மாய மங்கையின் உடல் வெடித்து சிதறி காற்றில் கரைந்து மறைந்து கொண்டிருந்தது. ரன்பீர் ஒரு வழியாக அவளிடமிருந்து தன் உயிரை காப்பாற்றிக் கொண்டு, அவள் கொடுத்த தாக்குதலில் உடல் முழுவதும் சோற்வுற்று, அங்கேயே தலை கவிழ்ந்தவாறு மண்டியிட்டு அமர்ந்திருக்க...
அம்மாய பெண்ணின் இறப்பால் எழுந்த அதிர்வை தாங்காமல் அவ்விடமே அதிர தொடங்கிட, அதை சற்றும் எதிர்பாரா ரன்பீர் அங்கிருந்து தப்பிக்க முயன்று தள்ளாடியபடியே எழ முற்படுகிறான்.
ஆனால் காலம் அதற்கு அனுமதிக்கவில்லை, சுற்றியிருந்த சுவர்களும் தூணும் காற்றில் பறக்கும் மணல் போல் உதிர்ந்து கொண்டிருந்தது. அதோடு அவன் உடலிலிருந்த புண்களும் மேலும் ரனத்தை உண்டாக்க, செய்வதறியாது திகைத்து நிற்கும் வேளை...
அவ்விடமே பெரும் சத்தத்தோடு உள்வாங்கி உடைந்து பெரும் பள்ளம் நோக்கி கீழே விழுகிறது...
ரன்பீர் தவழ்ந்து ஊர்ந்து செல்லுமிடமெல்லாம் உடைந்து கொண்டிருக்க, இறுதியில் பற்றிக்கொள்ள வலுவில்லாமல் அவனும் அவற்றோடு விழத்தொடங்குகிறான்...
இப்பெரும் சத்தம் அவ்வறைக்குள்ளேயே சிறு முணங்கல் போல் குறுக்கிக்கொண்டே போக, ரன்பீரும் அவற்றில் மறைந்து காணாமல் போகிறான்...
ஆனால் வெளியே இதன் சிறு பாதிப்பு கூட தெறியா வண்ணம் அமைதி நிலவ அனைவரும் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கின்றனர்.
சில மணித்துளிகள் கடந்த பிறகு சிறு சிறு கற்கள் பாறைகளுக்கு இடையே மயங்கிய நிலையில் ரன்பீர் தொப்பென்று விழுகிறான். குற்றுயிர் கொண்ட உடலுடன் இறக்கும் தறுவாய் நிலைக்கு சென்றிருக்க, ஆள் அரவம் அற்ற அப்பள்ளத்தாக்கில் விழுந்து கிடக்க, அவன் கழுத்தில் அணிந்திருந்த ஒளிரும் மணிக்கொண்ட சங்கிலி மட்டும் தன்னை காத்துக் கொண்டு ஒளிர்ந்து கொண்டிருந்தது.
அவ்வாறாக சில மணி நேரங்கள் கடந்தோட பொழுதும் விடிகிறது.
ஆனால் கோட்டையின் மேல் புறத்தில் பாதுகாப்பான இடத்தில் இருப்பவர்கள் ரன்பீரை தேடவில்லை. அனைவரும் வேட்டைக்கு தயாராகிக் கொண்டிருந்தனர்.
ஓமேஷ்வருக்கும் ரன்பீருக்கும் இடையே நேற்று இரவு நடந்த வாக்குவாதம் தெரிந்திருந்தது, அதனால் ரன்பீர் யாருக்கும் சொல்லாமல் இங்கிருந்து சென்றிருப்பான் என்று எண்ணிக்கொண்டிருக்க, இவ்விடயம் பற்றிய சலசலப்பு ஆங்காங்கே எழுந்து கொண்டிருந்தது.
ரன்பீருக்கும் ஓமேஷ்வருக்கும் இது அதிக மனவலி தந்தாலும் இருவரும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அன்றைக்கான பணியை தொடர்ந்தனர்.
இவ்வாறாக அன்றைய பொழுதும் கழிந்தது. ஆதவனும் மறைய தொடங்க, அப்பள்ளம் இருந்த குகையில் சிக்கிய ரன்பீரின் நிலை இன்னும் மோசமடைந்து கொண்டிருந்தது.
நன்கு இருட்ட தொடங்கி அவ்விடமே இருளில் மூழ்கியிருக்க யாரோ ஒருவரின் காலடி சத்தம் மட்டும் அவ்விடம் முழுவதும் எதிரொலித்து கொண்டிருந்தது.
அது மெல்ல மெல்ல ரன்பீரை நோக்கி வர சற்றென்று அச்சத்தத்திற்கு சொந்தமானவர் அவனை நோக்கி நிற்கிறார்.
உடல் முழுவதும் வித்தியாசமான ஆடை அணிந்து நீண்ட தலை முடியும், நீண்ட தாடியும், ஆறடி உயரத்திற்கு கம்பீர தோற்றத்தில் காட்சியளித்தவர், கையில் ஒரு கோலும் வைத்திருக்க அதன் தலைப்பகுதி ஒளி வீசிக்கொண்டிருந்தது.
அவர் தன் கைகளை மெல்ல உயர்த்தி கண்களை மூடி, தன் கணீர் குரலில்
بأمر الله اترك كل هذه جانبا...
(கடவுள் மீது ஆணையாக இவை அனைத்தும் விலகட்டும்...)
என்று கூற,
ரன்பீர் மேலிருந்த கற்களும் பாறைகளும் மெல்ல காற்றில் மிதந்து அருகே சென்று விழுந்தது. அவன் மீதிருந்த அனைத்தும் அவரின் மாய மந்திரத்தால் பறந்து போய்கொண்டிருந்தது...
BINABASA MO ANG
பாலைவன தேசம்
Fantasyசில நூறு ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தானில் உள்ள சலொயி வான் (சோலை வனம்) என்னும் பாலைவன நகரத்தில் கதைகளத்தை அமைத்துள்ளேன். இதில் இடம்பெறும் கதைகளம் மற்றும் கதை மாந்தர்கள் அனைத்தும் கற்பனையே. மேலும், இது என் முதல் முயற்சி. நம் கதையின் நாயகன் ரன்...