நேற்று பெய்த்த மழையில் முளைத்த காளானைபோல..! சூர்யாவின் மனம்.. ஏனோ ஆதியை நினைவிற்கு கொண்டு வந்தது.
ஆனால் ஓர் நிமிடம் தான்..!
மறுநிமிடமே.. அவளது மனதில் 'என்னை விட்டு போனாலும் உன்மீதான என்காதல் மாறாது டா..' என்று மனம் முழுவதிலும் அகில் குடிகொண்டு அவளிற்கு காதல் போதனையை ஏற்றிக்கொண்டு இருந்தான்.
நித்தமும் உன் மடியில்
உன் நினைவில்
தவழ வரம் தருவாயா..!
"ம்ம்ம்தருகிறேன்..கண்ணம்மா..! . உன்நினைவில் இருந்து அகன்று நிஜத்திற்கு வரும் போது அல்லவா இயலும்.
"முடியாதடா இப்போதே உன்மடியில் தவழ வேண்டும்.." சிறு குழந்தை போல் சூர்யாவின் மனம் அவனிடம் வேண்டி நின்றது.
அகிலின் மடிதனில் தன்னை தொலைத்தவள். அவன் விட்டு போன பின்பும் மனம்முழுவதும் அவனே நிறைந்திருந்தான்.
"சூர்யா சூர்யா.." என்று வழக்கம் போல் நித்திலாவின் குரல் காதோரம் கயவனின் மடியில் நித்திரைக்கொள்ளும் போது கனவு கனவாகியே விட்டது
"சூர்யா நேரமாச்சு எழுந்திரி" என்று நித்திலா போர்வை விலக்கிவிட.. என்றோ படித்த கதையிலிருந்து தன்னை மீண்டு எடுக்காதவள்.. சற்று முகவாட்டதோடு போர்வை விலகிவிட்டவள்..
"என்ன அண்ணி..? இன்னும் கொஞ்ச நேரம்" என்று போர்வை மீண்டும்போர்த்தியவள்.
"இன்னைக்கு ஆபிஸ் போகலேயா மணி எட்டாச்சு..! ஸ்கூட்டி வேற ரிப்பேர் மறந்துட்டியா பஸ்ல போகனுமே" என்று நேற்று நடந்தவற்றை நினைவிற்கு கொண்டு வந்தாள் நித்திலா.
"ஐய்யோ கடவுளே அண்ணி..இன்னைக்கு முக்கியமமான பிரசண்டேஷன் இருக்கு மறந்தே போயிட்டேன் கயல்.." என்று வேகவேகமாக எழுந்து கயலை தேடியவள்.
"ம்ம்ம்..! கயலை தேடாத சூர்யா அவ ஸ்கூல் போயிட்டா..என்று நித்திலா" கூறிவிட்டு செல்ல..!
எழுந்தவளின் மனதில் ஆதியை திட்டியப்படியே.. ! "இவனா ல இன்னும் என்னஎன்ன பிரச்சனை காத்திருக்கோ நானா இவனை வந்து என் வண்டியில மோத சொன்னேன்.. ?" என்று அவனை வசைப்பாடிக் கொண்டே கிளம்ப தயாரானாள்.
"ஆமா அண்ணி.. வீட்டுல யாரேயும் காணோம் இந்நேரம் வீடு களோபரமா இருக்குமே.."என்று சூர்யா கேட்கவும்
"இவ்வளவு லேட்டா நீ வந்துட்டு வீடு அமைதியா இருக்கேன்னு கேட்கறியா..நீ எழுந்திரிக்க எப்படி இருந்தாலும் லேட்டாகுன்னு தெரிஞ்சுதான் சூர்யாவை உங்க அண்ணா கூட அனுப்பி வச்சுட்டேன் " என்று நித்திலா வேகவேகமாக லன்ஜை பேக்செய்தாள்.
"சரி அண்ணி நான் கிளம்பறேன்.." என்று தயாரானாள்.
'அரைமணிநேரத்தில் ஆபிஸ் செல்ல வேண்டும் அதுவும் இந்த டிராபிக்கில் எப்படி ஸ்கூட்டி இருந்தால் பறந்திருப்பேனே' என்று பதற்றத்தில் இருந்தவளிற்கு வெளியே ஆச்சரியம் காத்திருந்தது.
வெளியே ஆதி ஸ்கூட்டியோடு நின்று இருந்தான். "ஹாய்மேடம் குட்மார்னீங்" என்று ஆதி புன்னகைக்க.
கோபம் வந்தவளாய்.. "நீ எப்படி அதுவும் ஸ்கூட்டி..?" என்று பதற்றமானவள்.
"எனக்கு கீ தேவை ஆனா மெக்கானீக்கு கீ தேவை இல்லையே..!என்னால தானே உங்களுக்கு நேத்துபிரச்சனை அதான் சரி பண்ண நினைச்சேன்.." என்று ஆதி கூற..
"தேங்ஸ்" என்று உரைத்துவிட்டு ஸ்கூட்டியை எடுத்தவள்.
வெளியே ஏதோ சத்தம் கேட்க நித்திலா வெளியே வந்தாள். "தம்பி நீங்க எப்படி ..? வாங்க உள்ள வாங்க" என்று அழைத்தாள்..
"அண்ணி நான்வரேன்..!" என்று பறந்தாள் சூர்யா..
வீட்டினுள் சென்றவன் நித்திலா காப்பியை கொடுத்து அவனை உபசரித்தாள்.
"நீங்க தப்பா எடுத்துகாதீங்க தம்பி ..? சூர்யாவுக்கு இன்னைக்கு மீட்டிங் அதனால் தான் கொஞ்சம்டென்ஷனா இருக்கா..?"
'டென்ஷனா அவளா.. அது கூட அழகு தாங்க' என்று மனதில் நினைத்தவன்.." பரவாயில்லை மேடம்.. உங்க காப்பி சூப்பர் கயல் இல்லையா.." என்று எழுந்தவன்..
"கயல் ஸ்கூல்போயிட்டா தம்பி"என்று நித்திலா கூற
"அப்ப சரிங்கநான் வரேன்" என்று ஆதி எழுந்தான்..
"உங்களை பத்தி எதுவும் சொல்லவே இல்லையே நைட்டு எவ்வளவு பெரிய ஹெல்ப் பண்ணி இருங்கீங்க இப்ப கூட ஸ்கூட்டியை ரெடி பண்ணி வந்து தந்து இருக்கீங்க எதுக்கு தம்பி இவ்வளவு உதவி செய்யறீங்க இதுக்கு எல்லாம் நாங்க என்ன செய்ய போறோம்.." என்று நித்திலா தர்மசங்கடாமாய் உணர..
"வேண்டாம் நீங்க அப்படி நினைக்காதீங்க என்னால தான் தப்பு நடந்துச்சு அதை சரிசெய்ய தான் முயற்சிக்கிறேன்.. அவங்களுடைய கோபமும் நியாயம் தானே எனக்கு முக்கியமான வேலை இருக்கு ங்க நான் கிளம்பறேன்.."என்று ஆதி கிளம்பினான்.
"தம்பி உங்க பேரு.." என்று நித்திலா கேட்க..
"ஆதித்தியன்.." என்றுபுன்னகையோடுகூறியவன்.
"அடுத்த முறை வீட்டுக்கு வரும்போது கண்டிப்பா சாப்பிட்டு தான்போகனும்.." என்று கண்டிப்போடு நித்திலா விடை கொடுத்தாள்..
"சரிங்க" என்றவன் மனதிலோ 'என்னவளே நான்தான் கொடுத்து வைத்தவன் என்று நினைத்தேன் ஆனால் நீ அல்லவா கொடுத்து வைத்தவள் அன்பாய் ஆதரவாய்.. உன்னை அரவணைக்க இப்படி ஒரு குடும்பமா எனக்கு தான் யாருமற்ற வாழ்வு வாழ்கிறேன் உன்மூலமாய் இந்த உறவுகள் கிடைத்தால் என்னை விட அதிக பாக்கியசாலி இந்த உலகத்தில் யாரும் இருக்க மாட்டார்கள்' என்று மனதில் நிறைவோடு கிளம்பினான்.
ஆபிஸிலோ அனுவிற்கு பைத்தியமே பிடித்து விடுவதுபோல் உட்கார்ந்து இருந்தாள். டென்ஷனோடே வந்த சூர்யாவோ அவளை கண்டதும் சிரிப்பு தான் வந்தது.
"என்னமேடம்.. எப்படி இருக்கீங்க..?" என்று சூர்யா அனுவின் தோளை தட்டியவள்..
"எங்கடிபோன..? எத்தனைபோன் கால்..? பிரசண்டேஷன் பைல் உங்கிட்ட தானே இருக்கு.. எப்படி நான்ரெடி பண்ணமுடியும் இந்த ஹெட் வேற.. நைட்டு புல்லா டார்ச்சல் டி" என்று அவளது புலம்பல்களை ஓரமாய் கேட்டவள்.
தனது லேப்டாப்பை ஆன் செய்து அரைமணி நேரத்தில் மீட்டிங்க்கு தேவையான பைல்களை முடித்தவள் அதை பென்டிரைவில் காப்பி செய்து அனுவிடம் நீட்டினாள்.
"அப்ப்ப்பபா என்ன வேகம்..? இதுக்குதான் சூர்யா வேணுங்கிறது.. !" என்று அனு புகழ்ந்த படி சொல்லிக்கொண்டே செல்ல..
"ஸ்டாப் ஸ்டாப் மேடம்.. போங்க போயி வேலையை பாருங்க ஹெட் வந்தா நீ பண்ணதா சொல்லிக்கோ"..என்று சூர்யா கூற..
"வேண்டாம் தாயே.. உனக்கு இவ்வளவு அறிவு எல்லாம் கிடையாதேன்னு ஹெட்டு நக்கலடிப்பாரு நீயாச்சு உன் மீட்டிங் ஆச்சு" என்று விலகியே நின்றாள் அனு..
மீட்டிங்கிற்கு நேரமாகியதால் வேகவேகமாக சென்றவள்.
தன்னை தயார்ப்படுத்திக்கொண்டாள்..
சூர்யா மீட்டிங்கில் ஒரு புறம் தன்னை தொலைக்க ஆதியோ சூர்யாவின் நினைவில் தன்னை தொலைத்தான்.
"ஏய்.. ஆதி கேளுடா லைன்ல இருக்கியா..?" என்று சஞ்சய் பேச
"இருக்கேன் டா சொல்லுடா"என்று ஆதி வெறுப்புடன் கூற..
"என்னடா அந்த பொண்ணு நியாபகமா இருக்கியா..? இப்ப நான் பேசினா கூட வெறுப்பா தான் பீல் பண்ணுவ போல.." என்று சஞ்சய் கேட்க..
"ஆமாண்டா காலையில அவளை போய்பார்க்கிறேன்.. அப்படியே புத்தம்புது ரோஜா மாதிரி அவ்வளவு சிலிர்ப்புடா எனக்குள்ள.. கடவுள் ஏன் அவளை இவ்வளவு அழகா படைச்சான்.. அவ கண்ணு தான் கொல்லுதுன்னா பார்த்தா அவளுடைய இதழ்களோ.." என்று ஆதி தனது காதலை மறைக்க முடியாமல் தவித்தான்.
"டேய் டேய் ஆதி நீ இப்படி இருக்கிறது எனக்கு சந்தோஷம் தான்..! ஆனா இந்த விஷயங்களை அந்த பொண்ணுக்கிட்ட சொல்லுடா என்கிட்ட சொல்லி என்ன யூஸ்.." என்று சஞ்சய் கூற..
"புரியிதுடா.. நான் முயற்சி பண்றேன்.. சரி சொல்லுடா எதுக்குமார்னீங்கே கால் பண்ணி இருக்க... " என்று ஆதி கேட்க..
"மறந்துட்டியா.. நீ எதுக்காக சென்னை போனேன்னு ..?"
"மறக்கலடா ஆனா இப்ப தான் தெரியுது கடவுள் என்னை எதுக்காக சென்னை அனுப்பி வச்சான்னு.." என்று ஆதி சூர்யாவின் நினைவில் தொலைய..
"ஆதி.. உனக்கு அந்த பொண்ணு முக்கியம் தான் நான் இல்லைன்னு சொல்லல ஆனா.. உன் வேலையும் முக்கியம் தானே..உன்வேலையை முடிச்சுட்டு அப்புறம்.. அந்த பொண்ணை பாலோ பண்ணு ஓகே சொல்ல வை.." என்று சஞ்சு காதல் ஐடியாக்களை தெளிக்க..
"சரிடா ஆனா.."
"என்ன ஆனா இன்னும் இரண்டு நாள்ல வரமுடியாது ஒரு வாரம் ஆகும் அவ்வளவு தானே.." என்று சஞ்சய் கேட்க
"எஸ்டா.. என்நட்புடா நீ" என்றுமெய்சிலிர்த்து தான் போனான் ஆதி.
"போதும்டா போதும் புல் அரிக்குது உன் லீலைகள் எல்லாம் ஸ்டார்ட் பண்றதுக்கு முன்னாடி வேலையை முடிச்சிட்டு மெயில் பண்ணு நான் அனுப்பனும்" என்று வீடியோவை ஆப் செய்தவன் சூர்யா நினைவில் இருந்து தன் வேலையில் முழ்கி தான் போனான்.
அப்போது அப்போது எட்டி பார்க்கும் சூர்யாவின்நினைவை தட்டி விட்டு வேலையில் தொலைந்தான்.
நினைவுகள்
ஒரு வருடத்திற்கு முன்பு..
தொட்டியிலில் ஆடும் குழந்தைப்போல் என்மனம் அவளையே தேடி துயில் கொள்கிறது..!
அன்பே என்னை தேடி எப்போது என்னுள் நுழைவாய்..! உன்னை தாங்கி நிற்கின்ற இதயம் உன் பிரிவை தாங்கி நிற்க மறுக்கிறது.. விதியோ நம்மை இப்படி பிரித்து வைத்து வேதனை துயரத்தில் ஆட்கொள்கிறதே என்று தன் எழுத்துக்களினால் ரசிகர்களின் மனதை மீண்டும் காதலில் ஆழ்ந்த.. தனது பேனாவை எடுத்தவன் நினைவில் தொலைத்தான் அகில்..
"அகில் ஸார்..!" அறையினுள் உள்ளே நுழைத்தார் அவனது வேலையாள்
அகில் நினைவுகளில் இருந்து மீளமுடியாமல் மீண்டவன்.." என்ன அண்ணா.?" என்று கேட்க..
"உங்களை பேட்டி எடுக்க பத்திரிக்கையில இருந்து வந்து இருக்காங்க ஸார்.. என்ன சொல்லறது..?" என்று தயங்கியப்படி நிற்க..
சற்றுயோசித்தவன்.."போங்க அண்ணா வரேன்னு சொல்லுங்க.." என்று எழுந்தான் அகில்.
தன்னை கண்ணாடி முன் நின்று ஆழமாக பார்த்தவன்..'வேண்டாம் அகில் உன் அடையாளத்தை யாருக்கும் காட்டாத இந்த பரிசு பேச்சு இது எல்லாம் ஒரு போதை அதை உன் தலைக்கு நீ ஏறவிடாத..! அப்புறம் உன்னை நேசிக்கிறவங்க கூட தூர தள்ளி போயிடுவாங்க..' என்று தன்னையே பார்த்து ஆழமாக கூறிக்கொண்டு கீழே வந்தவன்..
"வணக்கம் அகில் ஸார்.." என்று பிரபல டிவி நிறுவனத்தில் இருந்த பேட்டி எடுக்க வந்தவர்கள் எழ..
"வணக்கம்.." என்று சிம்பிளாக அமர்ந்தவன்..
"சொல்லுங்க என்ன விஷயம்" என்று.. அகில் கேட்க..
"ஸார்நான் உங்களுடைய பிக் பேன்..எப்படி உங்களால எழுத முடியிது.. உங்க வாய்ஸ் அதை கேட்டதும் நான் மெய்மறந்து போயிடேன்னு தான் சொல்லனும்..உங்களை பார்க்கனும் உங்களை பேட்டி எடுக்கனும் அதை எங்க சேனல்ல போடனும்.. ஸார்..!" என்று அந்த பெண்அடுக்கி கொண்டே போக..
"மேடம் என்னை தப்பா எடுத்துகாதீங்க..! எனக்கு இந்தவீடியோ பேட்டி கொடுக்கிறது எல்லாம் பிடிக்காது எனது எழுத்துகள் தான் என்னை பிரதிபலிக்கனும்.. நான் என் எழுத்துக்களுக்காக பிரதிபலிக்க கூடாது" என்று தெளிவாக அகில் மறுத்தான்..
அப்படி இருந்தும் அந்த பெண் விடுவாதாக இல்லை.. "ஸார் ப்ளீஸ் ஓரே ஒருபேட்டி.. உங்க ரசிகர்களுக்காக கூடாதா..உங்களை பத்தி அவங்களுக்கு எதுவும் தெரிய கூடாதுன்னு நினைக்கறீங்களா..?" என்று தனது பேச்சினால் அகிலை வலையில் சிக்க நினைத்தாள்.
சிரித்தவன் "என் ரசிகர்களுக்கு எனது எழுத்துகள் தான் அடையாளம் நான் இல்லை சரிங்களா..? என்னுடைய கேரக்டர் அழகு பணம்படிப்பு இது எதையும் அவங்க ரசிக்கிறது இல்லை அவங்க ரசிக்கிறது எல்லாம் என் கற்பனையில என் நினைவுகளில தோன்ற கதாபாத்திரங்களும் அவங்களுடைய கேரக்டரையும்தான்" என்று எழுந்தவன்..
"ஒருரசிகையா வாங்க பேசலாம்.. ஆனா அது எல்லாம் உங்களுக்குள்ளே வச்சுக்கோங்க அதை எல்லோருக்குமாக வெளிப்படுத்த நினைக்காதீங்க " என்று எழுந்தவன்..
"ஐ அட்மியர் யூ ஸார்..! ஒரு ரசிகையா உங்களுடைய ஆட்டோ கிராப் கிடைக்குமா.." என்று அந்த பெண் கேட்க..
பூத்த மலர்கள் புன்னகைப்பது போல் அவளிற்கு .. தனது அன்பை எழுத்துகளாய் பதிவிட்டு அனுப்பி வைத்தான்.
ஏமாற்றமாய் அந்த பெண் சென்றாலும் அவளது மனதில் ரசிகையாய் அகில் நின்றான்.
நிஜம்..!
மாலை வேளை சூரியன் தன்னை மறைத்துக்கொள்ள நிலவிற்கோ தன்கதிர்களினால் வண்ணமிட்டு வரவேற்றான்.
ஆதியோ சூர்யாவை காண அவளது அலுவலகத்திற்கே சென்றுவிட்டான். அங்கு சூர்யாவிற்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
-தொடரும்
ESTÁS LEYENDO
உயிர் கொள்கிறேன் உன்னால் - Good Ending(முடிவுற்றது)
Fantasíaகாதலால் காதலை வெல்ல முடியுமா...? வென்றார்கள் இருவருமே ஒருவரை ஒருவர் அன்பால்... ஆதி ❤️சூர்யாவாக