சலொயி வான், ராஜஸ்தானின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் ஒரு பாலைவன நகரம். வட மொழியில் 'சலொயி வான்' என்றால் சோலை வனம் என்று பொருள்படும். என்ன வித்தியாசமாக இருக்கிறதல்லவா. ஆம் சலொயி வான் நகரத்து மக்களும் அப்படிதான்.
சலொயி வானில் அனைத்திற்கும் பஞ்சம் தான், முத்துக்கள், ரத்தின கற்களை தவிர அதற்கு ஒரு காரணம் உண்டு அதை பிறகு பார்க்கலாம்.அங்கே தண்ணீர் பிடிக்கவும், உணவு தேடவும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும். அதுவே அவ்வூரில் வசிக்கும் மக்களின் பிரதான தொழிலாக இருந்தது.
நீங்கள் கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள், ஆம் அங்கு ஐந்து வயது நிரம்பிய குழந்தைகளுக்கு கூட ஒரு பணி ஒதுக்கப்பட்டிருந்தது. மாலை ஐந்து மணி வாக்கில் கிழக்கு நோக்கி ஒரு கிலோ மீட்டர் தங்களின் தாயுடன் பயணித்து அங்கே கிடக்கும் சுண்டு விரல் நீளம் உள்ள குச்சிகளை சேகரிக்க வேண்டும்.
இந்த பணியை அவர்களின் பதினைந்து வயது வரை செய்யவேண்டும்.அதற்கு பிறகு ஆண்கள் என்றால் வேட்டையாட பழகுவார்கள், பெண்கள் சமையல் கற்க தொடங்குவார்கள்.
இருபது வயது பூர்த்தி அடைந்த ஆண்கள் கண்டிப்பாக வேட்டைக்கு செல்ல வேண்டும்.
YOU ARE READING
பாலைவன தேசம்
Fantasyசில நூறு ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தானில் உள்ள சலொயி வான் (சோலை வனம்) என்னும் பாலைவன நகரத்தில் கதைகளத்தை அமைத்துள்ளேன். இதில் இடம்பெறும் கதைகளம் மற்றும் கதை மாந்தர்கள் அனைத்தும் கற்பனையே. மேலும், இது என் முதல் முயற்சி. நம் கதையின் நாயகன் ரன்...