அத்தியாயம் - 11

104 7 5
                                    

அபினவ் ரன்பீரின் கையை பற்றி இழுத்துக் கொண்டு வேகமாக வெளியே ஓடி வந்தான்.

அவர்களின் ஓட்டம் சில மீட்டர் தூரம் சென்று நின்றது.

இருவருக்கும் ஓடி வந்த வேகத்தில் மூச்சுவாங்கத் தொடங்கியது. இருவரும் எதிரெதிரே நின்று கொண்டு மூச்சு வாங்கி கொண்டே, ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஓடி வந்த வேகத்தில் தொண்டை காய ரன்பீர் இரும்புகிறான்.

அபினவ் அவன் தோளை தட்டுகிறான். அவனுக்கு உள்ளுக்குள் பெருமிதமாக இருந்தது. 'ரன்பீர் பார்த்தாயா என் திறமையை, எப்படி வெளியே வரும் வழியை கண்டு பிடித்துவிட்டேன்!... அதற்காக நீ ஒன்றும் என்னை பாராட்ட வேண்டுமென்ற அவசியமெல்லாம் கிடையாது..., நான் உன்னுடன் இருக்கும் வரை எந்த சூழ்நிலையில் மாட்டிக் கொண்டாலும், உனக்காக நான் அதிலிருந்து மீண்டுவரும் வழியை கண்டு பிடித்து விடுவேன்', என்று பெருமிதம் பொங்க கூறினான்.

ரன்பீர் கண்களோ நெருப்பை உமிழும் வகையில் பார்வையை அபினவை நோக்கி வீசிக்கொண்டிருந்தது. ஏனென்றால் இறுதிவரை ரன்பீரால் அந்த ஓவியத்தில் இருப்பவனை பார்க்க இயலவில்லையே என்ற ஆதங்கம்.

அபினவ் தொடர்ந்து அவன் பெருமையை பாடிக் கொண்டிருக்க, ரன்பீர் பின்னால் திரும்பி அந்த குகையின் வாயிலை பார்த்துக் கொண்டிருக்கிறான். மறுபடியும் உள்ளே சென்று பார்க்கலாமா?... அதான் இந்த அவசர குடுக்கை வெளியே வரும் வழியை கண்டுபிடித்துவிட்டானே, என்று சிந்தனையில் ஆழ்ந்தவாரு இருக்க, குகையினுள் கிடைத்த அந்த மர்ம பொருளின் நினைவு வருகிறது.

தன் சட்டை பையை தொட்டு பார்க்கிறான், அதில் ஒரு பொருள் மட்டும் இருப்பதற்கான அறிகுறியே தென்படவில்லை.

ஆம் ஓடி வந்த வேகத்தில் அது எங்கேயோ விழுந்துவிட்டது.

அபினவ் இன்னும் அவன் பெருமை பாட்டை நிறுத்தவில்லை, ரன்பீருக்கு கோபம் தலைக்கேற, 'சற்று நிறுத்துகிறாயா...', என்று சத்தமாக கத்துகிறான்.

பாலைவன தேசம் Tempat cerita menjadi hidup. Temukan sekarang