அவர்கள் இருவரும் அலறிக் கொண்டே அந்த துளை வழியாக குகையினுள் விழுகிறார்கள்.
நெடு நேரமாக காற்றில் பறந்தபடி ரன்பீரும் அபினவும் கைக்கோர்த்துக் கொண்டே தொப்பென்று அந்த குகையின் தரையில் விழுந்தனர்.
அப்போது வீட்டில் மதிய உணவு தயார் செய்து கொண்டிருக்கும் பபிதாவின் மனம் ஏனோ பட படக்கிறது.
தன் மகன்களுக்கு ஏதோ அசம்பாவிதம் நடத்திருக்குமோ என பதறுகிறாள்.
ஒரு தாயின் மனதிற்கு அதை அறியும் சக்தி உண்டு என்பது எந்த காலத்திலும் மறுக்கமுடியா நிதர்சன உண்மை.
விரகுகளை அடுப்பில் இட்டுக்கொண்டே அவள் மனம் சிந்தனையில் ஆழ கையை நெருப்பால் சுட்டுக்கொள்கிறாள்.
ஸ்ஆஆ... என அவளின் சத்தம் கேட்டு சாயா தாதி என்ன ஆயிற்று பபிதா, அடுப்பில் இருக்கும் போது கவனத்தை எங்கும் சிதறவிட கூடாது, பார்த்து கவனமாக இரு என்று கூற,
பபிதா, இல்லை சாச்சி எனக்கு என்னவோ மனது பட படக்கிறது, இதை பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு, வீட்டின் வாசலை கடந்து வந்து தூரத்தில் தெரியும் ஹரா பர்வத்தை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
அப்போது அந்த வழியாக மைதானத்திலிருந்து வந்த சில சிறுவர்களை அழைத்து நீங்கள் ரன்பீரையும் அபினவையும் பார்த்தீர்களா? என தழு தழுக்கும் குரலில் கேட்டாள்.
அந்த சிறுவர்கள் சற்று நேரம் யோசித்துவிட்டு, ஆம் அம்மா அவர்கள் சிறிது நேரத்திற்கு முன்பு மைதானத்தில் நடக்கும் பயிற்சியை பார்த்துக் கொண்டிருந்தனர், என கூற அவள் மனம் சிறிது ஆறுதல் அடைந்தது.
ஆனால் முழுமையாக அல்ல, இவற்றை பார்த்து கொண்டிருந்த தாதி அவள் அருகே வந்து, உனக்கு என்னவாயிற்று, என் இப்படி பதறுகிறாய் என்று கேட்க,
இல்லை சாச்சி, எனக்கு ரன்பீரும் அபினவும் ஏதோ ஆபத்தில் மாட்டிக் கொண்டது போல ஒரு உணர்வு ஏற்பட்டது என நடுங்கும் குரலில் கூற,
YOU ARE READING
பாலைவன தேசம்
Fantasyசில நூறு ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தானில் உள்ள சலொயி வான் (சோலை வனம்) என்னும் பாலைவன நகரத்தில் கதைகளத்தை அமைத்துள்ளேன். இதில் இடம்பெறும் கதைகளம் மற்றும் கதை மாந்தர்கள் அனைத்தும் கற்பனையே. மேலும், இது என் முதல் முயற்சி. நம் கதையின் நாயகன் ரன்...