பபிதா தன் மடியிலே உறங்கி போன ரன்பீரை தூக்கி சென்று வீட்டினுள் படுக்க வைத்தாள்.
பின்பு வெளியே வந்து மூட்டப்பட்ட தீ முன்பு அமர்ந்து மற்றவர்களோடு பேச தொடங்கி விட்டார்.
சிறிது நேரத்தில் தீ தானாக அனைந்து, அதில் போடப்பட்ட குச்சியும் சருகும் சாம்பலாக மாறின.
சாயா தாதி அதில் தண்ணீர் ஊற்றி அனலை தனித்து விட்டார். பின் ஒரு குவளை தண்ணிரில் அவற்றை எடுத்து கரைத்தார். அந்த சாம்பல் கரைத்தை தண்ணீர் மீது ஏதோ மந்திரத்தை ஓதி, அவரது வீட்டின் மீதும், ஆடு மற்றும் ஒட்டகங்கள் அடைக்கப் பட்ட பட்டியை சுற்றியும் தெளித்தார். மற்றவர்களும் அவ்வாறே செய்தனர். இவ்வாறு செய்வது தீய சக்திகளிடமிருந்து தங்களை காக்கும் என்று நம்பினர்.இந்த சடங்கு முடிந்ததும் அனைவரும் உறங்க சென்றுவிட்டனர்.
அடுத்த நாள் காலை விடிந்தது, சாயா தாதி சலொயி வான் நகரத்தின் மேற்கு திசையில் இருக்கும் 'ஹரா பர்வத்' என்னும் மலைக்கு தன் ஒட்டகத்துடன் சென்றார்.
இது ராஜஸ்தான் பாலைவன பிரதேசத்தில் இருக்கும் ஒரு மூலிகை மலையாகும். இந்த மலையில் உயர்ந்த மரங்கள் ஏதும் கிடையாது அனைத்துமே மூலிகை செடிகளும், மண்டிகிடக்கும் புதர்களும் அவற்றோடு சில விஷச்செடிகளும் தான். இங்கிருந்துதான் சாயா தாதி அந்த மந்திர சருகையும், மருத்துவத்திற்கு தேவையான வேர்கள் மற்றும் இலைகளையும் சேகரிப்பார்.
DU LIEST GERADE
பாலைவன தேசம்
Fantasyசில நூறு ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தானில் உள்ள சலொயி வான் (சோலை வனம்) என்னும் பாலைவன நகரத்தில் கதைகளத்தை அமைத்துள்ளேன். இதில் இடம்பெறும் கதைகளம் மற்றும் கதை மாந்தர்கள் அனைத்தும் கற்பனையே. மேலும், இது என் முதல் முயற்சி. நம் கதையின் நாயகன் ரன்...