அத்தியாயம் - 9

138 10 8
                                    

அதை பார்த்துவிட்டு வீடு திரும்பிய ரன்பீருக்கும் அபினவிற்கும் அதன் நினைவாகவே இருந்தது. அதன் பிறகு விளையாட சென்றாலும் அதை பற்றியே விவாதித்துக் கொண்டிருந்தனர்.

வழக்கமாக ரன்பீரும் அபினவும், இளைஞர்கள் பயிற்சி எடுக்கும் இடத்திற்கு சென்று, அவற்றை பார்ப்பதையே வாடிக்கையாக கொண்டிருந்தனர். பதினைந்து வயதிற்கு மேற்பட்டோர்க்கு கொடுக்கப்படும் பயிற்சி, சலொயி வானின் மைதானத்தில் நடக்கும். அதை நிறைய சிறுவர்கள் வேலிக்கு பின் கூட்டமாக நின்று பார்ப்பது வழக்கம்.

ஆனால் அன்று அவர்கள் மனம் மைதானத்தில் இல்லை. கண்கள் மட்டுமே அவற்றை பார்த்துக்கொண்டிருந்தது, இருவரின் உதடுகளும் அந்த மண்டபத்தை பற்றியே விவாதித்துக் கொண்டிருந்தன.

ரன்பீர், அபினவை சிறிது தூரம் அழைத்து சென்று, 'நாம் பார்த்ததை யாரிடமும் கூறாதே... தாதியிடம் கூட கூறக்கூடாது...' என்று கூறினான்.

அதை கேட்ட அபினவ், 'இதையேதான் ரன்பீர் நானும் உன்னிடம் கூறவந்தேன்' என்றான்.

(அடுத்த நாள் காலை)

அடுத்த நாள் காலை புலர்ந்தது. இருவரும் தாதிக்கு முன் எழுந்து தயாராக இருந்தனர்.

தங்களிடம் இருக்கும் ஒரு தேடலின் ஆர்வம் யாருக்கும் தெரியாதவாரு நடந்து கொண்டனர். ஹரா பர்வத்தை அடைந்ததும் அவர்களது கால்கள் அந்த ஊதா நிற பூக்கள் மலர்ந்திருக்கும் திசையை நோக்கி நடந்தது. இரண்டாவது குன்றின் உச்சியை அடைந்ததும், அந்த மண்டபம் அவர்கள் கண்ணில் பட்டது.

ரன்பீர் அபினவிடம், 'அதன் அருகில் சென்று பார்க்கலாமா?...' என்று கேட்கிறான்.

அபினவ் மனமும் அதையே கூறிக்கொண்டிருந்தாலும், ஒரு சிறு தயக்கம் காட்டினான். 'அப்படி செய்தால் ஊர் விதி முறைகளை மீறுவதாகிவிடும், இதுவரை யாருமே இப்படி ஒரு மண்டபம் இருக்கிறது, என்று நம்மிடம் கூறியதில்லை, மேலும் அதை பார்த்தால் ஆள் நடமாட்டம் இல்லாத இடம் போல் தோற்றம் அளிக்கிறது, எனக்கு சரிபடவில்லை ரன்பீர், வேண்டாம்...' என்று கூறினான்.

பாலைவன தேசம் Where stories live. Discover now