அன்று இரவு கண்ட கனவு, ரன்பீர் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அவன் அழுகுரல் கேட்டு அனைவரும் எழுந்து கொண்டனர். அவனை சமாதான படுத்தும் முயற்சி பயனளிக்கவில்லை. என்ன ஆயிற்று, என்று பபிதாவும், சாயா தாதி மற்றும் ஓமேஷ்வரும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்ப, ரன்பீரால் தான் கண்டவற்றை அவர்களிடம் விவரிக்க முடியவில்லை.விவரிக்க முடியவில்லை என்று கூறுவதைவிட, அவன் கண்டதை எவ்வாறு விவரிப்பது என்று தெரியவில்லை என்றுதான் கூறவேண்டும். பின் ரன்பீர் அழுது கொண்டே பபிதா மடியிலேயே உறங்கிவிட்டான். ஆனால் அவர்களுக்கு அதன் பிறகு உறக்கம் வரவில்லை.
சில வாரங்களுக்கு அவன் வீட்டை விட்டு வெளியே வருவதற்கே அஞ்சினான். வழக்கம் போல் மாலை நேரம் கூட அவன் குச்சிகளை சேகரிக்க செல்லவில்லை. இதை கண்ட பபிதா, மனம் நொந்து போனாள்.
ஒரு நாள் தாதி பபிதாவை அழைத்து, அபினவை சில நாட்கள் இங்கு தங்குவதற்கு வர சொல்லலாமா?... என்று கேட்டார்.
அபினவ் வேறுயாருமல்ல, பபிதாவின் முத்த சகோதரியின் இளைய மகன் ஆவான். அவனுக்கு இரண்டு மூத்த சகோதரர்களும், ஒரு மூத்த சகோதரியும் உள்ளனர். அபினவ் நான்காவதாக பிறந்த கடைக்குட்டி. ரன்பீரைவிட ஒரு வயது மூத்தவன்.
பத்து வருடங்களாக குழந்தைக்கு ஏங்கிய ஓமேஷ்வரும், பபிதாவும் இறுதியாக நம்பிக்கை இழந்து அபினவை தத்தெடுத்து கொள்ளளாம் என்ற முடிவிற்கு வந்தபோதுதான், ரன்பீர் இவர்களுக்கு பிறந்தான்.
ஆனாலும் அவர்கள் ரன்பீர் மீது வைத்திருக்கும் பசத்தில் எள்ளளவு கூட குறையாமல், அபினவையும் தன் மகன் போலதான் எண்ணினர். அபினவும் அவர்களை அம்மா... பாப... என்றுதான் அழைப்பான்.
இப்போது ரன்பீர் இருக்கும் நிலையிலிருந்து மீழ அவன் வயதொத்த அபினவ் உடன் இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணி சாயா தாதி, அபினவை வர சொன்னார்.
VOCÊ ESTÁ LENDO
பாலைவன தேசம்
Fantasiaசில நூறு ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தானில் உள்ள சலொயி வான் (சோலை வனம்) என்னும் பாலைவன நகரத்தில் கதைகளத்தை அமைத்துள்ளேன். இதில் இடம்பெறும் கதைகளம் மற்றும் கதை மாந்தர்கள் அனைத்தும் கற்பனையே. மேலும், இது என் முதல் முயற்சி. நம் கதையின் நாயகன் ரன்...