உயிர் -21

353 13 0
                                    

டெல்லி..!
அதிக பரப்பரப்பிற்கு பஞ்சம்‌ இல்லாமல் இருந்தது. இரவுபயணத்தில் அழுப்பில் தூங்கி தான் போனார்கள் இருவரும்.
காலை பொழுதில்
"சூர்யா" என்று ஆதி எழுப்பியவன்.. வழக்கம்போல "அண்ணி ப்ளீஸ் இரண்டுநிமிஷம் ..!" என்றுபோர்வை இழுத்துபோர்த்தி தூங்கினாள் சூர்யா.
அதை ரசித்தவன் "தூங்கு அம்மு..! நல்லா ரெஸ்ட் எடு" என்று ஆதி கூற..
அந்த குரல் எப்போதும் கேட்கும் குரல் அல்லவே என்று போர்வை விலக்கியப்பின் தான் நினைவிற்கே வந்தாள்.
ஆதியை பார்த்தவள் கிளம்பி தயாராகி இருந்தான்..!
“ஆபிஸ் கிளம்பிட்டியா‌ ?" என்றுசூர்யா வேகவேகமாக எழுந்தாள்.
"சூர்யா..! உன்னுடைய மௌனம் என்னை கொல்லுது என்னை மன்னிச்சுடு ப்ளீஸ்"என்று ஆதி கூற
சூர்யா அமைதியானாள்.
"அம்மு எனக்கு ஒரு விஷயம் புரியல உன் காதலும் உனக்கு வேண்டாமா..?  இல்லை என் காதலும் உனக்கு வேண்டாமா..? நீ ஏன் மெளனமா வந்த  அந்தவீட்டுல இருந்து   எனக்கு முடிவு சொல்ல முடியுமா..?"
"இந்த விஷயம் தான் என் மனசுலேயும் மூளையிலேயும் ஓடிக்கிட்டே இருக்கு  எதுக்காக ஒரு காதலை கொடுத்து அதை பாதியிலேயே எடுத்துக்கிட்டு இப்போ இந்த காதல்" என்று சூர்யா கண்ணீரோடு கூற..
"உனக்கும் என்னை பிடிக்கும் தானே அம்மு அதனால  தான்  மேரேஜ் பண்ணேன்..!" சூர்யா..
"ஆதி நான் இந்த கல்யாணத்தையோ இல்லை உன் கூட வாழ போறதை பத்தியோ நான் பேசல"என்று சூர்யா கூற..
"அப்புறம் என்ன பிரச்சனை சூர்யா உனக்கு..?"
"நான் இப்போ குழப்பமான மனநிலையில இருக்கேன்..! இப்போ என்கிட்ட நீ எது பேசினாலும் என்கிட்ட எந்த பதிலும் இல்லை கூடிய சீக்கிரம் பதிலை கண்டுப்பிடிப்பேன்" என்று சூர்யா வெளியே கிளம்ப..
"சூர்யா உன்னை இந்த நிலைமையில விட்டு போக என்னால முடியாது..? என்னால ஆபிஸ் போயும் வேலை பார்க்க முடியாது..?"
"திரும்ப திரும்ப திரும்ப ஏன் டா அதையே சொல்லற நான் இல்லாம உன்னால இருக்க முடியாது முடியாதுன்னே நான் ஒருநாள் இல்லாம போயிட்டேனா என்ன பண்ணுவ"என்று சூர்யா கூற..
"அப்படி மட்டும் பேசாதா அம்மு" என்று வாயை கைகளை வைத்து மூடினான்.
"நீ இல்லைன்னா இந்த உலகத்தில எனக்கு வாழ்க்கையே கிடையாது ..!"
ஆதியின் கையை விலக்கியவள்..!"ஆதி யாரும் இல்லாம இந்த உலகத்தில வாழ்ந்து தான் ஆகனும் .."
"ம்ம்ம யாரும் இல்லைனாலும் பரவாயில்லை நீ இல்லாம என்னால் இருக்கவே முடியாது"என்று அவளை அணைத்தான் சிறு பிள்ளை போல்...
'ஆதி உன்னை என்னால வெறுக்க முடியல  நான் இப்போ குழப்பமான விஷயத்தில இருக்கேன்..!'
அணைப்பை விலக்கியவன்." இனி நான் உன்கிட்ட எதுவுமே கேட்கமாட்டேன் நீ உன் விருப்பம் போல இரு ஆனா என்கிட்ட இப்படி இனி ஒருதடவை பேசாத சூர்யா.." என்று அவளை விட்டு விலகினான்.
"ஆதி ஒரு நிமிஷம் எனக்கு கொஞ்சம் டைம் வேணும்.."
"இது உன் வாழ்க்கை அம்மு நீ என்ன சொல்லறியோ அதை நான் செய்ய தயாரா இருக்கேன் என் முதலும் முடிவும் நீ மட்டும் தான்.. !" என்று ஆதி வீட்டை விட்டு கிளம்பினான்.
அவன் செல்வதை பார்த்துக்கொண்டே இருந்தவளின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
அவளும் தயாராகி வெளியே சென்றாள்.
தன் குழப்பத்தை தீர்ப்பதற்கான வழிகளை தேடி அலைந்துக்கொண்டு இருந்தாள்.
நாட்கள் பனி போல மெல்ல நகர.. தொடங்கியது 
சென்னையில் இருந்து  கயல் அனைவரும் வரவும் வீடு கலை கட்டியது..!
கயலுடன் கொஞ்சி விளையாடி மகிழ்ந்தாள்.
நித்திலாவிற்கு மனதினுள் சந்தோஷமா இருந்தாலும் ஏதோ ஒரு நெருடல் இருக்க தான் செய்தது.
"சூர்யா..! நீ நல்லா இருக்கியாமா"  என்று ராஜேஷ் கேட்க..
"எனக்கு என்ன அண்ணா அவரு நல்லாவே பார்த்துக்கிறாரு.. எனக்கு ஒரே ஒரு வருத்தம் தான் அண்ணா உங்களை எல்லாம் பிரிஞ்சி இருக்கிறது தான் கஷ்டமா இருக்கு அண்ணா" என்று சூர்யா கூற..
சூர்யாவின் தலையை வருடியவன்.." எங்களுக்கு தான் சூர்யா கயல் தான் நீ இல்லாம எப்படி இருப்பாளோன்னு பயந்துட்டே இருந்தோம் ஆனா கயலோ எங்களுக்கு ஆறுதல் சொல்லறா தெரியுமா..? கயல் வயசுல நீ இருக்கும் போது இப்படி தான் ஏதாவது பண்ணி எங்களை சந்தோஷப்படுத்திட்டே இருப்ப மா" என்று ராஜேஷ் கண்கலங்க..!
"அண்ணா ப்ளீஸ் அழாதீங்க"  என்று சூர்யா அவரது தோளில் சாய..!
"உங்க பாசமலர் காட்சியை பார்த்து எனக்கு புல்லரிச்சு போச்சுங்க.." என்று நித்திலா உள்ளே வர..
இருவரும் கண்களை துடைத்துக்கொண்டனர்.
"நித்திலா நாங்க அப்படிதான் இப்போ என்னங்கிற..?"
"நான் ஒண்ணும் சொல்லலப்பா" என்று நித்திலா கூற..
தனது அண்ணியை அணைத்தவள்" என் அண்ணி என் அம்மா  மாதிரி அப்படி  சொல்லவும் மாட்டாங்க.. அண்ணி உங்களுக்கு ஏதாவது வேணுமா நான் செஞ்சு தரவா" என்று சூர்யா ஆசையாய் கேட்க..
"செஞ்சு தரவா அண்ணி  என்று சூர்யா கேட்க” சூர்யா "  என்று கையை பிடித்து உட்கார வைத்தாள் நித்திலா.
"சூர்யா நீ சந்தோஷமா இப்படி வாழ்றதை பார்க்கிறதுக்காக தான் வாழ்றோம்.  உன்னை இப்படி பார்க்க எங்களுக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா..?"  என்று சூர்யாவிற்கு நெட்டி எடுத்தாள்.
"அண்ணி நீங்க இல்லாம எப்படி வாழ்வேன்னு நினைச்சேன் ஆனா ஆதி என்னை நல்லாவே பார்த்துக்கிறான் தெரியுமா..?" என்று மனதினுள் தன் கவலைகளை எல்லாம் மறைத்தாள்.
"தெரியுமா ஆதி உன்னை அந்த அளவுக்கு விரும்பறான்.. அவன் என்கிட்ட சொல்லும் போதே நான் உணர்ந்து இருக்கேன் நீ தான் அவன் உயிரே" என்று நித்திலா கூற..
சூர்யா புன்னகை மட்டும் பதில் அளித்தாள்.
அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்திருந்து இரண்டு நாள்கள் தன் அருகிலேயே இருந்து பார்த்துக்கொண்டான் ஆதி..
கயல் எதை எல்லாம் கேட்கிறாளோ அதை அத்தனையும் வாங்கி கொடுத்தான்.. சூர்யாவிடம் தெரிந்த அந்த சந்தோஷத்தை கயல் உணர்ந்தாள் அந்த பிஞ்சு மனதில் நிம்மதி பரவியது.
கிளம்பும் முன்..
கயல் ஆதியிடம் தாவ..! அவனின் காதில் ரகசியம் பேசினாள்.
"மாமா பிங்கி பிராமிஸ்ஸை .." என்று கூறும் போதே..
"நான் நல்லா தான்டா சூர்யாவை பார்த்துக்கிறேன் அவ அழறதே இல்லை முன்னை மாதிரி.."
"ஸ்வீட் மாமா நானும் ஒவ்வொரு தடவை வரும் போதும் சூர்யாவை பார்ப்பேன் அப்போ சூர்யா அழுதிட்டு இருந்தா சூர்யாவை நான் கூட்டிட்டுபோயிடுவேன்.." என்று அந்தபிஞ்சு கூற..
"அச்சோ கயல் கண்ணா அப்படி மட்டும் பண்ணிடாதா டா அப்புறம் மாமா பாவம் ல.."
"மாமா..‌ எனக்கு முதல்ல சூர்யா தான் அப்புறம் தான் நீங்க அதனால‌..!"
"சூர்யாவை பத்திரமா பார்த்துக்கனும்.."
"அது தான் ஆதி மாமா" என்று கயல் ஆதியின் கன்னத்தில் முத்தமிட்டாள்.
"அப்போ மாமா  அழுதா கயல்..!" கண்ணா
"அதுக்கு தான் சூர்யா இருக்காளே மாமா ஆதிமாமா வை சூர்யா அழவிடவே மாட்டா ..!" என்று சூர்யாவையும்  தன்னோடுசேர்த்து அணைக்க..
"சூர்யா மாமா உன்னை ஏதாவது பண்ணாரு‌நான் என்கிட்ட சொல்லு நான் மாமாவுக்கு பனிஸ்மெண்ட் தரேன்" என்று சிறுபிள்ளையாய் கூற..
சூர்யா ஏனோ ஆதியவே  பார்த்துக்கொண்டே இருந்தாள்.
புன்னைகையோடு இருவரும் அனுப்பி வைத்துவிட்டு வீடு திரும்பும் வழியில்..
"சூர்யா நாம வாழ வேண்டாமா..? இன்னும்‌எத்தனை நாள் அம்மு.. என் தவிப்பு உனக்கு புரியுதா..நீ என் பக்கத்தில இருந்தும் உன் அன்பை என் மேல காட்டவே மாட்டற.." என்று ஆதி குரல் கரகரக்க..
சூர்யா எங்கோ பார்வையை வீசினாள்.
"சரி சூர்யா உன் விருப்பம்" என்று காரை ஓட்டியவன்.
சூர்யா ஆதியின் கையை இறுக்கப்பற்றினாள். அழுகை எங்கு இருந்து தான் வந்தது என்று தெரியவில்லை..! ஆதியின் கையை பிடித்துக்கொண்டு அழுதாள் வண்டியை ஓரமா நிறுத்தியவன்.
"அம்மு என்ன ஆச்சு" என்று ஆதி கேட்க..
"இல்லை ஆதி நான் .." என்று அவள் கூறும் முன்
"அம்மு இங்க பாருடி இப்ப எதுக்காக  டி இப்படி அழற..! என்னைபாரு நான் இனி‌எதுவுமே கேட்க மாட்டேன் நீ  என்னை வெறுத்தாலும் பரவாயில்லை..நீ என்  கூடவே இரு போதும் அம்மு ப்ளீஸ்..!"என்று ஆதி கெஞ்ச..
சூர்யாவின்‌ மனதில் என்ன தோன்றியதோ "வாழலான்னு சொன்னேல வாழலாம்" என்று சூர்யா கூற..
"நான் கேட்டதுக்காக நீ இப்படி சொல்லறியா அம்மு..!"
"இல்லை  ஆதி..! அது வந்து" என்று சூர்யா மறுத்தாள்.
ஆதியோ சூர்யா.."  நீ உன்‌மனசுல இருக்கிற குழப்பத்தை தீர்த்துட்டு வருவேன்னு சொன்னேல நான் இருக்கேன் உனக்காக உன் குழப்பம் என்னன்னு தெரியல ஆனா அது சீக்கிரம் சரியாகிடும்  நான் சொல்லறேன்ல சீக்கிரம் சரியாகிடும்"  என்று  ஆதி கூற..
"ஆதி..!" என்று சூர்யா கூற
"சரி விடு சூர்யா நீ இப்படி அழாதா உன்னை சிரிச்சே பார்த்துட்டு இப்படி அழுது பார்க்கவே முடியல ப்ளீஸ்..!"
இருவரும் காரை எடுத்து கிளம்பினர்..
நாளுக்கு நாள் ஆதியிடம் இருந்து சூர்யா விலகியே சென்றாள்.
ஓர்நாள்..
"சூர்யா நில்லு நீ என்னபண்ற உன் லைப் ..!" என்று ஆதி கூற..
"என் லைப் நான் எப்படியோ இருக்கேன்  " என்று சூர்யா கூற..
"சூர்யா நான் உனக்காக செஞ்ச சாப்பாட்டை கூட சாப்பிட மாட்டேங்கிற.. சரி நீயாவது செஞ்சு சாப்பிடுவேன்னு பார்த்தா..நீ எதுவுமே இப்படி சாப்பிடாம எதுக்காக உன்னை வருத்திக்கிற..
"என் உடம்பு மிஸ்டர் ஆதி நான் என்னவோ பண்றேன் உங்களுக்கு என்ன..? "
"சூர்யா முட்டாள் தனமா பண்ணாதா டி..! நீ இப்படி பண்றவளே கிடையாது எதுக்காக இப்படி பண்ற சூர்யா காரணம்சொல்லு..!"
"இப்படி சாப்பிடாம உன்னை வருத்திக்க காரணம் என்ன..?"
"நீ தான் " என்று  சொல்லிவிட்டு தன் ரூமில் சென்று அடைந்தாள்.
ஆதி விக்கித்து போய் நின்றான்.
மற்றொரு நாள்..
இரவு வெகு நேரமாகியும் சூர்யா வரவில்லை..! மழை வேறு நின்றபாடில்லை.. ஆதிக்கோ இருப்பு கொள்ளவில்லை
அவளிற்கு கால் செய்தாலும் கால் போகவில்லை..
வெகு நேரம் கழித்தே வீட்டிற்கு வந்தாள் சூர்யா..
"எங்கடிபோயிட்டு வர..!"
"நான் எங்க போனா என்ன..?" என்றாள் சூர்யா..
சேலையினுள் மறைத்து வைத்திருந்ததை தட்டிவிட்டவன்..
அதில் பூக்கூடை இருந்தது அதில் இருந்த பழங்களும் பிரசாதமும் சிதறியது அதை சூர்யா எடுத்து வைத்தாள்.
"நீ கோவில் தான் போனேன்னு சொல்லி இருக்கலாம்ல அம்மு..!"
"நான் உன்னை எங்க எங்க எல்லாம் தேடுனேன் தெரியுமா..!"
சூர்யாவிடம் எந்த பதிலும்  இல்லை..
"ஏன் இவ்வளவு நேரம் அம்மு..?"
சூர்யா எழுந்தவள்.. "கொஞ்ச நேரமாச்சும் நிம்மதியா இருக்கலாம்ன்னு தான் கோவில் போனேன் போதுமா.."
"நான் உன்னை கஷ்டப்படுத்தறேனா டி..? என் கூட இருக்கிறது உனக்கு வலியா இருக்கா.."
"ஆமா வலியா இருக்கு.. !"
"சூர்யா..!"
"எனக்கு இங்க இருக்கவே புடிக்கல நான் எங்க வீட்டுக்கு போகனும் என் சந்தோஷமே அங்க தான் இருக்கு..!" என்று சூர்யா கூற..
"அப்போ நான்‌உனக்கு சந்தோஷம் இல்லையா ..?"
"இல்லை ஆதி நீ இல்லை" என்று சூர்யா கூற..
"ஓரே வீட்டுல இருந்துட்டு இப்படி தனி தனியா இருக்கிறது எனக்கு பைத்தியம் பிடிக்குது" என்று சூர்யா கூற..
"சரி சூர்யா நீ போ..! உன் சந்தோஷம் இருக்கிற அந்த இடத்துக்கே போ.."
"என்னை அந்த இடத்தில இருந்து கூட்டிட்டு வந்தது நீ தானே நீயே கூட்டிபோ எத்தனை நாள் ஆனாலும் சரி உன் வேலை இருந்தாலும் சரிநான் வெயிட் பண்றேன் " என்று சூர்யா அறைக்குள் சென்று கதவை தாழிட்டாள்.
அழுது தீர்த்தாள்..‌ஆதியோ மனதில் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி தவித்தான்.

உயிர் கொள்கிறேன் உன்னால் - Good Ending(முடிவுற்றது)Место, где живут истории. Откройте их для себя