சந்திர வனம் வீசிய மாயம் கலந்த குளிர்ந்த காற்றி மயங்கியவர்களாய், ஒருவர் பின் ஒருவராக ரன்பீர் முதற் கொண்டு அனைவரும் உள்ளே செல்ல, அதன் பிரம்மாண்டம் ஆளை மளைக்கவைக்கிறது.
அனைத்து மாணவர்களும் தங்களை சுற்றி சூழ்ந்திருக்கும் அச்சந்திர வனத்தின் அதிசய மலர்களையும், ஒளிரும் வண்டினங்கள் மற்றும் தங்களின் இரு கைகளையும் ஒன்று சேர்த்தால் கூட அதனுள் அடங்கா அளவுடைய பெருத்த வண்ணத்துப் பூச்சிகள் தங்களை சுற்றி வந்து வரவேற்பதை கண்டு மனம் வியந்தனர்.
அவர்கள் அனைவருக்கும் முன்பாக ஒரு வழி காட்டி போல் ஓமேஷ்வர் கையில் ஒரு நீண்ட குச்சியுடனும், மற்றொரு நீண்ட குச்சியின் நுனியில் மரப்பட்டைகளால் பின்னப்பட்ட ஒரு குடுவையுடனும் அவ்வனத்தினுள் சென்று கொண்டிருந்தார்.
அவர் வந்தடைய வேண்டிய இடமும் வந்து விட்டது. ஓமேஷ்வருக்கு பின் நின்றிருந்த மாணவர்கள் அனைவரும் வாயை பிளந்து கொண்டு தங்கள் தலையை வானுயர்த்தி பார்த்துக் கொண்டிருந்தனர்.
இதுவரை அவ்வனம் காட்டிய அனைத்து ஆச்சரியங்களும் இதற்கு முன் ஒன்றுமில்லை என்பது போல் தன் கிளைகளை பரப்பி பரந்து விரிந்து பிரம்மாண்ட உருவெடுத்து ஒரு மரம் வீற்றிருந்தது.
அம்மரத்தின் கிளைகளில் பந்து வடிவில் தங்க நிறத்தில் ஏதோ ஒன்று மரம் முழுவதும் வளர்ந்திருந்தது. அதை காண்பவர்கள் கண்களும் தங்க நிறத்தில் மிளிரத்தொடங்கின. அம்மரத்தின் வேர் பகுதியில் பாய்ந்தோடும் சிறு அருவி போன்ற நீரோடையும் சூரிய வெளிச்சத்தில் அதன் கதிர்களை பிரதிபளிக்கும் விதமாய், வைர கற்களை அதன் மீது மிதக்கவிட்டது போன்று மின்னிக் கொண்டிருந்தது.
ESTÁS LEYENDO
பாலைவன தேசம்
Fantasíaசில நூறு ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தானில் உள்ள சலொயி வான் (சோலை வனம்) என்னும் பாலைவன நகரத்தில் கதைகளத்தை அமைத்துள்ளேன். இதில் இடம்பெறும் கதைகளம் மற்றும் கதை மாந்தர்கள் அனைத்தும் கற்பனையே. மேலும், இது என் முதல் முயற்சி. நம் கதையின் நாயகன் ரன்...