ரன்பீர் அழுது கொண்டே மூச்சிறைக்க வீட்டிற்குள் ஓடி வருகிறான்.
அவன் நண்பர்களின் கேளிப் பேச்சு தன்னை துறத்துவது போல உணர்கிறான். மனமுடைந்து கண்ணீர் பெருக்கெடுத்து அமர்ந்திருக்க, பபிதா அவனருகில் வந்து என்ன ஆனாது ரம்பீர்?... என்று கேட்டதுதான் தாமதம், அடுத்தகனம் மனமுடைந்து கதறி அழுது கொண்டே, எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?... என்ற ஆதங்கத்தோடு சிறு பிள்ளை போல் அழுகிறான்.
அதை பார்த்து கொண்டிருந்த தாதிக்கு மனம் சற்று கவலையுற, வாயிலை பார்க்கிறார், ரன்பீரை பின் தொடர்ந்து அந்த வெள்ளை ஒட்டக குட்டி வீட்டின் வாசல் வரை வந்துவிட்டது.
ஆர்வம் மிகுந்த அக்குட்டி வீட்டிற்குள் நுழைய முற்பட, தாதி சுதாரித்து கொண்டு அக்குட்டியை ஆட்டு பட்டிக்கு அருகில் கட்டி போடுகிறார்.
பபிதா ரன்பீரிடம் நடந்த விவரத்தை கேட்க, அவன் அழுது கொண்டே விவரிக்க, இடைமறித்த தாதி, 'ரன்பீர் நீ இப்படி அழுவது அர்த்தமற்றது, நடந்ததை யாராலும் மாற்ற இயலாது, அதே போல் உன்னால் முடியாதது ஒன்றுமில்லை என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது, முதலில் சிறு பிள்ளை போல் கண்ணீர் வடிப்பதை நிறுத்து', என்று கூற.
பபிதாவும் தன் பங்கிற்கு ஆறுதல் கூறுகிறாள்.
இது நடந்து கொண்டிருக்கும் வேளை ரன்பீருடன் பயிற்சியில் இருக்கும் மாணவன் ஒருவன் வந்து, ரன்பீரை பயிற்சியாளர் அழைக்கிறார் என்று தகவல் கூற, கண்ணீரை துடைத்து கொண்டு கோபத்தோடு வெளியே வந்து அந்த ஒட்டக குட்டியை இழுத்து கொண்டு செல்கிறான்.
அவன் நிலை கண்டு பபிதா உள்ளுக்குள் சற்று கவலையுற்றாலும், சாயா தாதிக்கு இப்போது எந்த கவலையும் இல்லை, ரன்பீர் மீது அவர் வைத்திருந்த அளவு கடந்த நம்பிக்கையை காட்டிலும் அதற்கு மற்றுமோர் காரணமும் இருந்தது.
மைதானதிற்கு வந்த ரன்பீரையும் அவன் ஒட்டகத்தையும் பார்த்து சிலர் நகைக்க, அங்கு வந்த பயிற்சியாளர் ரன்பீரை நோக்கி, 'நீ இவ்வாறு என்னிடம் அனுமதி பெறாமல் இடையே செல்வது தவறு, ஒழுக்கமற்ற செயலாகும், இனி இவ்வாறு நடந்து கொள்ள கூடாது', என்று எச்சரித்தார்.
YOU ARE READING
பாலைவன தேசம்
Fantasyசில நூறு ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தானில் உள்ள சலொயி வான் (சோலை வனம்) என்னும் பாலைவன நகரத்தில் கதைகளத்தை அமைத்துள்ளேன். இதில் இடம்பெறும் கதைகளம் மற்றும் கதை மாந்தர்கள் அனைத்தும் கற்பனையே. மேலும், இது என் முதல் முயற்சி. நம் கதையின் நாயகன் ரன்...