உயிர் -8

420 18 0
                                    

எதிர்பார்ப்புகளை நாம் தவிர்த்தாலே பல விஷயங்கள் நம் அருகிலேயே இருக்கும். எப்போது எதிர்பார்ப்பு குறைகிறதோ அப்போது வாழ்வு நிறைவடைகிறது..!
ஆதியின் மனதிலும் சூர்யா‌ பற்றிய‌எண்ணங்கள் தான்‌மேலோங்கி இருந்தது. அவளிடம் இருந்து அவளது காதலை எதிர்பார்த்து காத்திருந்தான்.
காலை மணி 8.. சூர்யா தனது அப்பாவை வீட்டிலேயே இருக்கும்படி கூறிவிட்டு கயலோடு ஹாஸ்பிட்டலினுள் நுழைந்தாள்.
நித்திலா சற்று தேறி இருந்தாள் ராஜேஷ் இரவு எல்லாம் தூங்காமல் இருந்தால் டயர்டா தெரிந்தான்.
நித்திலாவை கண்டவுடன் கயல் அவளிடம் தாவினாள்  இருவரும் முத்த மழையை அன்போடு பொழிய
"ம்ம்மு என்னை விட்டு போக கூடாது..?"  என்று கயல் விம்மலோடு நித்திலாவின் நெஞ்சில் குடிபுகுந்தாள்.
"கயல் கண்ணா இனி அம்மாவை விட்டு எங்கேயாவது போவியா என்ன..?" என்று நித்திலா கேட்க..
"நான் உங்களை விட்டு போகமாட்டேன் ம்ம்மு.."  என்று நித்திலாவின் கன்னத்தில் முத்தமிட்டது அந்த பிஞ்சு.
இருவரின் பாசத்தை கண்டு இருவரும் அன்பில் தொலைந்தே போக தான் செய்தனர்.
"யாருடா கண்ணா உன்னை கடத்திட்டு போனது ..?" என்று நித்திலா  கோபமாக கேட்க..
"தெரியல மம்மு..!" என்று கயல் கையை விரிக்க..
"அன்னைக்கு என்ன நடந்தது கயல்.. சொல்லு"  என்று சூர்யா கேட்க..
"அதுவா " என்று யோசனையில் கயல் கூற..' சொல்லலாமா வேண்டாமா'  என்று கயல் யோசிக்க நித்திலா அதை உணர்ந்தவள்..
"கயல் உன் ம்ம்முக்கிட்ட  மறைப்பியா என்ன..?" என்று நித்திலா கேட்க..
"இல்லை ம்ம்மு.. நான் ஸ்கூல் முடிச்சு வெளியில வந்தேனா.. டீயூஷன் போற வழியில இந்த அஜய் இருக்கான்ல மா.. அவன் சாக்லேட் கேட்டானா..?
அது வாங்க நாங்க இரண்டு பேரும் கடைக்கு போனோமா அப்போ தான் அங்க இரண்டு பெரிய‌ஆளுங்க நின்னுட்டு இருந்தாங்க.."
"அப்புறம்‌என்ன‌ஆச்சு‌ கயல் ..?" என்று ராஜேஷ் கேட்க 
"எங்களையே பார்த்தவங்க சாக்லேட் கொடுத்தாங்களா நாங்க வாங்க மாட்டேன்னு சொன்னேன்.. ஆனா கையில திணிச்சுட்டாங்க..அஜய் அவங்க அம்மா வந்தாங்கன்னு ஓடிட்டான் மா.. அப்புறம் கண்ணு எல்லாம் தூக்கம் வந்துச்சா அதான் தூங்கிட்டேன் அப்புறம் என்ன நடந்துச்சுன்னு தெரியல..?"  என்று கயல் கூற..
நித்திலாவின் மனதில் ஒரு விஷயம் உறுதியாகிற்று.. இந்த கயவர்களின் நடுவில் கயலை  பாதுகாக்க  அதீத தைரியத்துடன் வளர்க்க வேண்டும் என்று முடிவு செய்தாள்.
அவர்களுக்கு பயந்து இனி கயலை வீட்டோடு வைத்திருக்க கூடாது என்று நித்திலா முடிவு எடுத்தாள்.
சூர்யாவோ "கயல் குட்டி இனி ஜாக்கிரதையா இருக்கனும்..!  யார் எது கொடுத்தாலும் வாங்க கூடாது" என்று சூர்யா கூற..
"சரி அத்தை இனி நான் யார்‌எது கெடுத்தாலும் வாங்க மாட்டேன் " என்று கயல் பதில் அளித்தாள்..
"என் சமத்து தங்கம்" என்று சூர்யா கயலின் கன்னத்தில் கிள்ளினாள்.
"அண்ணி இப்போ எப்படி இருக்கீங்க அண்ணா டாக்டர் ஏதாவது சொன்னாங்களா..?"
"ஆமா சூர்யா டாக்டர் டிஸ்சார்ஜ் பண்ணலான்னு சொல்லிடாரு.. டாக்டரை போய் ஒரு தடவை பார்த்துட்டு  நாம‌வீட்டுக்கு கிளம்பலாம்‌.." என்று‌ராஜேஷ் புன்னகையோடு கூற..
"ஐ ஜாலி நாம வீட்டுக்கு போகபோறாமா‌ டாடி‌.." என்று ராஜேஷின் கழுத்தில் மாலையாய் கை கோர்த்தவள்.
"ஆமாண்டா கண்ணா இந்த ஹாஸ்பிட்டல் சுத்தபோர்.. நம்ப வீட்டுல போய்.. டி.வியில கார்ட்டூன்ஸ் பார்க்கிறது தான்ஜாலி" என்று சிறுபிள்ளையாய் மாறி தான் போனான்.
டாக்டர் அறையில்..!
"வாங்க மிஸ்டர் ராஜேஷ்‌..!"  என்று டாக்டர் கூற ராஜேஷ் அமர்ந்தான்.
"சொல்லுங்க டாக்டர் ஏதோ சொல்லனுமுன்னு சொன்னீங்க  என்ன ஆச்சு..?" என்று ராஜேஷ் புன்னைகையோடு கேட்க..
"ஒரு பிரச்சனையும் இல்லை ராஜேஷ் அவங்க நல்லா இருக்காங்க அவங்களால எந்த துயரத்தையும் அதிகமா தாங்கிக்க முடியல அது தான் காரணம் இனி இது மாதிரி நடக்காம பார்த்துக்கிட்டா போதும் இப்போ அவங்க பர்பெக்டிலி ஆல் ரைட்"  என்று டாக்டர் கூற
"தேங்ஸ் டாக்டர்..! எனக்கே தெரியும் டாக்டர்‌ ஏன்னா நித்திலாவோட உயிரே கயல் தான் அவ திரும்ப கிடைச்சதே பெரிய விஷயம்" என்று  டாக்டரிடம் கூறிவிட்டு  ராஜேஷ் டாக்டர் அறையில் இருந்து வெளியே வர..
ஆதி எதையோ  தேடியப்படி இருப்பது தெரிந்ததும்..!
"மிஸ்டர் ஆதி..! " என்று ராஜேஷ் அழைக்க..
"ஸார்..உங்களை தான்‌ தேடிட்டு இருந்தேன்.."  என்று ஆதி அருகில் வந்தான்.
"இப்போ நல்லா இருக்காங்களா ..?" என்று ஆதி புன்னகை மாறாமல் கேட்க..
"கயல் வந்தது நாள இப்போ நித்திலா நல்லா இருக்கா.. இல்லைன்னா அவளுக்கு ஏதாவது ஆகி இருக்கும்..?"
"அதான் எதுவும் நடக்கலேயே எதுக்காக நெகட்டீவா திங் பண்றீங்க .. சரி சொல்லுங்க கயல் எங்க இருக்கா..?" என்று அவனது துயரத்தை மாற்ற முயற்சித்தான்‌
"நாங்க வீட்டுக்கு கிளம்பிட்டோம்..! மிஸ்டர்‌ ஆதி அதனால் கயல் ரொம்ப ஜாலியா இருக்கா நித்திலா வேற உங்களை பார்க்கனுமுன்னு சொல்லிட்டே இருந்தா சரி ஹாஸ்பிட்டல்ல இருந்து வந்ததும் பார்க்கலான்னு இருந்தோம் நீங்களே வந்துட்டீங்க " என்று‌ ராஜேஷ் நித்திலா இருந்த அறைக்குள் சென்றார்கள்..
ஆதியை கண்டதும் "ஐ ஆதி மாமா"  என்று ஆதியிடம் தாவினாள் கயல்..
நித்திலா எழ முயன்றவள்.. "வேண்டாம் மேடம் ப்ளீஸ் படுத்துக்கோங்க இப்ப எப்படி இருக்கீங்க..?" என்று நித்திலாவை பார்த்தவன்..
"தம்பி உங்களுக்கு நான் ரொம்பவே கடமைபட்டு இருக்கேன் எந்த ஜென்மத்து பந்தமோ இந்த ஜென்மத்தில வந்து என் உயிரையே காப்பாத்தி இருக்கீங்க..?" என்று‌ கண்ணீரோடு நித்திலா நன்றி உரைக்க..
"தம்பின்னு சொல்லிட்டு என்கிட்ட நன்றி சொல்லறீங்களே..!" என்று ஆதி வருத்தமானான்.
"ம்ம்மு ஆதி மாமா‌ ரொம்பவே ஸ்வீட்"  என்று கயல் கூற..
'ஆமா ரொம்பவே ஸ்வீட் தான்.. இவன் வந்ததும் என்னை மறந்துட்டேல சூர்யா சூர்யான்னு வருவேல அப்போ பேசிக்கிறேன்'  என்று சூர்யா மனதினுள் கருவினாள்‌. அதை தாங்கமுடியாதவள் "அண்ணா நான் டாக்ஸி வந்திடுச்சான்னு பார்க்கிறேன் நீங்க அண்ணியை கீழ கூட்டி வாங்க"  என்று திங்ஸை எடுத்துக்கொண்டு சூர்யா கிளம்ப..
"எதுக்கு டாக்சி .. நான்‌ கார்ல தான் வந்து இருக்கேன் நானே வீட்ல விடறேன்" என்று ஆதி கூற..
"தம்பி உங்களுக்கு எதுக்குசிரமம் அவ்வளவு தான் டாக்ஸி வந்திடும்.."  என்று நித்திலா கூற..
"இல்லை நான் உங்க தம்பி தானே உங்க தம்பிக்கிட்ட மறுப்பு சொல்லுவீங்களா என்ன..?" என்று ஆதி உரிமையோடு கூற..
அன்பின் உரிமையில் இருவருமே எதுவும் கூற முடியாமல் போயிற்று.
"அண்ணா நான் ஸ்கூட்டியில தான் வந்திருக்கேன்..! திங்ஸை எடுத்துட்டு வீட்டுக்கு போறேன் அண்ணி நீங்க பத்திரமா வாங்க"  என்று சூர்யா நகர..
"கயல் நீ வரியா‌.." என்று சூர்யா கேட்க..
"இல்லை அத்தை நான் அம்மா கூடவும் ஆதி மாமா கூடவும் வரேன்" என்று கயல் பாய் சொல்ல..
சூர்யாவின் மனதினுள் தாங்கிக்க முடியாத அளவிற்கு வலி தான் மிச்சமாகியது.
மறுநாள்… நித்திலாவை தேற்றி அவளை நார்மல் நிலைக்கு கொண்டு வர…"கயல்குட்டி" என்று அவளை தன் கூடவே வைத்திருந்தாள் நித்திலா.
இதற்கிடையில்….,ஆதி ராஜேஷ்யை சந்தித்து மனம் விட்டு பேசினான்.
"ஸார்…உங்களுக்கும் அந்த ரவுடிக்கும்‌ என்னபிரச்சனை தெளிவா சொல்லறீங்களா…?" என்று ஆதி கேட்க..
ராஜேஷ் சற்று தடுமாறினான்.
"பயப்படாதீங்க  ஸார்..! இனி‌எந்த பிரச்சனையும் இல்லை…!" என்று ஆதி ராஜேஷ்யின் கையை‌ப் பற்றியவன்.
"ஆனா எப்படி …? உங்களுக்கு தெரியும்..?"  என்று ராஜேஷ் மீண்டும் அதிர்ச்சியானான்.
"அதுவா.." என்று‌ஆதி மர்மமாக புன்னகைக்க..
"அப்படி என்ன பண்ணீங்க அவங்க எல்லாம் ரொம்ப கெட்டவங்கள் ஆச்சே..! உங்களை ஏதாவது பண்ணிடுவாங்க.." என்று ராஜேஷ் பயந்துபோனான்.
"என்ன கெட்டவங்களா டம்மி பயலுங்க அவனுக்கு போய் பயந்துட்டு இருக்கீங்க நீங்க அந்த இடத்திலேயே அவனுங்களுக்கு நாலு அடி கொடுத்து இருந்தீங்கன்னா..? கயலை கூட்டிட்டு வந்து இருப்பானுங்க.." என்ற ஆதி தன்னம்பிக்கையோடு கூற..
"நீங்க …என்ன போலீஸா .." என்று ராஜேஷ் கேட்க..
"போலீஸா இருந்தா தான் சண்டை போடனுமா என்ன என்னுடைய உரிமைக்காக நான் போட கூடாதா ஸார்.. ! எதிர்க்க வரவனுங்க கிட்ட நாம பலசாலின்னு காட்டிக்கிட்டா போதும்.. அவனுங்களே தெறிச்சு ஓடிடுவாங்க…!"
"முதல்ல தைரியத்தை மனசுல விதைங்க அவனுங்க கயலை கடத்தி வச்சு மிரட்டறதுக்கு முன்னாடியே நீங்க இந்த பிரச்சனைய தைரியமா சால்வ் பண்ணி இருக்கலாம்..!" என்று ஆதி கூற..
“நீங்க  சொல்லறதும் சரிதான் அங்க என்ன நடந்துச்சு சொல்லறீங்களா..? தலையே வெடிச்சிடும்‌போல இருக்கு.."  என்று ராஜேஷ் கேட்க..
"சொல்லறேன்.."  என்று நடந்தவற்றை கூறினான்.
அன்று இரவு …
"ஏய் காரிலேயே இருடா பொண்ணு பத்திரம் ஆமாம்.. அண்ணாவுக்கு தெரிஞ்சா தொலைச்சுடுவாரு"  என்று மற்றொரு அடியாள் கூறிவிட்டு தொலைவில் தெரிந்த தாபாவில்  சாப்பாடு வாங்க சென்றான்.
கண்கொத்தி பாம்பாக காரின் முன் நின்று இருந்தான் இன்னொரு அடியாள்.
கயல் உள்ளே இருந்து வெளியே மெல்ல எட்டிபார்த்தாள். காரின் கதவு வழியே..! ஆதி தெரிய..
"அங்கிள் அங்கிள்.."  என்று சைகையினால் கயல் அழைக்க..
ஆதி "ச்ச்சூ" என்று  சைகை செய்தான் இருட்டில் ஆள்‌நடமாட்டம்‌ குறைவாகவே இருந்தது.
காரின்‌ பின்‌ ஏதோ சத்தம் கேட்கிறதே என்று முன்னால் இருந்தவன் பின்னால் வர கயலும் சுயநினைவற்ற நிலைக்கு படுத்துக்கெண்டாள்.
ஆதி காரின் முன்புறம்‌ வர.. அடியாள்‌மீண்டும் முன்புறம் வந்து காரை சுற்றிபார்த்தவன்.
யாருக்கும் தெரியாமல் பின்னால் இருந்த மரத்தின்பின் ஒளிந்துக் கொண்டான் ஆதி..'எப்படியாவது கயலை தூக்கிவிட்டு வந்திட வேண்டும்‌' என்று யோசனையில் இருந்தவன்.
இன்னொருவன் வந்துவிட.."  என்ன டா காரையே சுத்தி சுத்தி பார்க்கிற..?"
"இல்லை அண்ணா யாரோ நம்பளை பாலோ பண்ணி வர‌மாதிரியே தோணுது" என்று டிரைவர் கூற..
"மடையா யாருடா வரப்போறா… வந்து காரை எடு டா‌ " என்று இன்னொருவன் காரில் ஏறினான் டிரைவரும் உள்ளே வர
இருவரும்‌ கயலை பார்த்தார்கள்..அசைவற்ற நிலையில் கயல் படுத்திருந்தாள்..
"அடுத்த ஊசிபோடனும்‌" என்று இருவரும் கயலை பார்த்தப்படி   கூற..
"சரி காரைஎடு" என்று முன்புறம்‌ திரும்ப தெரிந்த உருவத்தை கண்டு ஆடி தான்‌போயினர்..
அவர்களின்‌முன்‌ஆதி நின்று இருந்தான்.
"யாருடா‌ இவன்  காருக்கு குறுக்க வந்து நின்னுட்டு.." என்று காரில் இருந்த இருவரும் ஆதியை பார்க்க
"அதுவா ஆதி அங்கிள்‌" என்று கயல் துள்ளிகுதித்தாள்.
"சும்மா இருக்க மாட்ட‌.." என்று இருவரும் கயலை மிரட்ட..
கயல் பயந்து போய் கப்புசீப் என்றாகி வாயை பொத்திக்கொண்டு கயல் அழ தொடங்கினாள்.
இருவரும் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர்.  

உயிர் கொள்கிறேன் உன்னால் - Good Ending(முடிவுற்றது)Où les histoires vivent. Découvrez maintenant