ரன்பீர் மஞ்சள் மலர்களை மகிழ்ச்சியோடு கையில் எடுத்துக்கொண்டு வேகமாய் வெளியே ஓடிவர, எதிர்பாராதவிதமாய் தன் தந்தை மீது மோதிவிட்டான்.
இவர்தான் ரன்பீரின் தந்தை ஓமேஷ்வர்,
வேட்டைக்கு செல்வதற்கு முன்பு தண்ணீர் எடுத்து செல்லும் தோல் பையை மறந்துவிட்டதால் அவற்றை எடுப்பதற்காக வந்தார்.இப்போது ஓமேஷ்வர், ரன்பீர் கண்ணா எங்கு இவ்வளவு வேகமாய் செல்கிறாய் என்று கேட்டார். பாப (அப்பா) நான் இந்த மலர்களை என் நண்பர்களிடம் காட்ட செல்கிறேன், இதை எனக்காக தாதி ஹரா பர்வத்திலிருந்து பறித்து வந்துள்ளார், என்று கூறினான். சரி பார்த்து செல் கீழே எங்கும் விழுந்துவிடாதே என்று கனிவோடு கூறினார்.
இதுவரை ஓமேஷ்வர், ரன்பீரை ஒரு முறை கூட அதட்டியதில்லை, அவருக்கும் பபிதாவுக்கும் திருமணமாகி பத்து வருடங்கள் கழித்தே ரன்பீர் பிறந்துள்ளான். அந்த பத்து வருடங்கள் அவர்கள் பட்ட துன்பத்துக்கும், ஏக்கத்திற்கும் கிடைத்த பரிசு தான் ரன்பீர் என்று ஓமேஷ்வர் கருதினார். அன்பான குணமுடையவராக இருந்தாலும் அவர் சிறந்த வேட்டையாடும் மாவீரரும் கூட. இதுவரை அவரது இலக்கு ஒருமுறை கூட தவறியதில்லை.
இவ்வாறாக அவர்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்தது.
(இரண்டு மாதங்களுக்கு பிறகு)
ஒருநாள் ரன்பீருக்கு விபரீத ஆசை எழுந்தது, அவ்வாறு செய்யாதே என அவன் மனம் கூறினாலும், ஆர்வத்தை தூண்டும் மூளையின் பேச்சை கேட்டு அதை செய்தான்.
YOU ARE READING
பாலைவன தேசம்
Fantasyசில நூறு ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தானில் உள்ள சலொயி வான் (சோலை வனம்) என்னும் பாலைவன நகரத்தில் கதைகளத்தை அமைத்துள்ளேன். இதில் இடம்பெறும் கதைகளம் மற்றும் கதை மாந்தர்கள் அனைத்தும் கற்பனையே. மேலும், இது என் முதல் முயற்சி. நம் கதையின் நாயகன் ரன்...