உயிர் -12

346 15 0
                                    

இவ்வளவு தூரம் வந்தும் அகிலை பார்க்க முடியாததால் சோர்ந்துபோனாள்.
'அகில் உன்னை எப்ப டா பார்ப்பேன்..! என்‌ காதலை உன்கிட்ட சொல்லனும் எவ்வளவு தான் முயற்சி பண்ணுனாலும்.. உன்னை அடையற வழி எதுன்னே தெரியலேயே..!' என்று சோர்ந்து போனவளின் கையில் அகிலின் மெயில் அட்ரஸ் நம்பிக்கை துளிர..
சூர்யா எழுந்தாள்..!'  அகில் உன்னை பார்க்கமுடியலேன்னா என்ன உன்கிட்ட ஒரு வார்த்தை பேசனும்..அது போதும்‌ எனக்கு..'  என்று சூர்யா நினைத்தவள் மணியை பார்த்தவள்.. நேரம் இருந்தது காலேஜ் செல்ல..
"சரி" என்று காலேஜ் சென்றால் சூர்யா.. வேறு வழியில்லாமல் கவனத்தை படிப்பிலும் செலுத்த முடியாமல் தவித்தாள் சூர்யா.
எப்போது இரவாகும் அவன் நினைவில் நான் மூழ்கி போக வேண்டும் என்று எண்ணியவள்.. கல்லூரியும் முடிந்தது. ஸ்கூட்டியில் பறந்தவள் வீடு வந்து சேர்ந்தாள்.. ஆனால் வீடு பூட்டி இருந்தது.
"என்ன" என்று‌யோசித்தவள் காலையில் அண்ணி கூறியது தான்‌மறந்து போனது நினைவிற்கு வந்தது'  அகில் நீ‌ எனக்குள்ள வந்தா இந்த உலகத்தையே மறந்து போயிடறேன் டா ஏன்னே தெரியல..?" என்று தலையில் அடித்தப்படி.. பக்கத்து வீட்டு மாமியிடம்சாவியை பெறசென்றவள்..
"என்னசூர்யா நீ கல்யாணத்துக்கு போகலேயா..?" என்று மாமி கேட்க..
"செமஸ்டர்‌ மாமி.. போகமுடியல" என்று சூர்யா சாவியை வாங்கி விட்டு வீட்டினுள் நுழைந்தாள்.
பையை காற்றில் பறக்கவிட்டவள்.. தன் ரூமிற்குள் சென்று கதவை தாழிட்டாள். தனது லேப்டாப்பை எடுத்து தனது மெயிலில் இருந்து அகிலிற்கு முதன் முறையாக காதல் கடிதத்தை எழுதினாள்.. இல்லை மெயிலை பறக்கவிட்டாள் காதல் தூதாய்..
"ஹாய்.. நீங்க அகில் தானே .. உங்களுடைய‌ கதைகள் தான் எனக்கு ரொம்பபிடிக்கும்.. நீங்க எழுதின பேரன்பு கதையில இருந்து நான்‌ இன்னும் வெயில கூட வரல.. அடுத்து காதலிக்க வருவாயோ..! உண்மையாலுமே உங்களை ஒவ்வொரு நொடியும் காதலிக்க தான்தோணுது .." என்று மெயில் அனுப்பி விட்டு காத்திருந்தாள்.
கால் மணி நேரம் இடைவிடாது.. மெயிலையே செக் செய்துக் கொண்டு இருந்தவள்.. சோகமானாள் அகிலிடம் இருந்து மெயில் வரவே இல்லை..
வயிறு பசி என்று கூறியது  பெட்ரூம் அறை சாப்பாட்டு அறையாக மாறியது.. விடாது மெயிலை செக் செய்து கொண்டே இருந்தாள்..
வீட்டில் வேலை இருந்ததால் கையோடு லேப்டாப்பையும்‌கூடவே எடுத்து சென்றாள்..வேலையின் நடு நடுவே செக் செய்தாள்.. மணி 8 ஆகியது எந்த பதிலும் வரவில்லை.. காத்திருந்து காத்திருந்து சோகமானவள் அலுப்பில் சற்று கண் உறங்க.. 8:13 க்கு.. டன்‌ என்று மெயில் ஒன்று வந்தது..
தன் மொபைலை பார்த்தவளுக்கு..எதுவும் வரவில்லை.. லேப்டாப் என்று லேப்டாப்பை பார்த்தவளுக்கு இன்ப அதிர்ச்சி அகிலிடம் இருந்து மெயில் வந்திருந்தது.
"உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி..! இப்படிக்கு அகில்" என்று இருந்தது.
'உன் நன்றிக்காக வாடா நான் காத்திருக்கிறேன்‌உன் அன்பு அது எனக்கு வேணும்டா' என்று சூர்யா மனதில் தோன்ற..
"அகில் ஐ லவ் யூ" என்று அனுப்பினாள் சூர்யா' இனி‌என்ன ஆனாலும் பரவாயில்லை.. எதுவாயினும் பார்த்துக் கொள்ளலாம்'  என்று சூர்யா நினைத்தாள். மெயில் அனுப்பியாகிற்று பதில் ..?
வந்தது அகிலிடம் இருந்து
"ஹாய் நான் அகில் தான்.. உங்களுக்கு என்னவேணும் நீங்க யாரு"  என்று அகிலின் மெயில் வந்தது.
'நானா.. நான்‌உன் சூர்யா டா..' என்று‌மனதில் நினைத்தவள்..
"அகில்
என்‌காதலே..! என் பேரு சூர்யா..! உன்னை மட்டுமே காதல் கொள்ள காத்திருக்கிறேன்" என்று சூர்யா பதில் மெயில் அனுப்ப..
அவர்களின்‌ மெயில் பழக்கமாகியது இருவருமே சூழ்நிலை மறந்துப்போயினர்.
"நீங்க எந்த ஊர்..?"
"நான் சென்னை தான் அகில்.. உங்களை சந்திக்கிறதுக்காக மார்னீங் ஹோட்டல் வந்தேன் ஆனா..! நீங்க இல்லை.."
"ஸாரி மேடம் நான்.. கொஞ்சம் வொர்க் விஷயமா  வெளிநாடு கிளம்ப வேண்டியதா இருந்துச்சு சோ இப்போ நான் இங்க தான் இருக்கேன்..!" 
"எந்த இடத்தில இருக்கீங்க அகில்..?"
"நான்‌ யாருன்னு உங்களுக்கு தெரியுமா..? என்னமோ பல வருடம் பழகினது போல பேசறீங்க.." 
"அகில் உனக்கு வேணாநான் புதுசா இருக்கலாம் ஆனா எனக்கு நீ..! என்‌உயிரு‌ என்‌உலகம் எல்லாமேநீ மட்டும் தான்டா‌.."
"என்னை நினைச்சு என்‌மீது இவ்வளவு காதலா..!"
"ஆமா காதல் தான் உன்னை நினைத்து என்‌காதலை மனதினுள்‌ பதித்தவளடா நான்.."
"ஆச்சரியமே ..!உங்களை‌போல் ஒருவரை நான்‌ பார்த்ததே இல்லை..!"
"என்‌ போல் உன்‌சூர்யாவை போல் வேறு‌யாரும் இருக்க கூடாது நான்‌ ஒருவள்‌ உனக்கானவளாய்‌ மட்டுமே எப்போதும் இருக்க வேண்டும்.."
"நீங்க என்னை நினைச்சு காதல்ல விழுகிறது தப்போ இல்லை என்‌ மீது காதல் கொண்டு பலர் வாழ்கிறார்கள்.."
"பலர் வாழட்டும் ஆனால் உன்னால் மட்டுமே நான் வாழ வேண்டும் என்‌உயிர் மூச்சு நீ மட்டுமே புரிஞ்சுக்கோடா உன்னையே நினைச்சு நினைச்சு‌ மனசுக்குள்ள அவ்வளவு காதலை வச்சு இருக்கேன்‌அதை உன்கிட்ட மட்டுமே நான்‌சொல்லனும்‌ப்ளீஸ் டா.." என்று சூர்யா‌அந்த மெயில் கெஞ்ச
"உங்க அன்பு புரியிது ஆனால் எதனால்..?"
"உன்‌மீது உன்‌எழுத்துக்கள்‌மீது பைத்தியம் கொண்டவள் டா நான்‌ உன்‌ மனசு மட்டும்‌ எனக்கு வேண்டும். என் கூட பேசுவியா ப்ளீஸ் சொல்லுடா.." என்று‌தனது உரிமையை‌மீறினால்..
அகில் ஆச்சரியமாக தான் பார்த்தான் அந்த மெயிலை ரசிகை என்றால் ஒர் அளவு தான் ஆனால் இவள் அந்த அளவை எல்லாம் கடந்து செல்கிறாளே.. அப்படி நான் என்ன செய்து விட்டேன் இப்படி என் மீது பைத்தியமாக இருக்கிறாளே என்று அவளது வார்த்தைகளில் வந்த  மெயிலேயே புரிந்தவன்.
"நான் பேசுவேன் உங்கிட்ட"  என்று மட்டுமே அகில் அனுப்பி இருந்தான்.
'ஒருபெண்ணால் இப்படி கூட காதல் கொள்ள இயலுமா என்ன..? என்ன பெண் இவள்..இவளை விலக்கிவிட முடியவில்லையே..' என்று அகிலின் மனதினுள்.. சூர்யாவின்‌எண்ணம்‌அலைபாய தொடங்கியது.
"ரொம்ப தேங்ஸ் டா ஐலவ்யூ தப்பா எடுத்துக்காதீங்க என் அன்பை எப்படி சொல்லறதுன்னு தெரியல ரொம்ப நாள் மனசுக்குள்ளே வச்சிருந்தேனா அதான்"என்று சூர்யா கூற..
"பரவாயில்லை" என்று அகில் புன்னகை ஸ்மைலியோடு அனுப்ப..
சூர்யாவோ தனது இதயத்தை ஸ்டிக்கர் மூலம் அனுப்ப.. அங்கு இதயம்‌ மட்டும் அல்ல..காதலும்‌பறிமாற‌பட்டது.
மறுநாள்..!
காலேஜ் லீவ் போட்டு விட்டாள் அகிலிடம் பேச வேண்டும் என்பதற்காகவே.  வீட்டில் அனைவரும் இரவு தான் வருவார்கள் என்று தான் மட்டும் வீட்டில் தனியாய் நேற்று அகிலிடம் தனது காதலை சொல்லியவளிற்கு மனம் போராசை கொண்டது அவனும் தன்னை காதலிக்க வேண்டும்‌என்ற‌எண்ணம் ஓங்க..
அதை மெயிலிலேயே அனுப்பினாள்.
"ஹாய் அகில் குட்மார்னீங்க..என்னபண்றீங்க..? சாப்பிடீங்களா..? இப்ப கூட உங்க கதை தான் படிக்கிறேன்.."
உடனே பதில் வந்தது.. "ஹாய்.. நான் ரொம்ப சோர்வா இருக்கேன் மார்னீங் பேசறேன்  இன்னைக்கு கொஞ்சம்‌பிஸி .." என்று‌வந்த மெயிலை கண்டு சூர்யாவுக்கு மனம்‌ வருத்தமாகி தான்‌போனது.
வீட்டினுள்‌ தனியாய்‌ தனிமையில் தவித்தாள் சூர்யா.. பேசாம காலேஜ் போய் இருக்கலாம்‌ என்று தூங்கி தூங்கி எழுந்தாள்.
மதியம்‌ ஏதாவது மெயில் வருகிறதா என்று‌ பார்த்தவளிற்கு எதுவும் வரவில்லை.. சோர்ந்து போனவள் தூங்கிதான்‌போனாள் காலீங் பெல் சத்தம் கேட்கும்‌வரை அயர்ந்து தான்‌ தூங்கினாள்.
"வரேன்‌.." என்று சூர்யா கதவை திறந்தவள். அப்போது தான் இரவானதை உணர்ந்தவள்..
அனைவரும் வந்து இருந்தனர்.. கயல் வேறு தூக்க கலக்கத்தில் இருக்க.. கயலை வாங்கியவள் தனது ரூமிற்கு சென்று படுக்க வைத்தாள்.
"அண்ணி சூடா டீ வைக்கட்டுமா..?" என்று சூர்யா கேட்க..
"வேண்டாம் சூர்யா.. ! நல்லா ரெஸ்ட் எடுக்கனும் மேரேஜ்ல ரொம்பவே வேலை.." என்று ஆள் ஆளுக்கு அவர்களது அறையில் தஞ்சமடைய‌ சூர்யா தனது அறைக்குள் வந்து தஞ்சம் புகுந்தாள்.
அப்போது "ஹாய் சூர்யா‌.." என்று அகிலிடம் இருந்து மெயில் வந்திருந்து. எப்போது வந்தது என்று நேரத்தை பார்த்தவள்  இப்போது தான் வந்திருக்க பதில் அனுப்பினாள்.
"எங்கடாபோன ..?" என்று உரிமையோடு சூர்யா மெயில் அனுப்ப..
"அவ்வளவு காதலா" என்று அகில்  கேட்க..
"ஆமாண்டா நீ இல்லாம என்னால ஒரு நொடி ஒரு பொழுது வாழ இயலாது நான் நேத்து நைட் துங்கவே இல்லை.."
"ஓஓஓ ஏன் நீங்க தூங்கல..?"
"உன்னால தானடா..!  நித்தமும்‌என் கனவுல வந்து தொல்லை பண்ணிட்டே இருந்தா.."
"ஹலோ ..!"
"ஸாரி அகில்.. நீங்க எத்தனையோ இரவு என்னை தூங்க விட்டதே கிடையாது நித்தமும் உங்க நினைவுகளில் தான் நிறைஞ்சு இருப்பேன்.. என்னடா இவ இப்படி பேசறாளேன்னு நினைக்காதீங்க என் அன்பை எப்படி காட்டறதுன்னு தெரியல ..?" என்று சூர்யா கூற..
"புரியிது ..! சூர்யா உங்க அன்பு புரியாம இல்லை..! புரியிது ஆனா எனக்கு இது புதுசு ஆச்சே..! நட்போடு பழகுவோம் பிறகு பார்க்கலாம்.." என்று அகில் கூற..
"நட்பா நான் உன் மேல பைத்தியமா இருக்கேன் டா காதல்ல.. ஆனா நீ நட்புன்னு சொல்லற நீ வேணா நட்போடு பழகு ஆனா நான் என் அகில் அப்படி தான்.."
"இப்படி இருக்காதீங்க நான்‌ யாருன்னே தெரியாது என் மேல நீங்க இவ்வளவு அன்பு வைக்காதீங்க.."
"அகில் அந்த ஒரு பேர் போதும் நான் உயிர் வாழ.. அன்பு வைக்கிறது தப்பா அகில்.. உங்க கதைகள்ல அவ்வளவு அன்பை ஒளிச்சு வச்சு இருக்கீங்க.."
"அது கற்பனை‌..!  இது நிஜம்..!  நிழலும் நிஜமும்‌ என்றும்‌ஒன்றாகாது சூர்யா.."
"ஏன்‌ஆகாது அகில் நான்‌ உனக்கு வேண்டாமா..?"
"இப்படி பேசினா எப்படி சூர்யா எனக்கு நீங்க யாருன்னே தெரியாதே..?"
"அவ்வளவு தானே தெரிஞ்சுக்கோங்க.."  என்று  அன்று தொடங்கிய பேச்சுகள் தனது அன்பினால் அகிலை கட்டிப்போட்டாள் சூர்யா. சூர்யாவின் உண்மையான அன்பில் தொலைந்து தான் போனான் அகில்.
சூர்யா என்று அழைத்தவன் என் சூர்யா‌ என்று கூறுமளவிற்கு அவனை காதல் பித்தனாக்கிவிட்டாள் இரண்டு நாளில் சூர்யா.

உயிர் கொள்கிறேன் உன்னால் - Good Ending(முடிவுற்றது)Tempat cerita menjadi hidup. Temukan sekarang