சந்திர வனத்தில் மயங்கி விழுந்தவன் தற்போது மயக்கம் தெளிந்தவனாய் கண் விழித்தது குன்றின் உச்சியில் இருக்கும் பாழடைந்த கோட்டையில். அவன் கண்விழிக்கும் போது அவனுக்கருகில் அபினவ் அமர்ந்து அவன் எப்போது எழுவான் என்ற ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
ஆம் பொழுது சாய்ந்து அனைவரும் வேட்டை முடிந்து கோட்டைக்கு திரும்பியிருந்தனர். சரியாக மதியவேளை மயங்கி விழுந்த ரன்பீர், ஆதவன் மறைந்து இருள் சூழும் வேளைதான் கண்விழிக்கிறான்.
முயலுக்கு பொறி வைக்க சென்றவன் வெகு நேரமாகியும் திரும்பாததால் அபினவ் அவனை தேடிச் சென்று கண்டுபிடித்து பாபவின் உதவியுடன் அவனை கோட்டைக்கு அழைத்து வந்துவிட்டான்.
நீண்ட நேரத்திற்கு பிறகு கண் விழித்து குழப்பத்துடன் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்த ரன்பீரை அபினவ் வெளியே அழைத்து செல்ல, கோட்டையின் வெளியில் தீப்பந்தங்கள் ஏற்றப்பட்டு, அருகிலேயே ஆங்காங்கே குழுவாக உடன் வந்த நண்பர்கள் தீ மூட்டி அன்று வேட்டையாடிய உணவும் மற்றும் முயல் இறைச்சியை தங்கள் ஊர் மக்களுக்கு அனுப்பி வைத்தது போக மீதத்தை சுட்டு உண்டுக் கொண்டிருந்தனர்.
அதே போல் ஒரு தீ மூட்டலுக்கு முன்பு ரன்பீரை அமரவைத்த அபினவ், சற்று முன் நெருப்பில் சுட்டதாக முயல் இறைச்சித் துண்டு ஒன்றை கொடுத்து அதை உண்ணுமாறு கூறுகிறான்.
பசியுடன் இருந்த ரன்பீர் அதை வாங்கி வேகமாக உண்டுக்கொண்டிருக்க, 'நீ மயங்கிக் கிடந்த இடத்திலிருந்து உன்னை மீட்டு வரும் போது, நீ வைத்த பொறியில் சிக்கிய முயல்தான் இது', என்று அபினவ் கூற, அதைக் கேட்டு ரன்பீர் திடுக்கிட்டு போகிறான்.
'அபினவ் நீ என்னக் கூறுகிறாய்... நடந்தது என்ன தெரியுமா?... நான் அதை முழுமையாக கட்டவில்லையே, அப்போது எப்படி இது சாத்தியம், அதை சீரமைக்கவே நான் கொடியை தேடி சென்றேன், அப்போது நான் ஒரு மாயப் பெண்ணை...', என்று அந்த மாயப் பெண் பற்றி அபினவிடம் ரன்பீர் கூற நினைக்க,
YOU ARE READING
பாலைவன தேசம்
Fantasyசில நூறு ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தானில் உள்ள சலொயி வான் (சோலை வனம்) என்னும் பாலைவன நகரத்தில் கதைகளத்தை அமைத்துள்ளேன். இதில் இடம்பெறும் கதைகளம் மற்றும் கதை மாந்தர்கள் அனைத்தும் கற்பனையே. மேலும், இது என் முதல் முயற்சி. நம் கதையின் நாயகன் ரன்...