உயிர் -18

316 14 0
                                    

"காதல் கடந்து போனாலும்..!
வாழ்வு கடந்து போக மறுக்கிறது..!
அவனே கடந்த பின்..
வாழ்வு எதற்கு..!
வாழ்வை விட்டு..!
வீழ்வதா இல்லை..
மனதை அழித்து வாழ்வதா..!
குழப்பத்தில் தான் வாழ்க்கை என்றால்..!
குழப்பாமல் காதலை அடைந்தவர்களும் ‌இல்லை..!
குழப்பிக் கொண்டு
வாழ்வை கடத்தியவரும்
எவரும் இல்லை..!"
சூர்யாவிற்கும் அதே நிலை..! காலம் செய்த மாற்றத்தினால் தன்னை உயிரோடு புதைத்துக்கொண்டு தான் வாழ்வை கடத்தினாள். ஆனால் அவள் வாழ்வில் ஆதியின் வரவு.. அவளை உலுக்கி பார்க்க தான் செய்தது. அகிலை மறந்து ஒரு வாழ்வை தேடுவது எப்படி இயலும் என்பதை யோசிக்காமல் சூர்யா முடிவு எடுக்கவில்லை யோசித்த பின்பு அந்த முடிவில்மாற்றம் வரமால் வாழ முடிவு செய்தாள்.
இரவு ..!
தனிமையில் பொழுதுகளில் எல்லாம் அவனை நினைத்து வாழ்ந்தவள் இன்று. மனம் முழுவதும்குழப்ப தோடு இருந்தாள்.
நாட்களே அதற்கு பதில் அளித்தது. காலம் மட்டுமே அனைத்திற்கு சிறந்த மருந்து..
'அகில் நீ எப்போது என் அடிமனதில் வாழ்ந்துக்கொண்டு தான் இருப்பாய்..! என் காதல் உண்மையானது உன்னை ஆழமாய் நேசித்தேன்.. ஆனால் விதி என் வாழ்வில் மட்டும் இப்படி விளையாடி விட்டு இனி நான்‌உயிர் வாழ்வது இயலாது தான் ஆனால் என்னை மட்டுமே நேசிக்கும் என் குடும்பம்.. சூர்யா சூர்யா‌என்று உயிர் விடும் கயல்.. அம்மாவின்‌நினைவே வராத அளவிற்கு அன்பு செலுத்தும் அண்ணி .. தன் குழந்தை போல் பார்த்துக்கொள்ளும் அண்ணா.. ! அம்மாவிற்கு பின் தனக்கு அதிக செல்லம் தரும் அப்பா.. ! இவங்களை எல்லாம் விட்டு போறது ரொம்பவே கடினம்.. தான் நான்போயிட்டா இவங்க இடிஞ்சு போயிடுவாங்க..  நான்‌அழுதாள் அழுபவள் நான்‌சிரித்தாள் என்னோடு சிரிப்பவள் கயல்  இனி எனக்காய் வாழ போவது இல்லை அவர்களுக்காய் அவர்கள்‌ விருப்பத்திற்காய் வாழ போகிறேன்..'  என்று அந்த பின் கடந்து வந்த ஒவ்வொரு பொழுதுகளையும்.. அவர்களுக்காகவே வாழ்ந்தாள்‌  சூர்யா..!
ஒரு‌மாதம் கடந்த நிலையில்..!
வாழ்க்கையில் சில நேரம்‌ சில உறவுகள் வழுக்கட்டாயமாக திணிக்கப்படலாம் நம்மில் ஆனால் அந்த உறவே.. நாளை நமக்கு உயிராய் மாறலாம்.. அதை உணர்ந்தாள் சூர்யா
மோதலும் காதலும் இல்லாத வாழ்க்கை உண்டா என்ன..? ஆதிக்கும்சூர்யாவுக்கும் மோதல் மட்டுமே நிறைந்திருந்தது கல்யாணம் ஆவதிற்கு முன்பே..
"ஓய் ..! இப்ப உனக்கு என்ன தான்பிரச்சனை சொல்லு..?"
"எனக்கு நீதான்டா பிரச்சனையே எத்தனை தடவை ஓரே கேள்விய நீமாத்தி மாத்தி கேட்டாலும் பதில் அது தான் ஏன் நீ கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்ட இனி இந்தகேள்வியை கேட்டேனா ஆதி நான் செத்துபோயிடுவேன் ..!" என்று சூர்யா கூற.
ஆதியோ மாடியின் உச்சியில் நின்று இருந்தவன் அங்கிருந்த சுவரில் ஏறியவன்.." உனக்காக நான் உயிரை விடறேன்சூர்யா..? நீ நிம்மதியா இரு..!" என்று ஆதி குதிக்க முனைத்தவன்..
"ஏய் லூசா நீ..? முதல்ல இறங்கி வா..!" என்று ஆதியின் கையை பற்றி அவனை கீழே இழுத்தாள்.
ஆதி சிரிக்க.. "என் அம்மு..இது இரண்டாவது மாடி.. இங்க இருந்து விழுந்தா சின்னதா கீறல் இல்லை அடி தான் படும் மொத்தமா என் உயிர் போகாது அது கூட தெரியாம என் காதல் நீ முழ்கி போய் இருக்க சொல்லறேன் கேளு நான் இல்லேனா உன்னால வாழவே முடியாது ..! என்று ஆதி கூற..
'அது வேணா உண்மை தான்'  என்று மனம் கூறியது.
"சொல்லு நீ என்னை காதலிக்கறியா இல்லை குடும்பத்தில் இருக்கிறவங்க ஆசைக்காக உன் ஆசையை மறைச்சு கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னியா எனக்கு தெரிஞ்சு ஆகனும்" என்று ஆதி பிடிவாதமாக நின்றான்.
"அதை எப்படி நான் சொல்லறது..?" என்று சூர்யா மனதினுள் யோசிக்க
"சூர்யா சூர்யா"  என்று ஆதி அவளது முன் சொடக்கிட்டவன்..நினைவிற்கு வந்தவள்.
"சூர்யா‌..! உன்னை இழக்க என்னால முடியாது நீ சொன்னதுக்கு அப்புறம் என் மனசை தேத்திக்கிட்டு நான் என் வழியில தான் போனேன் ஆனா பாரு.. உன் அண்ணா மூலமா உன்னை அடைய வழி இருக்கிற‌போது என் மனசுக்கு அதுசரி தப்புன்னு எதுவும் தெரியல நீ மட்டும் தான் இந்த சூர்யா மட்டும் தான் இந்த அழகான உன் முகம் வேற எதுவும் தோணல உன் கூட வாழனும் என் உயிர்‌போறதுக்குள்ள.."
"ஆதி ப்ளீஸ் .. இப்படி போசாதீங்க.." என்று சூர்யா அவனது அன்பில் கரைந்து போனாள்..
"சூர்யா " என்று கயல் ஓடி வர..நினைவிற்கு வந்தவள்..
சூர்யா கயலை தூக்கிகொண்டாள்.
"என்னாச்சு கயல் வா..? " என்று ஆதி கயல்குட்டியை வாங்க..
கயல் போக மறுத்துவிட்டாள். ஆதியோ முகம் வாடினாலும்.." ஏன் கயல் என்னை உனக்கு பிடிக்கலேயா..?"  என்று ஆதி கேட்க சூர்யாவிற்கே பாவமாக இருந்தது.
"எனக்கு என் ஆதி மாமாவை ரொம்பவே பிடிக்கும் ஆனா என் சூர்யாவுக்கு ..? " என்று கயல் முகம் வாட..
"அச்சோ அழகி.."  என்று கயலின் கன்னத்தில் தடவினாள் சூர்யா..
"யார் சொன்னா..? .உங்க ஆதி மாமாவை பிடிக்காதுன்னு அதை நினைச்சா என் கயல்குட்டி பீல் பண்றா.." என்று தனது கவலைகளை மறைத்து பிஞ்சிடம்.. வாயாடினாள்.
"ம்ம்ம.." ‌என்று சூர்யா வின் கையை தட்டிவிட்டாள். கயல்..
"என்னை ஏமாத்த நினைக்காத  சூர்யா.. உனக்கு ஆதிமாமாவை பிடிக்கல..?"
"அச்சோ கயல் கண்ணா சூர்யாவுக்கு இந்த ஆதி மாமாவை தவிர வேற‌யாரையும் பிடிக்காது நம்புடா.." என்று ஆதியும் தன் தரப்பிற்கு பொய்யாய் கூறிக்கொண்டே போக..
கயலோ சூர்யாவின் கண்களை பார்த்து "அப்போ நீ ஏன் நைட் ஆனா அழுதுட்டே இருக்க சூர்யா யாருக்கும் தெரியாம..?"என்று கயல் கேட்க..
"அது வந்து" என்று சூர்யா தடுமாற..
ஆதியின் புருவம் சுருங்கியது அதை வெளிகாட்டாமல்.. கயலை வாங்கியவன்.."கயல்குட்டிநாளைக்கு நீயும் சூர்யா மாதிரி ஆகிறப்ப .. உனக்குன்னு‌ஒரு பையன் வரும்போதுநீயும் இப்படி தான்டா அழுவ .."
"புரியல மாமா..! நான் ஏன் அழனும்..?"
"அதுவந்து கண்ணா..! சூர்யாவுக்கு உங்க எல்லோரையும் விட்டு போறதில மனசே இல்லை கண்ணா மாமாவை கல்யாணம் பண்ணிட்டா சூர்யா இங்கேயே இருக்க முடியாதுல.." என்று ஆதி கூற..
ஆதியிடம் இறங்கி சூர்யாவிடம் வந்தவள் சூர்யாவின் கையைப்பிடித்துதன் உயரத்திற்கு இழுத்தாள்.. "சூர்யா.. அதுக்கா அழுகற..நீ வரலேன்னா என்ன நாங்க வருவோமே சூர்யாவை பார்க்க.."  என்று சூர்யாவின் தாடையை பிடித்தவள்..
கயலை இறுக்கமா அணைத்துக் கொண்டாள் சூர்யா ' உனக்காக தான் கயல் நான் உயிர் வாழறேன்னே..' என்று சூர்யா மனதில் நினைத்தாள்.
"சூர்யா இனி நீ அழ கூடாது.." என்று கயல் கூற..
"அழ‌மாட்டேன்‌டா கண்ணா"  என்று கயலின் கன்னத்தில் முத்தத்தை பரிசளிக்க..
கயலோ "பிங்கி பிராமிஸ் சூர்யா..?" என்று கேட்க..
"பிங்கி பிராமிஸ் கண்ணா வா கீழ போலாம் .." என்று நழுவி செல்ல இருந்தவளை தடுத்து நிறுத்தினான்.
கயலிடம்.. "நீ போய் ம்ம்முக்கிட்ட சொல்லு கண்ணா பின்னாடியே சூர்யா வருவான்னு ..! என்று ஆதி கூற..
"சரி மாமா..!" என்று கயல் ஓடினாள்.
சூர்யா நகர சென்றவளை.."ஏய் நில்லு டி எதுக்கு அழுகற நைட்..‌எல்லாம்..? "என்று ஆதி கேட்க..
"அதான் கயல்கிட்ட சொன்னேன்ல காதில விழலேயா..?"
"நானும் கயல் மாதிரி சின்ன பிள்ளை இல்லை நீ சொல்லற கதையை கேட்க..சூர்யா..!  கயல் சொல்லறது உண்மையா.. ? நீ நான் பண்ணதுக்கு..".என்று ஆதி கூற
"கதையா என் வலி உனக்கு கதையா தெரியிது நீ பொண்ணா இருந்து பாரு அப்ப தெரியும் அந்த வலி.."
"பொண்ணா வா..? அம்மு இதுக்கு அதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு..!"
"ஓஓஓப்ளீஸ்..!  இப்படி அம்முன்னு கூப்பிடறதை நிறுத்து.. சூர்யான்னே கூப்பிடு..‌"
"நான் அம்முன்னு கூப்பிட்டா என்ன தப்பு..?"
"கூப்பிடாதன்னா கூப்பிடாத..‌"
"என்ன ரீசன் ப்ளீஸ் அம்மு.."
"எனக்கு ஒரு‌மாதிரியா இருக்கு .." என்று சூர்யா கூற..
சூர்யாவின் அருகில் நெருங்கியவன் "என்ன‌மாதிரி அம்மு"  என்று சூர்யாவின் கையை கோர்க்க நினைத்தவன்..
"காதுல எரிச்சல கிளம்பற மாதிரி இருக்கு" என்று சூர்யா விலகி செல்ல..
ஆதிக்கு சிரிப்பு தான் வந்தது.."ஓய்‌ எதை நினைச்சு வேணாலும் அழு ஆனா என்‌கூட நீ வரும் போது உன்னை அழ விடமாட்டேன் அம்மு" என்று ஆதி கத்தினான்.
"போடா டேய் போடா..!" என்று சூர்யா மறைந்தாள்.

உயிர் கொள்கிறேன் உன்னால் - Good Ending(முடிவுற்றது)Donde viven las historias. Descúbrelo ahora