆனா’ என்று அதுக்கு மேலும் சூர்யாவிற்கு வார்த்தைகள் வரமறுத்தது
‘ஆதி நீ என் பக்கத்திலேயே இருந்தப்ப உன் அருமை எனக்கு தெரியல டா ஆனா நீ இல்லாதப்ப தான்டா உன் அருமையே புரியிது நீ இல்லாம என்னால வாழவே முடியாது ஆதி..!'
‘மனசுல இருந்த பழைய எண்ணங்கள் எல்லாம் மறந்துப்போயிடுச்சு டா..இப்போ என் எண்ணம் எல்லாம்.. உன்னை பார்க்கனும் உன்கிட்ட மனசு விட்டு பேசனும் அது மட்டும் தான் என்னுடைய நினைவுகளில் தவழ்ந்துட்டு இருக்குது டா.!
“வந்துவிடு கள்வனே ..!
உன்னை
என் இதய சிறையில்
அணைக்க
துடித்துக்கொண்டு
இருக்கிறேன்..!”
ESTÁS LEYENDO
உயிர் கொள்கிறேன் உன்னால் - Good Ending(முடிவுற்றது)
Fantasíaகாதலால் காதலை வெல்ல முடியுமா...? வென்றார்கள் இருவருமே ஒருவரை ஒருவர் அன்பால்... ஆதி ❤️சூர்யாவாக