சென்னை..
"ஐ சூர்யா நீ வந்துட்டியா..! என்று கயல் குட்டி சூர்யாவை அணைத்துக் கொண்டு முத்தமழை பொழிந்தாள்..
"நீ இல்லாம நான் எங்கேயும் வெளியில போறதே இல்லை சூர்யா.. மம்மு வேஸ்ட்டு ஒரு ஸ்டோரி கூட உன்னை மாதிரி சொல்ல தெரியல..!" என்று அங்கிருந்த அனைவரையும் வசைப்பாடியவள்..
சூர்யா கயலை தூக்கியப்படி.. எதுவுமே பேசாமல் அறைக்குள் வந்துவிட்டாள் நித்திலா அதை கவனிக்க தவறவில்லை..
ஆதியை பார்த்தவளோ..'என்ன பிரச்சனை' என்று யூகிக்க முயன்று தோற்று போனாள்.
அதற்கு இடமளிக்காமல் ஆதியே விஷயத்தை கூறினான் சற்று தயக்கத்துடனே கூறினான்.
"மாமா எனக்கு முக்கியமான வேலை இருக்கு..? சூர்யாவுக்கும் உடம்பு சரியில்லை.. என்னால கூட இருந்து பார்த்துக்க முடியாத சூழ்நிலையில நான் இருக்கேன்.. ஒரு வாரம் தான் வந்திடுவேன்" என்று தயங்கியப்படி பொய் கூறினான் ஆதி.
"என்ன மாப்பிள்ளை நீங்க இப்படி தயங்கிட்டு இருக்கீங்க இன்னமும் நல்லா சகஜமா இருங்க அம்மாடி நித்திலா தம்பிக்கு காப்பி எடுத்துட்டு வாமா..?" என்று நித்திலாவை அனுப்பி வைத்துவிட்டு ஆதியிடம் ரகசியம் பேசினார்.
"சூர்யா ஏதாவது தப்பு பண்ணிட்டாளா..? மாப்பிள்ளை அதுக்காக நான் உங்கிட்ட மன்னிப்பு..!" என்று அவர் கூறும் முன்பே..
ஆதி அவரது கையைப்பிடித்தவன்.. "மாமா என் மேல நம்பிக்கை இருக்குல சூர்யாவுக்கு உடம்பு சரியில்லை அவளை பார்த்துக்கனும்.. அதனால தான் ஒரு வாரம் வீட்டில விடறேன் அவ நல்லா இருந்தா என் கூடவே கூட்டிட்டு போய் இருப்பேன் .. நீங்க மன்னிப்பு கேட்கிற அளவுக்கு சூர்யாவும் அப்படி வளர்க்கப்படல நானும் அப்படி வளர்க்கப்படல" என்று ஒரே வார்த்தையில் அவருக்கு அனைத்தையும் புரிய வைத்துவிட்டான் ஆதி..
மனம் நிறைவான மகிழ்ச்சியோடு.. காப்பியை பருகினார்கள்.
"அப்ப நான் கிளம்பறேன்.. மாமா அக்கா நான் கிளம்பறேன் சூர்யாவை பத்திரமா பார்த்துக்கோங்க.."என்று ஆதி எழுந்தான்.
நித்திலாவோ “சூர்யா சூர்யா" என்று அழைத்தும் சூர்யா வெளியே வரவில்லை..
"கயல் " என்று அழைத்ததும்.. கயல் ஓடி வந்தாள்.
"அக்கா நான் பார்த்துக்கிறேன் சூர்யாவை விட்டு ஒரு வாரம் இருக்க போறேன்ல அதான் மேடம் கோபமா இருக்காங்க போல..!" என்று பொய்யாய் கூறிவிட்டு சூர்யாவின் அறைக்குள் வந்தான் ஆதி.
பெட்டில் படுத்திருந்தவள் எழுந்தாள்.
"வேண்டாம் படு நீ ஆசைப்பட்ட மாதிரியே உன்னை இங்க கொண்டு வந்து சேர்ந்துட்டேன் என் கடமை முடிஞ்சிருச்சு.. எனக்கு ஒரு பிரச்சனை உன்னையும் இதுல சேர்க்க நான் விரும்பல பிரச்சனை முடியட்டும் வந்து பேசற உங்க வீட்டுல.." என்று ஆதி கூற..
"என்ன பிரச்சனை ..? என்கிட்ட கூட சொல்ல முடியாத அளவுக்கு பிரச்சனையா..?" என்று சூர்யா ஆதியை பாராமல் கேட்க..
"இது வேற பிரச்சனை இதை சொல்லி ஏற்கனவே வலியில இருக்கிற உன்னை இன்னும் கஷ்டபடுத்த விரும்பவே இல்லை சூர்யா அதான் பிரச்சனை முடியட்டும் நானே வந்து உங்க வீட்டில பேசி முடிக்கிறேன்.." என்று ஆதி கூற.
சூர்யா மெளனமாய் நின்றாள்.
ஆதி அவளது அருகில் வந்தவன்.. அவளை பின்னால் இருந்து அணைத்தான்.
"மேடம் கோபமா இருப்பீங்க தெரியும்..? ஆனா எனக்கு இது தேவை இன்னும் ஒரு வாரம் என்னால இருக்க முடியுமான்னு தெரியல வந்து நம்ப பிரச்சனையை பேசிக்கலாம்.. !" என்று பின்னால் இருந்தே சூர்யாவின் கன்னத்தில் முத்தமிட்டு மறைந்தான்.
ஆதி வேக வேகமாக தன்னை விட்டு செல்வதை மனம் தாங்கமாட்டாமல் கண்ணீர் கண் முன்னே தேங்கி நின்றது.!
"கண்ணீரை துடைக்க நீ வருவாயா..! என் அன்பே" என்று சூர்யாவின் மனம் ஏங்கி தவித்தது ' ஆதி இல்லாத ஒரு நிமிடம் கூட தன்னால் இயலவில்லை.. அப்புறம் எப்படி வாழ்நாள் முழுவதும்' என்று குழப்பத்திலேயே சோர்ந்து போனாள் சூர்யா.
வெளியே வந்தவன்.."கயல் குட்டி மாமா.. ஊருக்கு போயிட்டு வந்திடுவேனா நீ சூர்யாவை பத்திரமா பார்த்துக்குவியாம்.." என்று கைநீட்டியவன்..
"டன் மாமா" என்று ஹைபைவ் இட்டு விட்டு சென்றான்.
'சூர்யா மன்னிச்சுடு நான் போற அந்த இடத்துக்கு உன்னை கூட்டி போக முடியாது அது இன்னும் வலியை தான் தரும் உனக்கு.. நீ இங்கேயே இரு வந்து நீ ஆசைப்பட்டதை தரேன் ..!' என்று ஆதியின் மனம் நினைவில் வாழும் சூர்யாவிடம் பேசியது.
"நீ என் அருகில் இல்லை..!
ஆனால்.,
உன் நினைவுகள் மட்டும்
எப்போதும் என் அருகிலே..
கருவிழியாளே..! "
'எந்த வீட்டிற்கு வரகூடாது' என்று இதுவரை கட்டுப்பாட்டுடன் இருந்தானோ இன்று அந்த வீட்டில் கால் எடுத்து வைக்க வேண்டிய நிலை..! வெறுப்பாய் தான் உணர்ந்தான் ஆதி.
நேற்று இரவு ..
இதே வீட்டில் இருந்து போன்.. இரண்டு வரி..
"உன் அப்பா உயிருக்கு போராடிட்டு இருக்காரு வா" என்று அந்த வரிகள் மட்டும் அந்த குரலிடம் இருந்து வேண்டா வெறுப்பாய்.. எதுவும் பேசாமல் போனை வைத்தவனின் மனம்.. தெளிவாய் ஒன்றை உணர்த்தியது.
'எந்த காரணம் கொண்டும் சூர்யாவை இந்த வீட்டினுள் அழைத்து வரகூடாது என்று தான்..' அதற்கு தான் என்ன செய்ய வேண்டும் செய்ய கூடாது என்று பலமுறை யோசித்தபின் தான் முடிவு செய்திருந்தான்.
வீட்டின் முன் டாக்ஸி நிற்க இறங்கியவன் வீட்டை ஆழமாக பார்த்தான்.. சிறுவயதில் ஆசை ஆசையாய் சுற்றி திரிந்த வீடு.. ஆதியின் நினைவலைகளில் அவளது அம்மா சாந்தலட்சுமியின் முகம் மட்டுமே ஓடியது. கண்களை துடைத்தப்படி ஆதி காரை விட்டு இறங்கினான்.
உள்ளே இருந்து வேலையாள் வர.." கணேஷ் அண்ணா எப்படி இருக்கீங்க ..?" என்று ஆதியின் முகம்புன்னகை தழும்பியது.
சிறுவயதில் அம்மாவும் இவரும் தன்னை வளர்த்தது தான் நினைவிற்கு வந்தது.
"ஐயா பையை கொடுங்க" என்று குனிந்த தலை நிமிராமல்..! வாங்கி கொண்டு சென்றுவிட்டார்.
'எல்லாம் அவளது ராஜ்ஜியம் ஆகியிற்றே' என்று மனதில் நினைத்தவன் வெறுப்பாய் வீட்டினுள் நுழைந்தான்.
எதிரே கால்மேல் கால் போட்டு கொண்டு அமர்ந்திருந்தாள் அகிலாண்டேஸ்வரி..! எந்த ஒரு குற்ற உணர்வும் இல்லாமல் அவள் அமர்ந்திருந்த தோரணையை ஆதியின் வெறுப்பை இன்னும் தூண்டியது.
"வா ஆதி.. வா எங்க வராமா போய்விடுவியோன்னு.. நினைச்சேன் உனக்குள்ளேயும் கொஞ்சம் பாசம் ஒட்டிட்டு இருக்கதானே செய்யும் .." என்று அவளின் பேச்சு ஆதியின் காதில் எரிச்சலை உண்டாக்கியது.
'ஆதி இது எல்லாத்தையும் எதிர்கொள்ள தானே நீ வந்த அப்புறம் என்ன..?' என்று சொருமியவன்.
"கணேஷ் அண்ணா அவரு எங்க இருக்காரு.. ?" என்று கேட்க..
"தம்பி " என்று வேலையாள் நடுங்கியவன்.
"ம்ம்ம்..! கூட்டிட்டு போய் காட்டு" என்று அகிலாண்டேஸ்வரி எழுந்து அந்த இடத்தைவிட்டு சென்றாள்.
"தம்பி நீங்க நினைச்சுட்டு இருக்க மாதிரி இங்க எதுவும் மாறல எந்த வாழ்க்கை எந்த மனுஷங்க எல்லாம் வேண்டாமுன்னு வெறுப்பா போனீங்களோ அவங்க தான் அப்படியே இருக்காங்க ..!" என்று கணேஷ் பயந்தப்படி கூற..
"மத்தவங்க எப்படியோ எனக்கு தெரியாது அண்ணா..! ஆனா நான் மாறல என்கிட்ட நீங்க எப்படி நடந்துக்குவீங்களோ அப்படி நடந்துக்கோங்க.. சரி அவருக்கு எப்படி ஆச்சு..?"
"மாடியில இருந்து கீழவிழுந்தவரு தான் தம்பி எழுந்திரிக்கவே இல்லை..! அந்த அம்மாவும் பார்க்காத ஹாஸ்பிட்டல் இல்லை..! நேத்து மூச்சு திணறல் ரொம்ப அதிகமாகிட்டே போயிருச்சு..!
நாங்க ரொம்ப பயந்தே போயிட்டோம் ஆதின்னு உங்கபேரை சொல்லி கூப்பிட்டாரு அதான்.. நீங்க வந்தா உயிர் பிழைப்பாறான்னு பார்க்கிறாங்க..!" என்று வேதனையோடு கூற..
"ம்ம்ம்..!" என்று அனைத்தும் நிதானமாக கேட்டுகொண்டு வந்தவன். மாடியறையில் இருந்த புகைப்படத்தை பார்த்ததும் நின்றான்.
தன் அம்மாவின் புகைப்படம்.. தன் அம்மாவின் புகைப்படத்தை தடவியவன்..' இந்த வீட்டுல உங்க போட்டோவுக்கு இடம் இருக்கே எனக்கு அது போதும்' என்று தனது அப்பா படுத்திருந்த அறைக்குள் சென்றான்.
மனமே வெடித்துவிடுவது போல் உணர்ந்தான் உடல் மெலிந்து உயிர் ஊசலாடிக்கொண்டு இருந்தது. இறக்கும் தருவாயில் தான் கெட்டவர்கள் கூட நல்லவர்களாக மாறிவிடுகின்றனர்.
நினைவில் இருந்து செயலற்று இருந்த தனது அப்பாவிடம் சென்றவனுக்கு கண்ணீர் வரத்தான் செய்தது.
குளுக்கோஸ் ஏறிக்கொண்டு இருக்க.. அருகே நர்ஸ் அவரை கவனித்துக்கொள்ள நியமிக்கப்பட்டு இருந்தாள்.
"எவ்வளவு நாள் அண்ணா ஆச்சு..? இப்படி" என்றுஆதி தழுதழுத்தான்.
"ஆறு மாசமாச்சு தம்பி ரொம்பவே மாறிப்போயிட்டாரு" என்று கணேஷ் அழுதார்.
நர்ஸோ ஒதுங்கியே நின்றாள் அவரது கையை பற்றியவன் வெகு வருடங்களுக்கு பிறகு தனது அப்பாவின் விரல்களை பற்றுகிறான்.. அந்த அழுத்தம் அவனிற்குள் சிலிர்ப்பை ஏற்படுத்தியது.
கண்களை துடைத்தவன்.."இனி நான் இருக்கேன் உங்களுக்கு எதுவும் ஆகாது .." என்று நம்பிக்கையோடு கையை வருடிவிட்டான்.
"அண்ணா இவருக்கு பக்கத்தில இருக்கிற ரூம் எனக்கு வேணும்..? வேற யாரோடையதா இருந்தாலும் பரவாயில்லை ..! "என்று ஆதி கூற..
"தம்பி அது ராம் தம்பி ரூம் ஆச்சே..?"
"எனக்கு தெரியாது அவங்கிட்ட சொல்லி ஏற்பாடு பண்ணுங்க..!" என்று ஆதி குளிக்க சென்றான்.
கணேஷ் அந்த விஷயத்தை கூற.. அகிலாண்டேஷ்வரி ஆடித்தான் போனாள். ' ராம் வேறு கனடாவில் இருந்து வரப்போகிறான்.. அவனது கோபம் எரிமலையாகிற்றே..! எப்படி சாமாளிப்பது இவனையும் விட இயலாது ஆதி ஆதி என்று இரண்டு நாட்களாக தான் அவருக்கு உணர்வே வருகிறது அவர் சரியாக வேண்டும் என்றால் இவன் இருக்க வேண்டுமே என்ன செய்வது ..!' என்று அகிலாண்டேஷ்வரி பயத்தில் இருந்தாள்.
"என்ன நடந்தாலும் சமாளித்து தானே ஆக வேண்டும் எனக்கு அவர் பழையபடி வேணும்.. " என்று அகிலாண்டேஷ்வரியின் மனம் துணிந்து தான் நின்றது.
"அவன் கேட்ட ரூமை ரெடி பண்ணி கொடுங்க ஆனா ஒண்ணு அதுக்கு மேல அவன் எதையும் எதிர்பார்க்க கூடாதுன்னு சொல்லிடுங்க.." என்று எச்சரித்து அனுப்பினாள்.
மாடியில் இருந்து இறங்க வந்த ஆதியோ அதை கேட்டு விட்டான்.
"எதிர்பார்க்கிறதா.. யார் யாருக்கு எதிர்பார்த்து காத்திருக்கிறது இது என் வீடு.. என் அப்பா ஆசை ஆசையா என் அம்மாவுக்காக கட்டின வீடு பின்னாடி வந்தவங்க எல்லாம் பேசறதுக்கு உரிமையில்லை " என்று ஆதி நேரடியாகவே பேசினான்.
"ஓஓஓஓ..! . சொத்தில உரிமை கொண்டாட தான் வந்தியோ..ஒருநிமிஷத்தில் நல்லவன்னு நினைச்சேன்...!"
"நல்லவனா அதுக்கு அர்த்தம் என்னனு எல்லாம் உங்களுக்கு தெரியுமா..? சொத்தாம் சொத்து அது யாருக்கு வேணும்.. பிச்சை காசு எனக்கு இது எல்லாம்..!"
"அவர் முடியாம இருக்கிறாரு எதுவும் பேச வேண்டாம் பேச்சை வளர்க்க நான் விரும்பல நான் இருக்க போறது ஒரு வாரம் தான்.. !" என்று ஆதி முடிவாக கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.
"சொத்தா சொத்தா இது எல்லாம் என் மகன் கஷ்டப்பட்டு சம்பாதிச்சு இரவு பகலுன்னு பார்க்காம பிஸினஸை எடுத்து நடத்தினான். முறையா அவனுக்கு தான் போகனும்.." என்று மனதில் உறுதி கொண்டாள் அகிலாண்டேஷ்வரி.
ESTÁS LEYENDO
உயிர் கொள்கிறேன் உன்னால் - Good Ending(முடிவுற்றது)
Fantasíaகாதலால் காதலை வெல்ல முடியுமா...? வென்றார்கள் இருவருமே ஒருவரை ஒருவர் அன்பால்... ஆதி ❤️சூர்யாவாக