உயிர் -19

347 15 0
                                    

திருமண வேலைகள்  ஒருபுறம் நடந்தேறிக் கொண்டே செல்ல அனைத்து வேலைகளையும் ஆதியே இழுத்து போட்டு கொண்டு செய்தான். சிம்பிளாகவே திருமணம் செய்து கொள்ள   முடிவு செய்தான்.
சஞ்சய்யோ சற்று யோசனையோடு வலம்வந்தான் அதை அறியாமல் இருப்பானா ஆதி..
"சஞ்சு.. ஏன்டா என்ன ஆச்சு எல்லாம் நீ நினைக்கிற மாதிரி சந்தோஷமா தானே நடக்குது அப்புறம்‌என்னடா..?" என்று சலித்தான்.
"அது இல்லைடா ஆதி உனக்கு உறவு இருக்கு ஆனா பாரேன்‌யாரும் வர‌முடியாத சூழ்நிலை.."
"டேய்‌  எனக்கு நீ இருக்க சூர்யா இருக்கா போதும் டா இந்த வாழ்க்கையை நான் முழுசா வாழ.. "என்று ஆதி கூற..
"நீ அனாதை இல்லைடா ஆதி..‌நாங்க இருக்கோம்‌.. ஆனா ஆதி உன் கல்யாணம் நடக்கிற விஷயம் அவங்களுக்கு தெரியனும் உன்னை வாழவே விடமாட்டேன்னு சொன்னவங்களுக்கு நீ எப்படி வாழ்றேன்னு தெரிய வேண்டாமா..?"
"வேண்டாம் டா அவங்க பார்வையில சூர்யா படவே கூடாது என் அம்மா மாதிரி சூர்யாவையும் என்கிட்ட இருந்து பிரிஞ்சுடுவாங்க டா.."என்று ஆதி கலங்கினான்.
"ஏய்‌ அண்ணி உன்னை விட்டு எங்கேயும் போக மாட்டாங்கடா உன்‌மேல அவ்வளவு அன்பு இருக்கு அவங்க கண்ணுலேயே அது தெரியிது தெரியுமா..? " என்று சஞ்சய் கூற..
"ஆனா சஞ்சு சூர்யா என்னை வேண்டாம் வேண்டாம்முன்னு சொன்னவ தீடிர்னு எதுக்காக ஒத்துக்கிட்டான்னு தான் புரியல நானும் சூர்யாவுடைய பிரண்ட் அனுக்கிட்டேயும் விசாரிச்சுட்டேன்" என்று ஆதி கூற..
"டேய் அனுவா.. யாருடா அது..?"
"ம்ம்ம்..! சஞ்சு உன்‌மனசை அலைப்பாயவிடாதடா.. கண்ரோல் பண்ணு.."
"ஆதி.. ப்ளீஸ் டா சொல்லுடா அனு பேரை கேட்கும் போதே நல்லா இருக்கு அவங்களை நேர்ல நல்லா இருப்பாங்களா.."
"சஞ்சு ஒரு நிமிஷம் இருடா..!" என்று தனது பாக்கெட்டில் இருந்த கர்சீப்பை எடுத்த சஞ்சு முன் நீட்டினான்.
"என்னடா..? "
"என்னை பார்த்தா உனக்கு அப்படியா தெரியிது .. இடியட்" என்று ஆதியை துரத்தினான்.
இதற்கிடையில்..
"சூர்யா எங்களை விட்டு போறேன்னு நீ எதுக்கு அழுவற.. நாங்க நினைச்சா உன்னை பார்க்க வரமாட்டோமா.. ? இங்க இருக்குது டெல்லி..!"
"அது இல்லை அண்ணி இந்த நேரத்தில் அம்மா இருந்திருந்தா எவ்வளவு நல்லா இருக்கும் மனசு ரெம்பவே வலிக்குது அண்ணி" என்று நித்திலாவின் மடியில் தஞ்சமடைந்தாள்.
தாயில்லாத பிள்ளையை தன் பிள்ளையாய் நினைத்து தான் சூர்யாவை பார்த்துக்கொண்டாள்.
"நான் இருக்கேன் சூர்யா‌‌. அத்தை இல்லைன்னா என்ன நானும் உன் அண்ணனும் இருக்கோம் உனக்கு..‌நீ எதுக்காகவும் கவலைபடகூடாது நீ இப்படி இருக்கிறதை மாமா பார்த்தா அப்புறம் அவ்வளவு தான் அவரும்‌ஒரு‌புறம் உட்கார்ந்து கலங்க ஆரம்பிச்சுடுவாரு.." என்று சூர்யாவை சமாதானப்படுத்தினாள்.
அன்று‌மாலையே.. ! அனு வர சூர்யாவும் வீடும் கலகலப்பாகியது..
"என் சூர்யாவுக்கு கல்யாணம் ஆக போகுது" என்று அனு சந்தோஷத்தில் கூற..
"சூர்யா என்னமோ ஆதியை உன் லைப்புல இருந்து முடிக்க போறேன்னு சொன்ன ஆனா இப்போ" என்று அனு கூற
"அனு நீ சொன்னது கரெக்ட்டா போயிடுச்சு யார் நம்ப லைப்புல இருக்கனும் அவங்க போகனுமுன்னு முடிவு பண்றது இந்த கடவுள் தான்..!"
"ஆனா கடவுள் தப்பா மட்டும் முடிவு எடுத்து இருக்க மாட்டாரு சூர்யா" என்று அனு கூற
"ஆமா அனு ஆதியை பார்த்தா என்னால முடியலேன்னு சொல்ல முடியல  அவன்கிட்ட ஏதோ ஒண்ணு இருக்கு.. " என்று சூர்யா கூற..
"உண்மையான அன்பு சூர்யா ..!  இனி உனக்கு எல்லாமே நல்லதாவே நடக்கும்.." என்று அனு சூர்யாவின் மனதை தேற்றினாள்.
கல்யாண நாள் நெருங்க நெருங்க சூர்யாவின் மனதில் ஓர் குழப்பம் இருந்துக்கொண்டே தான் இருந்தது.
காதல் மாயவலை ஆயிற்றே..! அதிலிருந்து மீள முடியாதே இன்பமோ துன்பமோ‌அந்த அன்பு என்னும் கடலில் மீண்டு வருவது கடினமே..!
"சூர்யா..! என்னை உனக்கு பிடிச்சு இருக்கா.." என்னு ஆதி போனில் கேட்க..
"பிடிக்கலேன்னு சொன்னா கல்யாணத்தை நிறுத்தவா போற கிடையாதுல அப்புறம்‌எதுக்கு இந்த கேள்வி..!" என்று சூர்யா கடுப்பானாள்
"அம்மு ப்ளீஸ் இப்படி பேசாத..‌என்ன ஆச்சு உனக்கு.. !"
"ஆதி வேண்டாம்  இந்தகேள்வியை கேட்டு கேட்டு என்னை கஷ்டப்படுத்தாத உனக்கு இந்த கல்யாணம் நடக்கனும்மா வேண்டாமா..?
"வேணும் ஆனா அம்மு நீ யாரை நேசிக்கிறேன்னு சொல்லு உன் வாழ்க்கையில நான் சேர்த்துவைக்கிறேன்.. ! வீட்டுல கூடநானே பேசறேன் .." என்று ஆதி கெஞ்சினான்.
"முட்டாளா நீ..! "
"அம்மு ஏன்டி இப்படி திட்டற..?"
"பின்ன என்னடா ஒரு வாரத்தில கல்யாணத்தை வச்சுட்டு இப்படிகேள்வி கேட்டா..?"
"அப்ப நீ உண்மையாவே..!"
"போதுமடா முடியல என்னால நானே கல்யாணத்தை நிறுத்திடட்டுமா உன் இம்சை இப்பவே என்னால தாங்க முடியல..? கல்யாணதுக்கு அப்புறம் கடவுளே " என்று சூர்யா சலித்தாள்
"அப்போ உன் மனசுல.."
"ஆதி" என்று கோபமானாள் சூர்யா
"அம்மு.."
"ம்ம்ம சொல்லு .." என்றுசற்று கோபம்தணிந்தவளாய் கூற
"ஐ லவ்யூ ..!"
"சரி இப்போ அதுக்கு என்ன..?"
"அம்மு  நான் என் காதலை  சொல்லிட்டு இருக்கேன்..!"
"அதான் 24 மணிநேரமும் சொல்லிட்டு தானே இருக்க.."
"ஆனா அம்மு இப்ப இந்த நிமிஷம்..! உன் கூட உன் குரலை கேட்டுட்டு இருக்கேன் அம்மு இதுவே போதும் உன்னை இப்பவே என் கூட கூட்டிட்டு வர தான்தோணுது..இப்ப உன்னை.."
"ஆதி..! இப்ப என்ன சொன்ன.." .என்று சூர்யா கேட்க..
"உன்னை இப்போ பார்க்கனும் போல இருக்குன்னு சொன்னேன் நான் வரட்டா.."
"வேண்டாம்‌ ஆதி " என்று போனை வைத்துவிட்டு பெட்டில் சரிந்தாள்.
"ஏன் சூர்யா என்ன ஆச்சு..? இந்த மாதிரி உன்னை நெருங்கும் போது ஏன் விலகி ஓடற அப்படி நீ யாரைவது உண்மையா காதலிச்சு இருந்தா.? உன்னை விட்டு தரவும் மனசே இல்லை சூர்யா ..? நீ இழந்த அந்தகாதலை நான் தருவேன் சூர்யா இறுதி வரைக்கும்..! "என்று ஆதி மனதில் உறுதிக் கொண்டான்.
கனவுகளில் வலியில் மிதந்தவளுக்கு..! கதவை யாரோ தட்டுவது போல் தோன்ற நினைவிற்கு வந்தாள் சூர்யா..!
யாராய் இருக்கும்‌அதுவும் இந்த நேரம் பத்திரிக்கை வைக்க ஆள் ஆளிற்கு ஒரு புறம்‌சென்று இருக்க கயல் உறங்கி கொண்டு இருந்தாள்.. அனுவை பார்த்துக்க சொல்லி விட்டு செல்ல அவளும் உறங்கி தான்போனாள்.
கதவை திறந்தவளுக்கு.. அதிர்ச்சி தான்..எதிரே ஆதி நின்று இருந்தான்.
"நீ இங்க என்ன பண்ற..?"  என்று சூர்யா கேட்க..
"ச்சூ பேசாம வா..! "என்று அவளது கையைப்பிடித்து இழுத்து சென்றான் ஆதி.
நேராக மாடிக்கு அழைத்து சென்றான் சூர்யாவை..!
"இப்ப சொல்லு உன் பிரச்சனை என்ன அம்மு..?"
"என்ன பிரச்சனை..? "
"உன் மனசில இருக்கிறதை என்கிட்டசொல்லு அம்மு.. எதுவானாலும் உனக்கு இந்த ஆதி செய்வான்..!"
"முருகா முருகா.. என்ன பிரச்சனை எனக்கு.. முதல்லநீ உன் பிரச்சனைய சொல்லு..?"
"நீ தானே சொன்ன..?"
"என்ன சொன்னேன் தப்பு தவறி ஒருவார்த்தை சொல்லிட கூடாதா.."
"அம்மு நீ சொல்லற‌ஒவ்வொரு வார்த்தையிலேயும் தான் என் வாழ்க்கையே இருக்கு ..! நீ சிரிச்சா சந்தோஷமா இருந்தா நானும் சிரிப்பேன் சந்தோஷப்படுவேன் அம்மு.. ஆனா நீ அழுதா நானும் அழுவேன்.. அம்மு"
"இப்படி பேசாதேன்னு சொல்லிட்டேன்.. ஆதி இந்த பேச்சே தேவை இல்லைன்னு தான்சொல்லறேன் உனக்கு ஏன் ‌புரிய‌மாட்டேங்குது..!"
"என்னை ஏன்‌உனக்கு புரியவே மாட்டேங்குது அம்மு " என்று சூர்யாவின் முகத்தை தாங்கியவன்..
"இப்ப என்ன‌பண்ண போற..‌" என்று சூர்யா திகைப்படைய..
"ரொம்ப நாள்‌ஆசை‌அம்மு ப்ளீஸ்.." என்று ஆதி கெஞ்ச..
ஆதியின் கண்களை சூர்யா‌ பார்க்க..
"என்‌தேடலில்  கிடைத்த வரம் நீ..!
உன்னை பிரிந்து வாழ
இயலாது..‌!
ஆயிரம்‌உறவுகள்‌ உனக்கிருந்தாலும்..
என்னை சுற்றியே‌ உன்‌ உலகம்‌ இருக்கவேண்டும்..!
ஆயிரம்‌உறவு வந்தாலும்..
நானே உன்‌முதல் உறவாய்‌
மாற‌வேண்டும்..
போராசை தான் ஆனாலும்..
உன்னோடு இருக்க வேண்டும்..!
என்‌உயிர்‌பிரியும்‌வரை..!
விலகி சென்றாலும் உன்னையே மனம்‌தேடும்..! "
"அம்மு.." என்று சூர்யாவின் கன்னங்களை மெதுவாய் வருடியவன்.. சூர்யா அருகே நெருங்க மூக்கோடு மூக்கு உரசி அவளுள் சிலிர்ப்பூட்டினான்.
சூர்யாவை விட்டு விலகியவன்.. "என்ன பண்ண இப்ப ..?" என்று சூர்யா கேட்க
"எனக்கு உன்னை பார்த்த நாள் ல இருந்து ரொம்ப ஆசை டி.. அதான்‌.." என்று ஆதி சமாளிக்க..
"நீ என்ன சின்ன பிள்ளையா ..? " என்று சூர்யாவின் முன்பு இருந்த கோபம் எங்கோ பறந்தது.
"நீ என் அம்மா அம்மு.. அது மட்டும் இல்லை.. ஆசை யா இருந்துச்சு அதான்  அன்னைக்கு நீயும் கயலும் இப்படி தானே பண்ணீங்க எனக்கும்‌அதை பார்த்தும்ஆசை வந்திடுச்சு.. ஐயம் ஸாரி.. ! உன்னை..!"
"அச்சோ..!" என்று சூர்யா தலையில் அடித்துக்கொண்டவள்.
"போதும் போதும் நீ இடத்தை காலி பண்ணு.. யாராவது பார்த்திட்டா வம்பா போயிடும்.." என்று சூர்யா அவனை நகர்த்த முனைய
"என்ன வம்பாகும் நீ என் அம்மு என் பொண்டாட்டி "என்று ஆதி கூற..
"சரிங்க ஆதி ஸார் இப்போ இடத்தை விட்டு நகருங்க.. " என்று சூர்யா கூற..
"சரி நீ போய் படு அம்மு நாளைக்கு ..பேசிக்கலாம் என்று ஆதி சூர்யாவை பார்த்தப்படி விலக..
என்ன நினைத்தானோ.. மீண்டும்‌மேலே வந்தவன்.." அம்மு நீ வேற ஏதாவது நினைச்சியா ..? " என்று படியில் இறங்கியவன் மீண்டும் மேல் ஏறி  வந்து சூர்யாவிடம் கேட்க..
ஆதி தீடிர் என்று வந்து கேட்கவும் சூர்யா திணறி தான்போனாள்.
'நினைச்சேன் ஆனா நீ இப்படி குழந்தைதனமா இருப்பேன்னு நான் நினைக்கவே இல்லைடா உன்னை பத்தி தெரிஞ்சுக்கனும் முழுசா ' என்று மனதில் நினைத்தப்படி  நின்றாள் சூர்யா.
"ஹலோ மேடம்..! நான்‌ஏதாவது தப்பா பண்ணிட்டேனா நான் வேணா இன்னொரு தடவை டிரை பண்ணட்டா..?"  என்று ஆதி சூர்யாவை நெருங்க..
"இப்போ நீ போக போறியா இல்லையா..?"  என்று சூர்யா குரலை உயர்த்த..
ஓர் நொடி தான் ஆதி சூர்யாவின் உதட்டில் முத்தமிட்டு பறந்துவிட்டான்.
சிலையாகி நின்றாள் சூர்யா..
"யாருமறியா தருணங்களில்..
அவன்
இச்சையில்
ஒரு‌முத்ததை பெற்றிட..!
என்‌நாளங்கள்
அனைத்திலும்‌
மின்சாரம்‌பெற..
முதல் திருட்டு‌
முத்ததின் ஈரத்தில்
நான்..!
சூர்யாவினுள் சிலிர்சிலிர்ப்பு இந்த முத்தம்.. வாழ்வில் இறுதிவரை மறக்காதே.. அப்படி ஒரு சிலிர்ப்பு மின்சாரம்‌பாய்ந்தது போல்..‌உடல் எல்லாம் நெருப்பாய் மாற.. குளிரிற்கு இதமாய்..! ஆதி இட்டு சென்ற முத்தம் இன்னும் பத்தாது என்று மனம் ஆதியின் அன்பிலும் குறும்புதனத்தையும் ரசிக்க ஆவலாய் காத்திருந்தாள் சூர்யா ஆனால் அவள் மனதில் குழப்பத்திற்கு மட்டும் பஞ்சமே இல்லை..!

உயிர் கொள்கிறேன் உன்னால் - Good Ending(முடிவுற்றது)Donde viven las historias. Descúbrelo ahora