அத்தியாயம் - 14

8 1 0
                                    

சல சலத்து கொண்டிருந்த ஊர் மக்களை திசை திருப்பும் வண்ணம், ஒருவர் மூச்சிறைக்க ஓடி வந்து, ரன்பீரை ஊர் தலைவர் புல்கித் ஐயா அழைக்கிறார்... என்ற செய்தி கூற, ஊர் மக்களின் கவனம் முழுவதும் ரன்பீர் பக்கம் திரும்பியது.

ஆம் அவன் செய்த தவறு புல்கித் ஐயாவின் காதுகளை எட்டிவிட்டது, நிச்சயமாக ரன்பீருக்கு தண்டனை உண்டு, என்றுணர்ந்த ஊர் மக்கள் அவனை நினைத்து வருந்த, தகவல் கூற வந்தவர் கையோடு ரன்பீரையும் காயமடைந்த வெள்ளை ஒட்டக கூட்டியையும் அழைத்து சென்றார்.

ரன்பீர் புல்கித் ஐயா முன்பு ஒரு குற்றவாளி போல் நிற்க, வானிலிருந்து நோட்டமிட்டு கொண்டிருந்த அந்த பிரம்மாண்ட உருவம் மேகங்களுக்குள் மறைந்து மாயமானது.

புல்கித் கடுமையான வார்த்தைகளால் ரன்பீரை எச்சரித்து, 'அடுத்த ஒரு வாரத்திற்கு பயிற்சியாளருக்கு ஒரு எடுபிடி போல் அவர் கூறும் அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும், அத்தோடு இந்த ஒரு வாரம் முழுக்க ஒட்டகத்திற்கு பயிற்சியளிக்க உனக்கு தடை விதிக்கிறேன்', என்று கடுமையாக பேசிவிட்டு கூட்டத்தை கலைத்தார்.

ரன்பீருக்கு இந்த தண்டனையை ஏற்று கொள்ள எந்த மறுப்பும் இல்லை, ஏனெனில் தான் செய்தது தவறு என்று உணர்ந்து கொண்டான். ஆனால் இந்த ஒரு வாரம் கடந்து விட்டால் அவன் கையில் மீதம் இருப்பது வெறும் இரண்டு வாரங்கள் மட்டுமே. அதற்குள் தன் ஒட்டகத்தை அவன் புரிந்து கொண்டு, அதற்கு தக்க பயிற்சி அளிக்க வேண்டும், என்ற கவலை இருந்தது.

அந்த ஒரு வாரம் தன் தண்டனையை எந்த முக சுளிப்பும் காட்டாமல், பயிற்சியாளரான தன் ஆசிரியருக்கு சேவை செய்வதாக எடுத்து கொண்டு செவ்வனே, அவர் இடும் கட்டளைகளை செய்து முடித்தான்.

அந்த ஒரு வாரத்தில் சாயா தாதி ஒட்டக குட்டிக்கு இட்ட மூலிகை மருந்தால் அதன் கழுத்து பகுதியில் ஏற்பட்ட காயங்களும் மறைந்து போயின.

தண்டனை காலம் முடிந்து, அடுத்த நாள் காலை ரன்பீர் தன் ஒட்டகத்திற்கு பயிற்சியளிக்கும் நோக்கத்தோடு, உற்சாகமாக அழைத்து சென்றான்.

பாலைவன தேசம் Onde histórias criam vida. Descubra agora