அந்த சங்கிலியில் பொருந்தி போன அக்கல்லை ரன்பீர் எடுக்க முயன்று பார்க்கிறான், அந்த முயற்சியால் அவன் விரல்கள் வலித்ததே தவிர அக்கல்லை துளிக்கூட நகர்த்த இயலவில்லை.
ரன்பீருக்கு மீண்டும் அபினவ் மேல் கோபம் வர, அவனை திட்டுவதற்கு தன் வாயை திறக்கிறான், அவ்வேளை வெளியே ஆட்டு பட்டியிலிருந்த பபிதா குரல் கேட்க, சட்டென்று இருவரும் அவற்றை படுக்கை விரிப்பின் கீழ் மறைத்து வைத்துக் கொண்டனர்.
பபிதா அவர்களை உறக்கத்திலிருந்து எழுமாறு கூறிக் கொண்டே வீட்டினுள் நுழைய, ரன்பீரும் அபினவும் அவள் முன் பொய்யாக, இப்போது தான் எழுந்தது போல சோம்பல் முறிக்கிறார்கள்.
பபிதா அவர்களிடம் வந்து, 'என் தங்கங்களே... நேற்று என் மனதிற்கு நீங்கள் ஏதோ அசம்பாவிதத்தில் மாட்டிக் கொண்டது போன்ற உணர்வு ஏற்பட்டது, அதனால் தான் நான் அவ்வாறு நடந்து கொண்டேன், நீங்கள் இருவரும் என் உயிர் போன்றவர்கள், ஒரு காலத்திலும் நீங்கள் என்னை விட்டு பிரிய நான் அனுமதிக்கமாட்டேன், அது போல நீங்கள் இருவரும் உங்கள் வாழ்வில் எந்த சூழ்நிலையிலும் பிரியாமல் ஒற்றுமையோடு இருக்க வேண்டும் என்பது என் ஆசை... இல்லை... இது என் கட்டளை... எதிர்காலத்தில் ஒருவரை விட்டு ஒருவர் பிரிய வேண்டுமென்ற எண்ணம் கூட உங்களுக்கு வராது, என்று எனக்கு சத்தியம் செய்து கொடுங்கள்', என்று கண்கள் குளமாக பபிதா இருவரிடமும் கேட்க, இருவரும் அவளை கட்டியணைத்து நெகிழ்வுடன் சத்தியம் செய்து கொடுத்தனர்.
இப்போது பபிதா கண்ணீரை துடைத்துக் கொண்டு, சிறு புன்முறுவல் உதிர்க்க, தன் வேளைகளை செய்ய அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.
ரன்பீருக்கும் அபினவிற்கும், பபிதா அவ்வாறு தங்களிடம் கேட்டு கொண்டது மனதிற்குள் ஏதோ சிறு நெருடலை ஏற்படுத்த, ரன்பீர் படுக்கை விரிப்பின்கீழ் வைத்தவற்றை எடுத்து, 'பரவாயில்லை அபினவ் முன்பை விட இப்போதுதான் இது பார்ப்பதற்கு அழகாய் உள்ளது', என்று கூறி அபினவோடு சமாதானமாக அவனும் ரன்பீரோடு சமாதானமானான்.
YOU ARE READING
பாலைவன தேசம்
Fantasyசில நூறு ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தானில் உள்ள சலொயி வான் (சோலை வனம்) என்னும் பாலைவன நகரத்தில் கதைகளத்தை அமைத்துள்ளேன். இதில் இடம்பெறும் கதைகளம் மற்றும் கதை மாந்தர்கள் அனைத்தும் கற்பனையே. மேலும், இது என் முதல் முயற்சி. நம் கதையின் நாயகன் ரன்...