அத்தியாயம் - 3

392 12 5
                                    

ரன்பீர் மூச்சு வாங்கி கொண்டே, தன் தாதியின் முன்பு மண்டியிட்டு அமர்ந்து அவரையே உற்று நோக்கிக்கொண்டிருந்தான், அவர் கூறப்போகும் பதிலை கேட்பதற்காக.

தாதி அவனின் ஆர்வத்தை புரிந்து கொண்டார். சிறுபுன்முறுவலுடன், ரன்பீர் கண்ணா நீ எவ்வளவு தூரம் பயணம் செய்துவிட்டு வந்தாய் என்று எனக்கு தெரியும், உனக்கு மூச்சிறைக்கிறது, சற்று நேரம் அமர்ந்து ஓய்வெடுத்துவிட்டு பானி (தண்ணீர்) அருந்து பிறகு கூறுகிறேன், என்றார்.

ரன்பீர், தாதி எது சொன்னாலும் கேட்டு கொள்வான், ஆனால் சற்று நேரம் முன்னர் அவன் கண்ட நிகழ்வு அவன் மனதில் ஆழப்பதிய, தாதி சொல்லியதை கேட்க மறுத்ததுவிட்டான்.

பபிதா அந்த வெள்ளை பை முடிச்சை ஒரு பெட்டியில் வைத்து விட்டு, இடையே குறுக்கிட்டு பேசினாள், சாச்சி (அத்தை) அவன் எங்கு நடந்துவந்தான் நான்தான் அவனை இடுப்பில் சுமந்து வந்தேன் என்று கூறிவிட்டு, ஆட்டு பட்டிக்கு சென்றுவிட்டார். (பபிதா ரன்பீரின் தாதிக்கு மருமகள் ஆவார்)

தாதி உடனே, அப்படியா ரன்பீர், சரி இப்போது நீ உன் நண்பர்களோடு சென்று விளையாடு, எனக்கு இப்போது நிறைய வேலை இருக்கிறது, இரவு நான் அந்த கதையை கூறுகிறேன் என்றார். அதை கேட்ட ரன்பீர் சினுங்க தொடங்குகிறான். இதை வெளியே ஆட்டு பட்டியில் இருந்த பபிதா பார்த்து விட்டார், உடனே அதட்டும் தோணியில் ரன்பீர் என்று அழைத்தார்.

அதை கேட்டதும் ரன்பீர் வாசல் வரை ஓடி வந்துவிட்டு பின்னர் மீண்டும் தன் தாதியிடம் சென்றான். தாதி நீங்கள் இன்று இரவு கூறுகிறேன் என்று சொன்ன கதை, ஏக் சோட்டா லடுகா கீ கஹானி (ஒரு குட்டி பையனின் கதை) மாதிரி இருக்காதே என்று கேட்டதும், தாதியும், பபிதாவும் உரக்க சிரித்தனர், அவர்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை, ஏனென்றால் ரன்பீர் தினமும் இரவு தூங்க போவதற்கு முன்பு தாதியிடம் கதை கேட்டு நச்சரிப்பான். தாதியும் நகைசுவை கலந்து ரன்பீர் செய்யும் குறும்புகளை அவனிடமே 'ஏக் சோட்டா லடுகா கீ கஹானி' என்று கதை கூறுவார். இதை சிறிது நாட்களுக்கு முன்புதான் ரன்பீர் அறிந்து கொண்டான், பிறகு இருவரும் சிரிப்பதை பார்த்து அவனுக்கும் சிரிப்பு வர அங்கிருந்து வெளியே ஓடி போய் விளையாட தொடங்கிவிட்டான்.

பாலைவன தேசம் Where stories live. Discover now