நிஜம்..!
மழை நன்றாக பிடித்திருந்தது இவ்வளவு நேரமாகியும் இருவரும் வராததால் நித்திலா வேதனை கொண்டாள்.
"நித்திலா வெளியில மழை வேற.. இரண்டு பேரும் மழை நின்னதுக்கு அப்புறம் கூட வரலான்னு நினைச்சு இருப்பாங்க நீ ஏன் இவ்வளவு வேதனைப்படற..? சூர்யா பார்த்துக்குவா" என்று ராஜேஷ் கூற..
"சூர்யாவை நினைச்சு தான்பயமா இருக்குங்க நீங்க ஆம்பளை..? பயத்தை வெளியில காட்டிக்க மாட்டீங்க ஆனா அவளுக்கு ஒரு அம்மா இருந்தா எப்படி அவளை பார்த்துக்குவாங்களோ..? அதை விட அதிகமா தான் நான் பார்த்துக்கனும்..? என் மனசுல என்னவோ சரியின்னு படல..!" என்று நித்திலாவின் மனம் வேதனை கொண்டது.
"எனக்கும் புரியிது நித்திலா புரியாம இல்லை சூர்யா பார்த்துக்குவா எதுவும் ஆகாது.. நாம எவ்வளவு தைரியமா வளர்த்து இருக்கோம் மழை நின்றதும் அவங்களாவே வந்திடுவாங்க இல்லை ஸ்கூட்டி ரிப்பேர் ஆகி இருக்கும்.. எப்படியும் போன் வரும் சிக்னல் கிடைக்காமா இருக்கலாம்..?"
"கொஞ்சமாச்சும் மூச்சு விடுங்க எனக்கு கிச்சன்ல வேலை இருக்கு.." என்று நித்திலா நகர..
'நம்பல கடைசிவரைக்கும் பேசவே விடமாட்டா போல இருக்கே' என்று வாசலிற்கு வந்து நின்றான் ராஜேஷ்..
"என்னடா வாசலையே பார்த்துட்டு இருக்க.. இன்னும் பிள்ளைங்க வரலேயா " என்று மழையில் நனைந்தப்படி வந்தார் சிவராமன்.
"அப்பா..! இந்த மழையில நீங்க எங்க போயிட்டு வரீங்க.."
"பார்க்குக்கு தான்டா ராஜேஷ்சு.."
"மழை காலம் பா ஏன் வெளியில போறீங்க போங்க போய் தலையை துவட்டுங்க நான்போய் சூர்யா வரலான்னு பார்த்துட்டு வரேன்..!" என்று ராஜேஷ் வெளியே கிளம்பினான் நித்திலா சொல்லியது போல் ராஜேஷ்சின் மனதிலும் பயமாய் தான் இருந்தது.
'சூர்யா லேட்டா ஆனாலும் போன் செய்ய தவறியது இல்லை.. ஆனால் இன்று என்ன ஆகியிருக்குமோ' என்ற பயத்திலேயே குடை உடன் சென்றான்.
அங்கோ..
சூர்யாவின் நிலை கவலையாகி போனது..நினைவிற்கு வரவே அவளால் முடியவில்லை 'அகில் உன் நினைவுகள் என்னை விட்டு எப்போதும் விலகியே போகாதுடா உன்குரல் அது மட்டும் தான் என் காதுல கேட்டுட்டே இருக்கு ஒரு வருஷமா..' என்று பெருமூச்சோடு ஸ்கூட்டியை எடுத்தாள்.
பாதிதூரத்தில் மழைபிடித்துக்கொள்ள வண்டியை நிறுத்தினாள் மக்கள் இருந்தாலும் நினைவில் அகில் மட்டும் நிறைந்திருந்தான்.
மழை நின்றபாடில்லை அகிலனின் நினைவுகளும் சூர்யாவினுள் நின்றபாடில்லை கயல் கன்னத்தில் கைவைத்தப்படி அமர்ந்திருந்தாள்.
"இன்னும் எவ்வளவு நேரம் சூர்யா..!" என்று கயல்கேட்க..
"போகலாம் கயல்..ஆனா மழை அதிகமா பெய்யிதுல.."
"வீட்டுக்கு போகனும் சூர்யா பயமா இருக்கு..!" என்று கயல் அடம்பிடிக்க சூர்யா கயலை இறுக்கி அணைத்துக்கொண்டாள்.
"போலாம் கயல்குட்டி போலாம் மழை கொஞ்சமாவது நிற்கட்டும்" என்று சூர்யா கூற..
மணியை பார்த்தவள் 9 ஆகி இருந்தது. 'இதற்கு மேல் நிற்க இயலாது' என்று கயல் நனையாமல் இருக்க தன்னுடைய ரெயின் கோர்ட்டை போட்டுவிட்டாள்.
"தூங்கிடாத கயல்" என்று தனது சால் கொண்டு தன்னோடு அணைத்தாள். மழை வேறு நின்றபாடில்லையே என்ற வெறுப்பில்.. சிறு தூரம் தான் சென்று விடலாம் என்று ஸ்கூட்டி எடுத்தவள் ஸ்டார்ட் ஆக மறுத்தது. இறுதியாக ஸ்டார்ட் ஆக வேகமெடுத்தாள்.
சிறிதுதூரம் சென்றவள் ஸ்கூட்டியின் பின்ஏதோ மோத தட்டு தடுமாறியப்படி ஸ்கூட்டியை தாங்கியவள் பேலன்ஸ் தாங்காமல் கீழே விழுந்தார்கள்.
பின்னால் வந்த கார் மோத அதிலிருந்து ஆதி இறங்கினான்.
ஸ்கூட்டி அவர்கள் மீது விழுந்திருக்க
"மேடம் எதுவும் ஆகலேல" என்று முதலில் ஸ்கூட்டி யை எடுத்து நிறுத்தியவன் பின்பு சூர்யாவை கண்டான்.
கண்கள் அவளை விட்டு அசைய மறுத்தது. காதல் மோகம் கொள்ள செய்தது அவள்விழிகள் ஓர்நிமிடம் தன்னிலை மறந்தவன் அவளின் கையை இறுக்கமாக பற்றியவன்.. அவளை தன் கண்ணை விட்டு அசையாத வண்ணம் நிலைப்படுத்தினான்.
சூர்யாவோ தன் பின்னால் இருந்த கயலை தான் தூக்கினாள்.
"கயல் ஏதாவது அடிபட்டுச்சா..?" என்று சூர்யா துடிக்க..
கயல் விம்மினாள் நினைவிற்கு வந்தவன் கயலை தூக்கினான். அவனை திட்டுவதற்கு ஆரம்பித்தவள்.
கயலோடு சேர்த்து சாலும் வர..பின் திரும்பியவன் சாலை சூர்யாவிடமே விடுத்து விட்டு கயலை காரினுள் கொண்டு போனான்.
"ஓஓஓ கண்ணா..? ஒண்ணுமில்லை..ஒண்ணுமில்லை சாக்லேட் சாப்பிடறீங்களா..?" என்று ஆதி கயலை சமாதனப்படுத்தினான். சூர்யாவிற்கே ஆச்சரியம் 'கயல் தன்னைவிட்டு யாரிடமும் ஒட்டி கொள்ள மாட்டாள் ஆனால் இவனிடம் ஒட்டிக் கொள்கிறாளே' என்று ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்ய நினைத்தவள்.
கயலை காரில் உட்கார வைத்துவிட்டு.. "மேடம் ஸாரி மழையில ரோடு.. தெரியல.." என்று மன்னிப்புக்கேட்டான்.
"இனியாவது ஒழுங்கா ரோட்டை பார்த்து ஓட்டுங்க.." என்று ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்வதிலேயே குறியாக இருந்தாள்.
"மேடம் ரிலாக்ஸ்..! இந்த மழையில ஏன் இப்படி கஷ்டப்படறீங்க வாங்க நான் கார்ல டிராப் பண்றேன்" என்று ஆதி கூற..
"இல்லை இல்லை உங்களுக்கு கஷ்டம் வேண்டாம்.." என்று மறுத்தாள்.
ஆனால் கயலோ காரை விட்டு வர மறுத்தாள்.. "சூர்யா ப்ளீஸ் வா வீட்டுக்கு போலாம்" என்று அழுகையோடு பிஞ்சு கேட்க..
வேறு வழி இல்லாமல் வண்டியை ஓரமாக பார்க் செய்தாள்.
“ரொம்ப தேங்ஸ்" என்று கோபமாக சூர்யா காரில் ஏற
"முன்னாடி வா சூர்யா " என்று கயல் அழைக்க..
“கயல் நீ இருக்கியே.." என்று கயலை தன்மடியில் தூக்கி உட்கார வைத்துக்கொண்டாள்.
"உங்க அட்ரெஸ் சொல்லறீங்களா மேடம்..?" என்று ஆதி கேட்க..
சூர்யா பதில் அளித்தாள். "அங்கிள் நீங்க ரொம்ப ஸ்வீட்" என்று அவனது கன்னத்தை கிள்ளியவள்.
"யா இந்த ஸ்வீட் டால் நேம் என்ன ன்னு தெரியவேண்டாமா..?" என்று கயல் குட்டியை பார்த்தவன் ஓரக்கண்ணால் சூர்யாவை நோட்டமிட்டான்.
"என்னுடைய பேரு கயல் இது என் சூர்யா.."
"ஓ உங்க சூர்யாவா..? அழகா தான் இருக்காங்க..என்னுடைய பேரு ஆதித்தியன்" என்று புன்னகைத்தான்.
"ஓஓ சூப்பர் பேர்தான் என்னை மாதிரியே அழகா இருக்கறீங்க.." என்று கயல் ஆதியின் கன்னத்தை கிள்ளியவள்.
"ஓஓ கடவுளே சீக்கிரம்வீடு வரகூடாதா இவனுடைய இம்சை தாங்க முடியலேயே வேற" என்று மனம் முழுவதும் வீட்டிற்கு செல்ல துடித்தது..
கயல் அவனிடம் விளையாடியப்படியே வர.. சூர்யாவின் எண்ணம் அகிலிடம் சென்றது.
ஒருவழியாக வீட்டிற்குள் வந்து சேர்ந்தவள் கார் வந்து நிற்கவும் நித்திலா அனைவரும் வெளியே வந்தனர்.
அடைமழை வெளுத்து வாங்கி கொண்டு இருந்தது காரில் இருந்து சூர்யா இறங்க..
"என்னஆச்சு சூர்யா..? வண்டி எங்க.." என்று நித்திலா பதறிபோனாள்.
ஆதி சூர்யாவிற்கு முன்இறங்கி.. வீட்டினுள் வந்தவன்.
"பயப்படாதீங்க மேடம்.. ஒருபிரச்சனையும் இல்லை ரிலாக்ஸா இருங்க..! கயல் குட்டி ஆதியிடம் இருந்து அவங்க அம்மாவிடம் தாவியது..
"மழையில ரோடுசரியா தெரியல..இவங்க ஸ்கூட்டியில இடிச்சுட்டேன்.. ஸ்கூட்டி ரிப்பேர் மேடம் நான் சரிபண்ணி கொடுத்தறேன் என்னால தான்.." என்று ஆதி ஒட்டு மொத்த தப்பையும் அவனே ஏற்றுக்கொண்டான் சூர்யாவை பதில் பேசவிடவே இல்லை.
எரிச்சலாய் இருந்தது சூர்யாவிற்கு.. "தேங்ஸ் தம்பி வீட்டுக்கு கொண்டு வந்து விட்டதுக்கு" என்று சிவராமன் நன்றி தெரிவிக்க..
"சரிங்க நான் கிளம்பறேன்.." என்று விடைப்பெற்றவனை.. நித்திலா விடவில்லை "தம்பி இவ்வளவு பெரிய உதவி செஞ்சு இருக்கீங்க ப்ளீஸ் வாங்க உள்ள காப்பி சாப்பிட்டு போகலாம்.." என்று கூற..
தனது அண்ணியின் கையை பிடித்து அழுத்தினாள் சூர்யா.. "யாருன்னு தெரியாது எதுக்கு வீட்டுக்குள்ள கூப்பிடறீங்க..?" என்று காதை கடித்தாள்.
ஆதியோ அதை கவனிக்க தவறவில்லை "வேண்டாம்.. மேடம் எங்க வீட்டுல எனக்காக காத்திட்டு இருப்பாங்க நான் கிளம்பறேன்" என்று கிளம்பியவன் மனதில்
'யாரு ஆதி உனக்காக அங்க காத்திட்டு இருப்பா யாருமில்லையே..' என்ற ஏக்கத்தோடு அந்த குடும்பத்தை பார்த்துவிட்டு காரை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.
அவன் சென்றபின் சூர்யாவை கடித்துக்கொண்டாள் நித்திலா..
"என்னசூர்யா ..இது பழக்கம் இவ்வளவு தூரம் உன்னை கொண்டு வந்து விட்டு போய் இருக்காங்க.. அவங்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டாம் இப்படி எதுக்காக பண்ற நீ ..?” என்று கண்டிக்க..
"கயலோ..அந்த அங்கிளை சூர்யாவுக்கு சுத்தமா பிடிக்கல ம்ம்மு அதான் .." என்று கயல் நமட்டு சிரிப்பு சிரிக்க..
"விடு நித்திலா.. குழந்தைங்க நனைச்சு வந்து இருக்காங்க போய்.. துண்டை குடு துவட்டட்டும்" என்று தனது மாமனார் சொல்லவும் இடத்தைவிட்டு நகர்ந்து போனாள் சூர்யா.
நினைவுகள்
ஒரு வருடத்திற்கு முன்பு..
அறையில் தனது காலேஜ் புக்கிற்குள் ஒளித்து வைத்திருந்த காதல் கொள்கிறேன் நாவலை எடுத்தவள்..
"நானும் தினம் காதல் கொள்கிறேன் உன்னால்" என்று சூர்யாவின் மனம் பதில் அளித்து.
அந்த புத்தகத்தின் முதல் பகுதியை திருப்பியவளின் கண்ணிற்கு..
விழி பாவை இரண்டில்
மிரட்டி மிரட்டி ..!
என்னை அவள் வசப்படுத்திக்கொள்கிறாள்..!
வேண்டும் என்று
கேட்டு ஏங்க வைக்கும் விழிகள் வேண்டாம் என்று மறுத்தும்..!
நீ வேண்டும் என்று காதலில்
வலை வீசு என்னை உன்னுள்
அணைத்துக் கொண்டாயே..!
அதை படித்தவள் அவன் எழுத்துகளின் உள்ள மாயத்தினால் கிறங்கி தான் போனாள். ‘மாய கள்வனே..! எங்கிருக்கிறாய் நீ உன்னை என் வசப்படுத்திக்கொள்ள வேண்டும்..' என்று மனம் துடிக்கிறது.
'ஏன் ..? இத்தனை காதல் உன்மேல் என்று புரியவில்லை.. உன்மேல் கொண்ட காதல் மயக்கம் தெளிய நீ வேண்டும் மேலும் மயக்கம் கொண்டு அணைக்க நீ வருவாயா..!' என்று அந்த கதைகளில் வரும் கதாபாத்திரத்தில் தன்னையும் உருவகப்படுத்திக்கொண்டாள். சூர்யா.. அகிலை கனவிலும் நினைவிலும் காதலித்து காதலித்து சித்தம் கலங்கி தான்போனாள் சூர்யா..!
நிஜம்..!
"என்ன டா சொல்லற ..? ஆதி மனசுல பொண்ணா என்னால நம்பவே முடியலடா..?" என்று சஞ்சய் வியப்பாய் கேட்க
"ஆமாண்டா பொண்ணு தான் அவக்கூட நான் ஏழேழு ஜென்மம்மா வாழ்ந்த மாதிரி ஒரு பீல் அவ கண்ணு இருக்கே அது செம போதை டா..!"
"டேய்டேய்..! நீ யாடா ஆதி என்னால நம்பவே முடியலடா இப்ப கூட கையை கிள்ளி தான் பார்க்கிறேன் வலிக்கலேயே டா..!"
"என்னடா என்னை கிண்டல் பண்றியா.." என்று தனது லேப்டாப்பை அணைக்க சென்றவன்.
"டேய் டேய் இருடா ஆதி..! என் நண்பன் வெட்கபடறான் முதல் தடவையா பார்க்கிறேன்" என்று சஞ்சீவ் கிண்டல் செய்ய.
"போடா" என்று லேப்டாப்பை மூடி வைத்தான்.. சஞ்சீவ் மனதினுள்.. சந்தோஷம் குடிகொண்டது. இனி ஆதியின் வாழ்வு முழுமை அடைந்துவிடும். என்று மனம் முழுவதும் ஆனந்த கூத்தாடினான்.
ஆதியோ சூர்யாவை நினைத்து நினைத்து போதை கொண்டான்.
'என்ன கண்ணுடா சாமி.. அவள் சிரிக்கும் போது அவளுடைய கண்ணும்தானே சேர்த்துசிரிக்குது.. !’
என்று இருவரும் அவர்அவர் காதலில் போதைக் கொண்டு நிலவின்மடியில் இரவை கழித்தனர்.
- தொடரும்
![](https://img.wattpad.com/cover/292033091-288-k511711.jpg)
CZYTASZ
உயிர் கொள்கிறேன் உன்னால் - Good Ending(முடிவுற்றது)
Fantasyகாதலால் காதலை வெல்ல முடியுமா...? வென்றார்கள் இருவருமே ஒருவரை ஒருவர் அன்பால்... ஆதி ❤️சூர்யாவாக