ரன்பீரின் கண்கள் வானத்தையே வெறிக்க பார்த்துக் கொண்டிருக்க, அவன் உணர்ந்தவை அனைத்தும் உண்மைதான், என்று அவன் கண்கள் கூறுகின்றன. ஆனால் பயத்தில் உறைந்திருக்கும் மனமோ அவற்றை நம்ப மறுக்கிறது. இவை நீ காணும் கனவுதான் என்று கூறி கொண்டே இருக்கிறது. இவ்வாறு அவன் மனதில் போராட்டம் நடந்து கொண்டிருக்க, தீ சாகச விளையாட்டு முடிந்து அடுத்த குழுவினர் களம் இறங்கினர்.
இது ஒரு சடங்கு என்றே கூறலாம். ஏனெனில், தண்ணீருக்கே பஞ்சமான பாலை வனத்தில் அவ்வப்போது கிடைக்கும் சொற்ப தண்ணீருக்கு செலுத்தும் நன்றி கடனே இந்த சடங்காகும்.
இந்த சடங்கு முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படும். தங்களின் தலையில் அடுக்கடுக்காக, அலங்கரிக்கப்பட்ட மண் பானைகளை வைத்துக் கொண்டு மெதுவான நடன அசைவுகளை செய்வார்கள். அப்போது ரன்பீருக்கு அருகில் அமர்ந்திருந்த நண்பர்கள், ரன்பீரின் தோளைத் தட்டி, 'அதோ பார் ரன்பீர் அவர்கள் தலையில் எவ்வளவு பானைகளை வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பார்' என்று பிரம்மிப்போடு கூற,திடுக்கென்று சுயநினைவிற்கு வந்த ரன்பீர், "நான் யார் தெரியுமா, என் தாதி கூறியிருக்கிறார், நான் ஒரு மாவீரன் ஆவேன், என்னை யாராலும் பயமுறுத்த இயலாது" என்று மூச்சுவிடாமல், தான் என்ன பேசுகிறோம் என்று அறியாமலேயே பேசி முடித்தான்.
இதை கேட்டுக் கொண்டிருந்த நண்பர்கள், 'ரன்பீர் உனக்கு என்ன ஆயிற்று' என்று குழப்பத்தோடு கேட்டனர். ரன்பீர், 'நான் என்ன கூறினேன்' என்று படபடப்போடு கேட்க, ரன்பீரின் நண்பர்கள் சிரிப்போடு, 'இப்போது ஏன் சம்பந்தம் இல்லாமல் உன் புராணத்தை ஆரம்பிக்கிறாய் என்று கேட்டனர்'.
YOU ARE READING
பாலைவன தேசம்
Fantasyசில நூறு ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தானில் உள்ள சலொயி வான் (சோலை வனம்) என்னும் பாலைவன நகரத்தில் கதைகளத்தை அமைத்துள்ளேன். இதில் இடம்பெறும் கதைகளம் மற்றும் கதை மாந்தர்கள் அனைத்தும் கற்பனையே. மேலும், இது என் முதல் முயற்சி. நம் கதையின் நாயகன் ரன்...