சூர்யாவிற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தவித்தாள் ஆதிவிடாமல் சூர்யாவையே பார்க்க..
"யாரையாவது ஒருத்தரை மேரேஜ் பண்ணிக்க தான்போறீங்க அது ஏன் நானா இருக்க கூடாது..?"
"என்ன சொல்லற..? நீ உனக்கு .." என்று சூர்யா கோபமாய் கூற
"அறிவில்லையான்னு கேட்க வரீங்க.. எனக்கும் உங்களை உருகி உருகிகாதலிச்சு கல்யாணம் பண்ண தான்ஆசை ஆனா நீங்க தான் காதலை மறுத்துடீங்க.. "
"ம்ம்ம்.. ! என் மனசுல வேற விஷயம் இருக்கு ஒருபொண்ணு விலகி போனா புரிஞ்சுக்கதெரியாத உங்களுக்கு.. இந்த கிப்ட் இதை நீங்களே வச்சுக்கோங்க.. "என்று சூர்யா கோபமாக எழுந்தவளின் கையை பிடித்து
இது உங்களுடையது தான் நான் இதை எடுத்துட்டு போக முடியாது என்று அவள் கையில் திணித்துவிட்டு ஆதி கிளம்பினான்.
வீட்டிற்குள் வந்தவள்.. நித்திலா தான் கதவை திறந்துவிட்டாள்.
"ஏன் சூர்யா இன்னைக்கு லேட்..? மணி 9 " என்று நித்திலா நேரமானதை கூற..
அது எதுவும் காதில் வாங்கவில்லை மனம் முழுவதும் கோபத்தில் தான்நிறைந்திருந்தது.
"சூர்யா சாப்பிட்டு போ "என்று நித்திலா கூற..
"பசியில்லை அண்ணி வொர்க் டென்ஷன்.. "என்று சூர்யா தனது அறைக்குள் வந்தவள்.
"அகில் நீ எங்கடா இருக்க..? எவ்வளவு மெயில் பண்ணி இருப்பேன்..! ஒரு பதில் கூட இல்லையே..உன் சூர்யாவை யார் யாரோ காதலிக்கறாங்க ஆனா நீ எப்படா வருவ..?" என்று சோகத்தில் தான் முழ்கி போனாள்.
விடியற்காலையில்..
"சூர்யா சூர்யா எழுந்திரி எழுந்திரி" என்று கயல் குட்டிசூர்யாவை எழுப்ப..
"கயல் இன்னைக்கு ஸ்கூல் போகலேயா..? என்று கண்களை தேய்த்தவள்..
"ச்ச்ச்சூ சூர்யா சத்தம் போடாதா உன்னால தான் இன்னைக்கு எனக்கு லீவு கிடைச்சு இருக்கு..
"என்ன சொல்லற கயல்...?"
"சூர்யா உன்னை பார்க்க யாரோ வராங்களாமே ம்ம்மு ரொம்ப டென்ஷனா இருக்காங்க.. சீக்கிரம் வா "என்று கயல் ஹாலிற்கு ஓடி வந்துவிட
"யாரோ "என்றதும் சூர்யா வேக வேகமாக எழுந்தாள்.
கயல் பின்னால் சூர்யா ஹாலிற்கு வந்தவள்.. வழக்கம்போல் இல்லாமல் அனைவரும் பரபரப்பாக இருந்தார்கள்.
"அண்ணா..". என்று சூர்யா அழைக்க..
"சொல்லு சூர்யா..?" என்று மளிகை லிஸ்டை பார்த்துக்கொண்டு இருந்தவன்.. எழுந்தான்.
"இங்க என்னநடக்குது அண்ணா..!"
"உங்க அண்ணியை கேளு மா..!" என்று தன் மனைவிடம் கைகாட்டிவிட்டு ராஜேஷ் செல்ல.
சமையலறையில் இருந்த நித்திலாவைதேடி போனாள் சூர்யா..
"அண்ணி இங்க என்னநடக்குதுன்னு யாராச்சும் சொல்லுங்க கயல் என்ன என்னவோ சொல்லறா..?" என்று சூர்யா விடை தெரியாத சிறுமி போல் கேட்க
"என்ன சொல்லறா சூர்யா..?" என்று நித்திலா சிரிக்க..
"அண்ணி ப்ளீஸ் விளையாடாதீங்க.. நான்.."
"சூர்யா இங்க வா.." என்று கையைப்பிடித்து.. அவளது அறைக்கு அழைத்து சென்றாள் நித்திலா..
"முதல்ல நல்லபிள்ளையா நீ குளிச்சுட்டு இந்த புடவையை கட்டிட்டு ரெடியா இரு.. அப்புறம் நான் வந்து அலங்காரம் பண்ணிவிடறேன்.." என்று நித்திலா நகர..
சூர்யா நித்திலாவின் கையை பிடித்து நிறுத்தினாள். "அண்ணி இது எல்லாம் எதுக்கு..? எனக்கு புரியல ஏன் தீடீர்ன்னு இப்போ இது எல்லாம் வேண்டாம் "என்று புடவையை பெட்டில் வைத்தாள் சூர்யா.
ராஜேஷ் உள்ளே வர..! "எது வேண்டாம் அப்படின்னா என்ன அர்த்தம் சூர்யா."என்று அவனது வார்த்தையில் கோபம் தெரிய நித்திலா கண் அசைக்க அமைதியானான்.
சூர்யாவை பெட்டில் உட்கார வைத்தவள்..". இப்ப உனக்கு என்ன பிரச்சனை சூர்யா.. நாங்க உனக்கு நல்லது தானே செய்வோம்.. ?"
"ஆமா அண்ணி நீங்க எனக்கு நல்லதுதான் செய்வீங்க ஆனா எனக்குன்னு மனசு இருக்கு அண்ணி.."
"உன் மனசு எங்க எல்லாத்துக்கும் தெரியும்.. சூர்யா அதனால தான் இந்த தீடீர் ஏற்பாடே போ போயி.. ரெடி ஆகி வா" என்று அவளது கன்னத்தை செல்லமாக தடவி விட்டு சமையல் அறைக்குள் நுழைந்தாள்.
ராஜேஷ் சூர்யாவை பார்க்க.. அதற்கு மேல் அங்கு இருக்காமல் நகர்ந்தான்.
"என் மனசு உங்கயாருக்குமே புரியாது அண்ணி..! என் மனசு ஒருத்தனுக்கு மட்டும்தான் புரியும்.. அவன்மட்டும் தான் என் உலகம் என் உயிர் அண்ணி.. அவனை தவிர வேற யாரையும் என்னால கனவுல கூட நினைச்சுபார்க்க முடியாது..?" என்ன ஆனாலும் சரி இதை தடுத்தாகனும் என்று சூர்யா திட்டவட்டமாக முடிவு செய்தாள்.
நல்ல நேரம் பார்த்து தாம்பூல தட்டுடன்..அவர்கள் வர வீடு களைகட்டியது. கயல்குட்டிக்கு சந்தோஷம் தாங்கமுடியவில்லை சந்தோஷத்தில் மிதந்தாள்.
சூர்யா தனது அறையில் ஒளிந்து இருந்தவளுக்கு.. மனதில் ரண வேதனையாக இருந்து ஒருவனை கண்ணோடு கண்பார்த்து காதலில் விழுந்து அவன் இல்லாமல் வாழ முடியாது என்ற தவிப்பில் மிதந்து இருமனம் இணைந்து காதலில் தொடங்கி வாழ்வின் இறுதிவரை திருமணம் என்னும் பந்தத்தில் வாழ்வது அல்லவா காதல் அதை ஒவ்வொரு கணமும் கனவிலும்.. நினைவிலும் அகிலை நினைத்து காதல் கொண்டவளாயிற்றே இன்று நிலைதடுமாறி தான் போனாள் சூர்யா.
"சூர்யா வந்து பாரு மாப்பிள்ளை சூப்பர் உனக்கும் பிடிக்கும்.."என்று சூர்யாவின் கையைப்பிடித்து கயல் இழுக்க..
"விடு கயல்"என்று சிறு கோபத்தை பிஞ்சிடம் காட்டினாள் சூர்யா.
"கயல் ஏன் அத்தையை தொல்லை பண்ற போ"என்று நித்திலா கயலை ஹாலிற்கு அனுப்பி வைத்தாள்.
பட்டுபுடவையில் மணம்வீசு மல்லிகை கூந்தலோடு நின்று இருந்த சூர்யாவிடம் ஆழமாக பார்த்தவள் அவளது முகம் மட்டும் சரியில்லை என்று நினைத்தவளிற்கு 'சீக்கிரமே சூர்யா உனக்கு இந்த வாழ்க்கை பிடிச்சு போகும்..' என்று மனதில் நினைத்தாள்.
"அண்ணி இது எல்லாம் வேண்டாம் ப்ளீஸ்..!" என்று சூர்யா கெஞ்ச
சிரிப்போடு நித்திலா " நீ முதல்ல வா சூர்யா அப்புறம் பேசிக்கலாம்" என்று ஹாலிற்கு அழைத்து வந்தாள். சமயலறையில் இருந்து காப்பி கப் உடன் சூர்யா நிற்க நித்திலா பின் இருந்து அவளை தள்ளினாள்.
சூர்யா குனிந்த தலை நிமிராமல்.. காப்பியை நீட்ட..
"என்னை தானே கண்ணு முன்னாடி வராதீங்கன்னு சொன்னீங்க.. ஆனா நீங்களே.." என்று காப்பி கோப்பை எடுத்தப்படி கூற..
சூர்யாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது "ஆதி நீயா உன்னை" என்று சூர்யா கோபமாக ஆதியை பார்க்க அனைவரும் இருக்க அமைதியானாள்.
"ஆதி நீ சொன்னதை விட அண்ணி நேர்ல சூப்பரா இருக்காங்கடா.. "என்று சஞ்சய் கூற..
புதியவனாய் தோன்றியவனை பார்த்தவள்.. "ஹான் ஸாரி நான் என்னை அறிமுகப்படுத்திக்கலேயே அண்ணிநான் தான் ஆதியுடைய பிரண்ட்.." என்றுசஞ்சய் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள
"பிரண்ட் மட்டும் இல்லை.. எனக்கு எல்லாமே சஞ்சய் தான் "என்று ஆதி அனைவருக்கும் அறிமுகப்படுத்த..
"என்னசூர்யா நீ ஆதியை விரும்பறது எங்களுக்கு தெரியாத என்ன எங்கிட்டேயே மறைச்சு வச்ச.."என்று நித்திலா சந்தோஷமாக கூற..
"அதான் நாங்க உன்கிட்ட விளையாட்டு காட்டினோம் "என்று ராஜேஷ் கூற..
"என்ன சொல்லறீங்க நீங்க.? எனக்கு புரியல..?"
"சூர்யா மா ஆதி மேல கோபம் இருக்கலாம் ஆனாஇவ்வளவு கோபம் கூடாது.." என்று சிவராமன் கோபபட
சூர்யா மௌனமாக நின்று இருந்தாள்.
"ஆதி மாமா எங்க அத்தை எப்படி..?" என்று கயல் ஆதியின் அருகில் வர..
"எனக்கு பிடிச்சு இருக்கு கயல்குட்டி ஆனா உங்க சூர்யாவுக்கு தான் என் மேல கோபம் என்னை பிடிச்சு இருக்கான்னு கேட்டு சொல்லறீயா..?" என்று ஆதி கிண்டல் செய்ய..
"சூர்யா தம்பி தான் கேட்கறாருல சொல்லு மா..?" என்று சிவராமன் கேட்க..
சூர்யாவின் கண்களில் கண்ணீர் நிறைந்திருந்து உடனே ரூமிற்குள் சென்று கதவை சாற்றிக் கொண்டாள்.
"சூர்யா "என்று நித்திலா அழைக்க..
"ஆதி நீ தப்பா எடுத்துக்காத சூர்யா..?"
"புரியிது அக்கா.. சூர்யாவுக்கு என் மேல இன்னும் கோபம் போகல நான் பார்த்துக்கிறேன் "என்று சூர்யாவின் அறைக்கு சென்றவன் கதவை தட்டினான்.
"சூர்யா கதவை திற.." என்று ஆதி கூற..
சூர்யா கோபமாக கதவை திறந்தவள்.
"உன்னை என் கண்ணு முன்னாடி வர கூடாதுன்னுசொன்னேல.. அப்புறம் என்ன இந்தநாடகம் எல்லாம்"என்று சூர்யா அழுகையோடு கேட்க..
"உள்ள வந்து பேசலாமா..?"என்று ஆதி கேட்க.. அவனை உள்ளே அழைத்து கதவை சாற்றினாள்.
"என்ன பண்ணி வச்சு இருக்க..? ப்ளீஸ் என்னை விட்டு போயிடு.." என்று சூர்யா கெஞ்ச..
"நைஸ் ரூம்..! சூர்யா" என்று ரூமை சுற்றி பார்த்தவனது விழிகள்.. அங்கு திறந்திருந்த லாப்டாப்பை கவனித்தவன் அருகில் சென்றான்..
சூர்யா ஓடிச் சென்று அந்த லாப்டாப்பை மூடினாள்."உனக்கு என்னவேணும் ஒழுங்கா இந்த ரூமை விட்டு என் வாழ்க்கையை விட்டு வெளியில போயிடு "என்று சூர்யா கத்த..
"ச்ச்சூ ச்ச்சூ மெதுவா பேசு சூர்யா வெளியில எல்லாம் நீ என்னை லவ் பண்றதா நினைச்சுட்டு இருக்காங்க..?"
"வாட்..!"
"எஸ் சூர்யா மேடம்..! உங்களுக்கு நியாபகம் இருக்குதா..பர்ஸ்ட் நாம மீட் பண்ண காப்பி ஷாப்.. அப்புறம் அதே காப்பி ஷாப் மீட் பண்ணது இதை எல்லாம் உங்க அண்ணா பார்த்திட்டாரு.. நீ போனதுக்கு அப்புறம் உங்க அண்ணா என்னை தேடி வந்திட்டாரு.. அப்புறம் என்ன..?"
"என்ன ஆச்சு அப்புறம்..?"என்று சூர்யா வெறுமையாய் கேட்க..
ஆதி சிரிக்க "நீ என்னை விட்டு எவ்வளவு தூரம் தள்ளி போக நினைச்சாலும் நானும் போக நினைச்சாலும் அது எப்பவும் முடியவே முடியாது..சூர்யா நாம இரண்டு பேரும் காதலிக்கிறோம் அப்படின்னுநினைச்சுட்டாங்க சண்டை போட்டு போனதை சொன்னேன் அவங்களாவே கற்பனை பண்ணிட்டாங்க.."
"நீ சொல்ல வேண்டியது தானே நாம் ஒண்ணும் லவ்வர்ஸ் இல்லைன்னு.."
"அது உனக்கு எனக்கு மட்டும் தானே தெரியும்..? "ஆதி மர்மாக சிரிக்க..
"ஓஓஓ..! நீ வழியை விடு நான்போய் சொல்லறேன் "என்று ஆதி கூற..
"சூர்யா எனக்கு ஒரு வாய்ப்பு கொடு நீ இல்லாம நான் இல்லை ப்ளீஸ்" என்று ஆதி சூர்யாவை நிறுத்த..
"ஆதி ப்ளீஸ் என்னை விட்டுபோயிடுங்க.."
"என்னை புடிக்கலேன்னு சொல்லு சூர்யா நான் உன் வாழ்க்கைக்குள்ள வரவே மாட்டேன் "என்று ஆதி கூற.
சூர்யாவோ" உங்களை பிடிக்கும் ஆதி ஆனா அதுக்காக சேர்ந்து வாழ எல்லாம் முடியாது.."
"ராஜேஷ் கேட்டாரு "நான் உன்னை உயிருக்கு உயிரா காதலிக்கிறேன்னு சொன்னேன்.. கொஞ்சம் யோசிசூர்யா நீ யாரையாவது கல்யாணம் பண்ணிக்க தான்போற அது நானா இருக்ககூடாது..?" என்று ஆதி கெஞ்ச..
சூர்யா யோசித்தாள்.
ஆதி அவளையே இமைக்கொட்டாமல் பார்த்தவள்.
ஒரு முடிவு வந்தவளாய்..! வெளியே வந்தாள். ஆதியும் பின்னால் வர
அனைவரிடமும் திருமணத்திற்கு சம்மதம் என்றாள்.
சஞ்சய் சந்தோஷத்தில் குதித்தான். "எனக்கு ஒருபெரிய கவலை குறைச்சு போச்சுடா.."என்று ஆதியை அணைத்தான்.
ஆனால் ஆதியோ எப்படி எதற்காக சம்மதித்தாள் என்று புரியமால் விழித்தான்.
நித்தாலாவின் மனமோ..
சந்தோஷத்தில் திளைத்தது.. ராஜேஷை பார்த்து புன்னைகைத்தவள் கண்களினாலே பேசினார்கள்..
"நான்நேத்து நைட் சொன்னது நடந்திடுச்சா" என்று நித்திலா கேட்க..
"ஆமா நித்து நீ சொன்னதுதான் கரெக்ட் இந்த காதல் இருக்கே "என்று ராஜேஷ் கண்ணால் காதல் வீச..
"ச்சூ" என்று கண்களினாலே ராஜேஷ்யை அடக்கினாள்.
சிவராமானிற்கோ.. மனம் ' தனது மனைவி இந்தநேரம் இருந்தால் எவ்வளவு ஆனந்தம்கொண்டு இருப்பாள்..' என்று ஏக்கத்திலும் சந்தோஷத்திலும் கல்யாணவேலைகளை தொடங்க மனம் திட்டமிட்டது.
நித்திலாவும் ஆதியும் இருவரும் பார்த்து புன்னகைத்துக்கொண்டார்கள்.
ВЫ ЧИТАЕТЕ
உயிர் கொள்கிறேன் உன்னால் - Good Ending(முடிவுற்றது)
Фэнтезиகாதலால் காதலை வெல்ல முடியுமா...? வென்றார்கள் இருவருமே ஒருவரை ஒருவர் அன்பால்... ஆதி ❤️சூர்யாவாக