அத்தியாயம் - 2

440 12 8
                                    


(அரை மணி நேரத்திற்கு முன்பு)
ரன்பீர் தன் தாயுடன் அந்த வறண்ட பகுதியை வந்தடைகிறான்.

அந்த நிலப்பகுதி வறண்டு போய் ஆங்காங்கே பிளவுற்று காணப்பட்டது. கண்ணிற்கு எட்டிய தூரம் வரை ஒரு மரம் கூட கண்ணில் படவில்லை, ஆனால் ஆச்சரியப்படும் விதமாக சில நொடிகளில் சிறு சுள்ளிக் குச்சிகள் அவர்களை நோக்கி காற்றில் பறந்து வந்தது.

பறந்து வந்த அடுத்த நொடி அனைவரும் கீழே குனிந்து பொறுக்க தொடங்கிவிட்டனர். ரன்பீரின் கையில் சிறு குவளையை கொடுத்து தாய் பபிதா அவற்றை சேகரிக்க சொன்னாள்.

ஒன்றும் புரியாத ரன்பீர் தாய் சொல்லை கேட்டு நடந்தாலும் சற்று நேரத்தில் விளையாட தொடங்கிடவிட, அருகில் இருந்த பபிதா மிரட்டும் தோணியில் ரன்பீர் என்று கூப்பிட்டாள், சற்றும் எதிர்பாராத சிறுவன் ரன்பீர் திடுக்கிட்டு போனான்.

பாவம் என்ன செய்வாள் பபிதா அவ்வாறு நடந்து கொள்ள மனம் கவலையுற்றாலும், நம் வாழ்வே இந்த குச்சிகளில்தான் அடங்கியுள்ளது என்பதை அவளால் ரன்பீரிடம் கூறமுடியாது. அப்படி செய்தால் ஊர் விதிமுறையை மீறுவதாகிவிடும்.

பயத்தோடு ரன்பீர் குனிந்த தலை நிமிராது வேலை செய்ய தொடங்கினான்.

ஆறு மணி ஆவதற்கு ஐந்து நிமிடம் இருந்தது. பபிதா ரன்பீரை அழைத்தாள். பயம் தெளியாத ரன்பீர் வேகமாய் ஓடிவர, அவன் குவளையில் இருந்த குச்சிகளை பபிதா வாங்கி கொண்டு, புன்னகையோடு இப்போது நீ விளையாட செல்லலாம் என்றாள். அதே புன்னகை ரன்பீர் முகத்திலும் தொற்றிக்கொள்ள சந்தோசமாய் நண்பர்களோடு விளையாட தொடங்கினான்.

பபிதா வேகமாக தான் கொண்டுவந்த வெள்ளை துணியில் அவற்றை முடிந்து கொண்டாள். அப்போது ஒரு குச்சி முடிச்சில் மாட்டி கொண்டது. அதை பபிதா கவனிக்க வில்லை.

சரியாக ஆறு மணி ஆனது, அப்போது ஒரு மாயை தோன்றியது, அதை ரன்பீர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆம் கீழே கிடந்த குச்சிகள் அனைத்தும் ரன்பீர் கண் முன்னரே முத்துக்களாக மாறின.

பாலைவன தேசம் Where stories live. Discover now