திரண்டு வந்த கருமேகக் கூட்டம் ஆதவன் மறையும் முன்பே இருளை கொண்டு வந்தது.
சலொயி வான் முதல் முறையாக இது போன்ற காலம் தவறிய சூழல் மாறுதலை எதிர் கொள்ள போகிறது, இதன் விளைவு எப்படி இருக்கப் போகிறது என்று கணிக்கக் கூட நேரம் தராமல் இருண்ட மேகங்கள் உருமிக் கொண்டே ஆலங்கட்டிகளை வீசியடிக்க தொடங்கிவிட்டன.
தொடக்கத்தில் சிறு சிறு பனிக் கட்டிகளாக விழுந்தவை, நேரம் செல்ல செல்ல தன் உருப் பெருக்கிக் கொண்டே சென்றது.
அதில் நனையும் மக்கள் அனைவருக்கும், சலொயி வான் தன் இறுதி காலத்தை நெருங்கிவிட்டதோ என்ற பயம். ஆனால் ரன்பீர் கழுத்தில் அணிந்திருந்த சிவப்பு நிற கல் சங்கிலியோ, இது தனக்கான ஆரம்பம் என்பது போல், தன்னுள் அடக்கி வைத்திருந்த அடர் சிவப்பு நிற ரேகையை ஒன்றோடொன்று வேகமாய் பாய்ந்தோட செய்து கொண்டிருந்தது.
அதன் செயலால் மழையில் நனைந்து கொண்டிருந்தாலும், ரன்பீர் தன் கழுத்து பகுதியில் சற்று வெப்பம் ஏற்பட்டு சுடும் உணர்வை உணர்கிறான். ஆகையால் தன் கை கொண்டு கழுத்தை வருடிவிட்டு, நிகழும் மாயத்தை கண்டு மக்கள் அலைமோதுவதை பார்த்துக் கொண்டிருந்தவனின் கையை இழுத்துக் கொண்டு தாதி வீட்டினுள் நுழைந்து கதவை அடைக்கிறார்.
மற்றவர்களும் அவ்வாறே வீட்டினுள் அடைந்து கொள்ள, தடையேதுமின்றி ஆலங்கட்டிகள் உருப் பெருத்தவாறே கொட்டித் தீர்க்கிறது.
அவை கூரையில் விழும் சத்தம் வீட்டினுள் இருப்பவர்களுக்கு தங்கள் தலையில் இடி விழுவது போன்று பயத்தை ஏற்படுத்துகிறது.
மனிதர்களை பயங்கொள்ள செய்த இம்மழை அவர்களுக்காக பொழியவில்லை என்பது மட்டும் உறுதி, இது பாலை வனத்தின் கொடிய விஷம் நிறைந்த ஜந்துக்களுக்கான அழைப்பு. மண்ணில் விழும் ஒவ்வொரு பனிக் கட்டிகளும் மணலை கிளரி விட்டு தன் போக்கில் சுருண்டிருந்த பாம்புகளை எழுப்புகின்ற,
ESTÁS LEYENDO
பாலைவன தேசம்
Fantasíaசில நூறு ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தானில் உள்ள சலொயி வான் (சோலை வனம்) என்னும் பாலைவன நகரத்தில் கதைகளத்தை அமைத்துள்ளேன். இதில் இடம்பெறும் கதைகளம் மற்றும் கதை மாந்தர்கள் அனைத்தும் கற்பனையே. மேலும், இது என் முதல் முயற்சி. நம் கதையின் நாயகன் ரன்...