நிஜம்..!மாலை வேளை மயக்கம் கொள்ளும் மதி தனிலே மதியினை இழந்து தவித்தான் ஆதி.
சூர்யாவை காண ஆறுமணியிலிருந்து காத்திருந்தவன் எட்டு மணியாகியும் வரவில்லை அவளை நினைத்து நினைத்து நினைவில் தன்னை தொலைத்தவன்.
அப்போது சூர்யா ஆபிஸை விட்டு வெளியே வருவதை கண்டவன் அவளிடம் சென்றான்.
சூர்யாவே டென்ஷனோடு வேலை முடித்த களைப்போடு வந்துக்கொண்டிருந்தவளை மடக்கினான் ஆதி.
"ஹாய்மேடம் குட் ஈவினிங்" என்று புன்னகையோடு கூறியவன்.
வெறுப்பில் இருந்தவள்.."உனக்கு என்னவேணும்..? அதான் மார்னீங்கே தேங்ஸ் சொல்லிட்டேனே..?" என்று ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தவள்.
ஸ்கூட்டியின் முன் வந்து நின்றவன்.."ஒரு நிமிஷம் ஒரு காப்பி சாப்பிட்டே பேசலாமா..?" என்று ஆதி கேட்க..
மேலும் கோபமானவள்.."மிஸ்டர் நான் பொறுமையா சொல்லறேன் வழியை விடுங்க" என்றாள்.
"ப்ளீஸ் கூல் சூர்யா..?"
"சூர்யாவா..? என்பேரு சொல்லி கூப்பிடறதுக்கு யாரு நீங்க" என்று ஆபிஸில் இருந்த மொத்த கோபத்தையும் அவன் மீது திணித்தாள்.
"ஸாரிமேடம்.." என்று ஆதி முகம் இருண்டது. "உங்கிட்ட ஒரு ஐந்து நிமிஷம் பேசனும் ப்ளீஸ்"என்று கெஞ்சியவன்..
தனது மொபைல் அடிக்க எடுத்தவள்
"ஹான் அண்ணி வந்துட்டு இருக்கேன் கொஞ்ச நேரத்தில வந்திடுவேன்.." என்று சூர்யா போனை வைத்தவள்.
"இப்போ உங்களுக்கு என்ன தான் வேணும்..?" என்றுசூர்யா ஆத்திரமானாள்.
'நீ தான்வேணும்..'என்றுஆதி சொல்வதற்குள்மீண்டும்அழைப்பு அண்ணாவிடமிருந்து..
"அண்ணா..!" என்று சூர்யா கூறுவதற்குள்.. விஷயத்தை கூற.. சூர்யாவின் கண்களில் கண்ணீர் நிறைந்திருந்தது.
“அண்ணா கயலை எங்கேயும் போயி இருக்க மாட்டா.. இங்க தான் எங்கேயாவது இருப்பா நான்போய் பார்க்கிறேன்..?" என்று சூர்யாவின் குரல்கள் தழுதழுத்தது..
"கயல் குட்டி" என்று ஆதியின் மனம் தவித்தது.
"சூர்யா நான் தேடிட்டேன் டா நீ டென்ஷன் ஆகாத போலீஸ்ல கம்பிளைண்ட் பண்ணி இருக்கோம் டா நீ உடனே வீட்டுக்கு வா நித்திலா ரொம்ப உடைஞ்சிட்டா மா.." என்று ராஜேஷ்யின் குரல்கள் அழுது இருப்பது தெரிந்து இருந்தது.
"அண்ணா நான் வரேன் இதோ வந்திடறேன்" என்று போனை வைத்தவள் ஆதியை பார்க்க எப்போதே அவளது வழியில் இருந்து விலகி இருக்க ஸ்கூட்டியைஎடுத்துக் கொண்டு சென்றாள்.
அவளது விழிகளில் வழிந்த கண்ணீரை கண்டவனின் மனம் சூர்யாவை தாங்கிட துடித்தது. அவளது கண்ணீரை சரிசெய்ய மனம் துடித்தது.
'கயல் குட்டிக்கு என்ன ஆகி இருக்கும்..' என்று நினைவில் ஓட்டியவன். நேற்று இந்த ஸ்கூல் தான் படிப்பதாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டது நினைவிற்கு வர..! தனது பைக்கை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.
நித்திலாவின் நிலையோ மோசமாகியது..' தான் பெற்று எடுத்த ஒரே பிள்ளை தவமிருந்து பெற்று எடுத்தவள் பிள்ளை பேரே தனக்கு கிடையாது மலடி இவள் என்று கூறியவளிற்கு பதில்அளிக்கவே பிறந்த பிஞ்சு..! கயலை முதல் முதலில் தாங்கியபோது அவளின் மனதிற்கு.. ஏனோ சொல்ல முடியாத பரவசம் கண்ணீராய் வெளிப்பட்டு கொண்டே இருந்தது அவள் வளரும் வரையிலேயே அவளது கண்கள் கயலை விட்டு விலகியது இல்லை தன் கண் பார்வையிலேயே இருந்து அகற்ற இயலாதவள் யாருடனும் தன்மகளை அனுப்ப மாட்டாள்.
ஏன் தனது கணவருடன் கூட அனுப்பமாட்டாள், வழியில் யாரையாவது கண்டால் பேச்சு மட்டுமே துணையாகி போகும் ராஜேஷிற்கு.. கயலை மறந்துவிடுவார் என்று அனுப்புவது கூட இல்லை
சூர்யாவோடு மட்டும் தான்.. நம்பிக்கையோடுஅனுப்புவாள் ஆனால் ஆயிரம்முறை அறிவுரை கூறி அனுப்புவாள். இப்போது கயல் இல்லாத வீடு நித்திலாவிற்கு பைத்தியம் பிடித்து விடுவது போல் ஆயிற்று..
"கயல் கயல் குட்டி" என்று மூச்சிற்கு மூந்நூறு தடவை உரைத்துக் கொண்டே இருந்தாள். சூர்யா வீட்டிற்குள் நுழைந்தவள் அண்ணியை தாங்கினாள்..
"சூர்யா நீ வந்துட்டியா கயல் எங்கமா..? ஸ்கூல இருந்து நீ தானே கூட்டிட்டு வருவ..? எங்க சூர்யா நம்ப கயலை காணோம்.." என்று நித்திலா பிதற்ற தொடங்கினாள்.
அண்ணாவை ஒருமுறைபார்த்தவள்.."அண்ணி அண்ணி எதுவும் இல்லை கயல் நல்லா இருக்கா நீங்க இப்படி எல்லாம் பேசாதீங்க" என்று சூர்யா அழுகையை கட்டுப்படுத்திகொண்டு தனது அண்ணிக்கு தைரியம் கூறினாள்.
"இல்லை சூர்யா..! கயலுக்கு ஏதாவது ஆகி இருந்தா நான் உயிரோடை இருக்க மாட்டேன் பத்து மாசம் அவளை சுமந்ததைவிட இப்ப வரைக்கும் அவளை நெஞ்சில சுமந்துட்டு இருக்கேன் ஒரே பிள்ளை சூர்யா.." என்று அழுகைகளே நித்திலாவின் மொழி ஆகியது..
"அண்ணி அண்ணி ரிலாக்ஸா இருங்க.. அண்ணா அப்பா எங்க.."
"அப்பா பக்கத்தில இருக்கிற பார்க் இன்னும் அவ பிரண்ஸ் எல்லார் வீட்டையும் தேடி போயி இருக்காரு மா நித்திலா வ தனியா விட்டு போக மனசு இல்லை நான் போய் என்னஆச்சுன்னு பார்த்துட்டு வரேன்.." என்று வேகவேகமாக பைக்கை எடுத்துக்கொண்டு தன்பிஞ்சு உள்ளத்தை காணஓடினான்..
'நித்து நீ அழற என்னால உன்னை மாதிரிஉடைஞ்சு அழமுடியலடி..! எனக்கு உனக்கு அப்புறம் கயல் தானே எல்லாம்..! என்னை அப்பான்னு அழைக்க கயல் மட்டும் தானேடி இருக்கா உன் வலியை என்னால தாங்க முடியலடி இதுவரைக்கு சிரிச்சு பார்த்து உன்னை இப்படி அழுது பார்க்கிறதுக்கு நான் சாகலான்னு தோணுதுடி..நீ கவலைபடாத நித்து நான் கயல்குட்டியை எப்படியாவது கண்டுபிடிச்சு கூட்டிட்டு வரேன்..!' என்று மனதில் ஆயிரம் வலியோடு ராஜேஷ் ஒவ்வொரு ரோடாக சுற்றி திரிந்தான்.
"ஹலோ ஹலோ..! கேகே நகர் ஏரியாவுல ஒரு திருட்டு நடந்து இருக்கு யாராவது பக்கத்தில இருந்தா போங்க.."
"ஹலோ ஹலோ எட்டுவயசு பொண்ணை கடத்தி இருக்காங்க பேரு கயல்.. கீரின் கலர் யூனிபார்ம் சந்தேகம்படும்படியா ஏதாவது வாகனம் வந்தா பிளாக் பண்ணுங்க.." என்று வாக்கிடாக்கியில் கரகர ஒலியுடன்ஒலித்துக்கொண்டே இருக்க..
"இந்த வாக்கி டாக்கியை எடுத்து பதில் சொல்லுங்க" என்று இன்ஸ்பெக்டர் டென்ஷனில் வண்டியில் வருபவர்களை ஆராய்ந்துக் கொண்டு இருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த ஆதியையும் அவர்கள் சோதனையிட..
"லைசன்ஸ் எடுங்க ஆர்சி புக் எடுங்க ஹெல்மெட் எங்க" என்று போலீஸ் குடைந்து எடுக்க..
"பொறுங்க ஸார்..எடுத்து தரேன்..!” என்று வேதனையோடு மனதில் கயலை தேடிதேடி அலைந்து தோய்ந்து போய் நீட்டினான்.
"எல்லா பேப்பரும் சரியா இருக்கு ஸார்.. அனுப்பிடலாமா..?" என்று கான்ஸ்டபிள் கூற..
"ம்ம்ம் கிளப்பிவிடுயா.. நேரமாச்சு கிளம்பலாம்.." என்று போலீஸ் ஆதியை அனுப்பினார்கள் சிறுதூரம் சென்றவன். அவனை கடந்து கார்ஒன்று வேகமாக கடந்தது.
அப்போது..!
நித்திலாவின் நிலை சொல்லும்படி இல்லை அழுது அழுது சக்தி இல்லாமல் மயங்கி சரிந்தவளை தன் நெஞ்சோடு தாங்கினாள். சிறிதும் தாமதிக்காமல் மருந்துவமனையில் தன் அப்பாவின் உதவியோடு சேர்த்தவள். தனது அண்ணனுக்கு தகவலை தெரிவிக்க..
"இல்லை சூர்யா வந்தா நான் கயலோட தான் வருவேன்.. நித்திலா கிட்ட சொல்லு கயலுக்கு எதுவும் ஆகாது" என்று கண்ணீரோடு ராஜேஷ் கூற..
"அண்ணா.. அண்ணி..!" என்று சூர்யா கலங்கி தான் போனாள்.
"நீ தைரியமா இரு சூர்யா மா நான் கயலோடை தான் வருவேன் அண்ணியை பார்த்துக்கோ" என்று தனது தேடலை தொடங்கினான் அவன் மனதிற்கு மட்டுமே தெரிந்த அந்த ரகசியம் நேராக வந்து நின்றுவிட்டான்.
கோபமாக அந்த வீட்டினுள் நுழைந்தவன் "எதுக்காக இப்படி பண்றீங்க நான் தான் சொல்லிட்டேனே..?" என்று ராஜேஷ் கேட்க
எதிரே ரவுடி தோரணையோடு அமர்ந்திருந்தவன் எழுந்தான்.
"தம்பி நீ வேலைக்கு புதுசு..? நீ அந்த பதவியில இருக்கிறது நாளத்தான்..நீ இன்னும் உயிரோடை சுத்திட்டு இருக்க..? "அந்த ரவுடி கூற..
"என்உயிரை வேணாலும் எடுத்துக்கோங்க ஆனா என் கயலை கொடுத்துடுங்க ப்ளீஸ்" என்று அவரிடம் கெஞ்சினான் ராஜேஷ்.
"தம்பி உன் உயிரு யாருக்கு வேணும் ஒருகையெழுத்து தானே அதை போட்டு போ உன் குழந்தையை நானே வீட்டுல வந்து விட்டறேன்.." என்று அந்த ரவுடி கூற..
"அது என் உயிர்போனாலும் நடக்காது..! கெட்டது செஞ்சுட்டு உயிரோடு வாழ்றதை விட நல்லவானவே செத்து போயிடுவேன் ஆனா என் கயலுக்கு ஏதாவது ஆச்சு உங்களை சும்மாவே விடமாட்டேன்.." என்று ராஜேஷ் எச்சரிக்கை விடுக்க..
"எந்த தைரியத்தில தம்பி.. சவால் எல்லாம் விடறீங்க போலீஸ் இருக்குன்னா.." என்று சிரித்தவர்.
"போலீஸ்ல கம்பிளைண்ட் பண்ணி இருக்கேன் ஆனா உங்களைபத்தி சொல்லல.. சொன்னா..?"
"அட சொல்லி தான் பாருங்களேன் இன்ஸ்சு வாயா" என்று அந்த ரவுடி அழைக்க..
இன்ஸ்பெக்டர் உள்ளே இருந்து வெளியே வந்தான்..
"என்ன சொல்லனும் ஸார்..? சொல்லுங்க இவர் மேல ஆக்க்ஷன் எடுக்கனுமா எடுத்திடலாம்..? அரெஸ்ட் பண்ணுமா பண்ணலாம் ஆனா உங்க குழந்தை கிடைக்கும்மா..? என்று இன்ஸ்பெக்டர் கூற
"உன்னை எல்லாம் போலீஸ்சுன்னு நம்பி மக்கள் இருக்காங்களே..! உன்னை உயிரோடை விடவே கூடாது.." என்று காக்கி சட்டை என்று கூட பாராமல்.. போலீஸ்சின் கழுத்தை நெறித்தான்..
"டேய்புடிங்க டா புடிங்கடா.." என்று ஆட்களை ரவுடி ஏவி விட..
ஆட்கள் ராஜேஷ்யை சுற்றி வளைத்தனர்.
ரவுடியோ எழுந்து ராஜேஷ்யின் அருகில் வந்தவர்..
"தம்பி..! ஒழுங்கா குடும்பத்தோட பொழைக்கிற வழியை பாருங்க.. தேவை இல்லாம என்கிட்ட மோதி உங்க குடும்பத்தை இழந்திடாதீங்க..!" என்று ராஜேஷ்யின் கன்னத்தை தட்டியவர்..
"விடுங்கடா என்னை என் பொண்ணுக்கு மட்டும் ஏதாவது ஆச்சு உங்களை நான் சும்மாவே விட மாட்டேன் ஒருத்தனையும் உயிரோட விடமாட்டேன்.." என்று ருத்திரமாக ராஜேஷ் கூற..
"தம்பி..! நீரொம்ப சின்னபையன் நீ வளரனும்.. இந்த மாதிரி நீ மிரட்டினா பயந்திடுவேமா..! என்ன..? போ தம்பி போயி குடும்பத்தை கவனிக்கிற வழியை பாரு..
உன் பொண்ணு வேணுமுன்னா டாக்குமெண்டுல சைன் பண்ணிட்டு போ வீடு தேடி உன் குழந்தை வரும்.." என்று அந்த ரவுடி கட்அட் ரைட்டாக கூறிவிட்டான்.
ராஜேஷ் தோய்ந்த முகத்துடன் உடல் வலியை விட மனசு வலியை தான் அதிகம் சுமந்து கொண்டு இருந்தான். எப்படியாவது கயலை இவன்களிடமிருந்து மீட்க வேண்டும் என்று துடித்தான்.
"ஏய் ஆளுங்களுக்கு போன் பண்ணுங்கடா குழந்தை பத்திரமா இருக்காளா..? என்னன்னு விசாரிங்க.." என்று அடியாள்ஒருவன் போனை போட்டவன்..
ரிங் போகியது..
"ஏய்..! இருடாஅண்ணா தீடீர்னு கூப்பிடறாரு" என்று போனை எடுத்தவன்..
"அண்ணா சொல்லுங்க.."
"பொண்ணு எங்கடா.." என்று ரவுடி விசாரிக்க..
"இதோ அண்ணா " என்று பின் சீட்டில் திரும்பிபார்த்தவன். அங்கு கயல் மயக்கத்தில் இருந்தாள்.
"பத்திரம் டா விடியற வரைக்கும் ரெவுண்டிங்கிலேயே இருங்க சரியா.."
"சரிங்கஅண்ணா.."
"விஷயம் முடியறவரைக்கும் முடியலேன்னா பொண்ணை போட்டு தள்ளிடுங்கடா.. வேலையை கச்சிதமா முடிச்சுட்டு வந்திடுங்க"என்று போனை துண்டித்தான்.
"டேய் அண்ணா வேற இன்னும் பத்திரமா பார்த்துக்க சொல்லறாரு..!" என்று வண்டியை ஓட்டியவனிடம்கூற..
"ம்ம்ம் பார்த்திட்டு தானே இருக்கோம்.."
"சரி எங்கேயாச்சும் வண்டியை நிறுத்து நாம சாப்பிடறதுக்கு ஏதாவது வாங்கிட்டு வரேன்.."என்றுஅடியாள்கூற..
"இருங்க இன்னும்ஐந்து கிலோ மீட்டர் தான் ஊர் வந்திடும் வாங்கிடலாம்.." என்றுகாரை வேகமாக செலுத்தினான்.
கயலின் நிலையை கண்டு குடும்பமே மனம் வருத்தத்தில் இருந்தது கயல் மீண்டு வருவாளா..! கயலின் சிந்தனையில் அனைவருமே துயரத்தில் இருந்தார்கள்.
- தொடரும்
VOCÊ ESTÁ LENDO
உயிர் கொள்கிறேன் உன்னால் - Good Ending(முடிவுற்றது)
Fantasiaகாதலால் காதலை வெல்ல முடியுமா...? வென்றார்கள் இருவருமே ஒருவரை ஒருவர் அன்பால்... ஆதி ❤️சூர்யாவாக