சந்திர வனம் காட்டும் மனதை மயக்கும் கண்ணுக்கு தெரியாத மங்கையின் குரலில் மயங்கி தன்னிலை இழக்க இருந்தவனை, அபினவின் சிறு தீண்டல் சுயநினைவிற்கு மீட்டு வருகிறது.
அபினவ் ரன்பீரிடம் சில காய்ந்து இறுகிப் போன கொடி, மரக்கட்டைகள், மற்றும் சிறு பழங்களை கொடுக்கிறான்.
இவற்றை தன்னிடம் கொடுப்பதற்கான காரணம் என்ன... என்பதை போல ரன்பீர் அவனை நோக்க, 'நான் பாபவிடம் இப்போதுதான் கேட்டு வந்தேன் ரன்பீர், இவ்வனத்தில் முயல்களை வேட்டையாடலாம் என்று அவர் கூறினார், அதோடு நம்மை சுற்றிப்பார் ஆளுக்கொரு திசைக்குச் சென்று முயலுக்கு பொறி வைக்கிறார்கள், நீயும் இதைக் கொண்டு பொறி வைக்க செல்கிறாயா?... நீதான் இதில் கைத்தேர்ந்தவன் ஆயிற்றே, அதனால் இந்த வேலையை எனக்காக செய்கிறாயா!... உனக்கே தெரியும் என்னால் ஒரு நாள் கூட மாமிச உணவு உண்ணாமல் இருக்க முடியாது என்று', என மூச்சை நிறுத்தாமல் அபினவ் ரன்பீரை தன் பேச்சை கேட்க வைக்க, பதிலுக்கு ரன்பீரும், 'சரி... சரி... செல்கிறேன்...', என்றுக் கூறி அவற்றை தன் கையில் வாங்கிக்கொள்கிறான்.
பொறிவைக்க தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு நடக்கத் தொடங்கினான், ஆனால் சற்று காலத்தாமதம் ஆகிவிட்டது. ஆம் முயல் வளை இருக்கும் இடங்களுக்கு அருகிலேயே உடன் வந்தவர்களால் ஏற்கனவே பொறி அமைக்கப் பட்டுவிட்டது. இதில் அடையாளத்திற்கு வேறு தரையில் ஏதேதோ வினோத உருவ கிறுக்கல்களை போட்டு வைத்துள்ளனர்.
அவற்றை பார்த்துக் கொண்டே எங்கு சென்று பொறி அமைப்பது என்ற சிந்தனையில் தான் இருந்த இடத்திலிருந்து சற்று தூரமாக சென்றுவிடுகிறான்.
அவன் சென்று கொண்டிருக்கும் திசையை குறுக்கிடும் வகையில் பொறி அமைப்பதற்கான தகுந்த இடம் தென்படுகிறது, அங்கு யாரும் இதுவரை பொறி அமைக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டான்.
ஒரு வழியாக தகுந்த இடத்தை கண்டுப்பிடித்துவிட்டோம் என்ற பெரு மூச்சுவிட்டாலும், சட்டென்று தான் வந்த திசை அறிய திரும்பும் வேளைதான் தெரிகிறிது அவன் வெகு தொலைவு நடந்து வந்துவிட்டான் என்று, அதே வேளை சற்று நேரத்திற்கு முன்பு தன்னை மயக்கிய குரலின் நினைவு வந்து மனம் ஏனோ படபடக்கிறது. இங்கிருந்து எவரையாவது பார்க்க முடிகிறதா... என்று பின்னால் திரும்பி கண்களை அலைப்பாய விட, தன்னுடன் வந்த ஒரு சிலரின் தலை மட்டும் ஆங்காங்கே சிறு புள்ளி போல் கண்ணுக்கு தென்பட சற்று நிம்மதியடைகிறான்.
ČTEŠ
பாலைவன தேசம்
Fantasyசில நூறு ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தானில் உள்ள சலொயி வான் (சோலை வனம்) என்னும் பாலைவன நகரத்தில் கதைகளத்தை அமைத்துள்ளேன். இதில் இடம்பெறும் கதைகளம் மற்றும் கதை மாந்தர்கள் அனைத்தும் கற்பனையே. மேலும், இது என் முதல் முயற்சி. நம் கதையின் நாயகன் ரன்...