நவ்ரத்ன வர்ஷ மஹொத்சவ், சலொயி வான் நகர மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியது. ஏனெனில், இந்நகரத்தில் கொண்டாடப்படும் ஓரே ஒரு பண்டிகையாகும். இது அவர்களின் பாலைவன போராட்ட வாழ்வில் நடக்கும் ஒரு ஆறுதலான அதிசய நிகழ்வு என்றே கூறலாம்.
ரன்பீர் தாதியோடு உற்சாகமாக நடனமாடுகையில், ஊர் தலைவர் புல்கித் ஐயா இடைமறித்து, 'ஊர் மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்', என்று கூறிவிட்டு திருவிழாவிற்கு தேவையான அனைத்து சடங்கு பொருட்களின் பட்டியலை கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.
மகிழ்ச்சியோடு வீடு திரும்பிய மக்கள் அதற்கான வேலைகளை செய்தனர். ரன்பீரும் மிகுந்த ஆவலோடு இருந்தான், தன் கால்களில் சக்கரம் கட்டிக்கொண்டு சுற்றிய தாதியிடம், தாதி அந்த விழா எப்படி இருக்கும் என்று கூறுங்களேன், என்று கேட்க. தாதி, அதை நாளை நீயே பார்த்து தெரிந்து கொள் ரன்பீர் கண்ணா, என்று கூறிவிட்டு நகர்ந்தார். இப்போது ரன்பீர் தன் பார்வையை பாப பக்கம் திருப்ப, பாபவிடமிருந்தும் அதே பதில் வந்தது.
ஒரு வழியாக இரவு தூக்கத்தை வரவழைத்துக்கொண்டு உறங்கிய ரன்பீர், அடுத்த நாள் காலை கண்விழித்தான். தான் காண்பது கனவா இல்லை நனவா என குழம்பி போகும் வகையில் சாயா தாதி, பாப மற்றும் அம்மாவும் கண்களை கவரும் வகையில் ஆடைகளையும், ஆபரனங்களையும் அணிந்திருந்தனர். இதுவரை இவ்வாறு அவர்களை கண்டதில்லை. பபிதா, எழுந்துவிட்டாயா ரன்பீர், வா குளித்துவிட்டு இந்த புது உடையை அணிந்து கொள், என ரன்பீர்ரை தயார் செய்து அவற்றை உடுத்திவிட்டார்.
அவற்றையெல்லாம் உடுத்திக் கொண்டு வெளியே வந்த ரன்பீருக்கு அடுத்த அதிசயம்,
VOUS LISEZ
பாலைவன தேசம்
Fantasyசில நூறு ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தானில் உள்ள சலொயி வான் (சோலை வனம்) என்னும் பாலைவன நகரத்தில் கதைகளத்தை அமைத்துள்ளேன். இதில் இடம்பெறும் கதைகளம் மற்றும் கதை மாந்தர்கள் அனைத்தும் கற்பனையே. மேலும், இது என் முதல் முயற்சி. நம் கதையின் நாயகன் ரன்...