நிழல் - 5

94 5 0
                                    

பத்து வருடங்களுக்கு முன்பு....

டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, சென்னை பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. மாணவர்கள் அவர்களுக்கேயுரிய கல்லூரி காலத்தை சந்தோசமாக அனுபவித்து கொண்டிருந்தனர்.

முதல் வருட வகுப்புகள் தொடங்கி சிறிது நாட்களேயாகியிருந்ததால் மதிய உணவு இடைவேளையில் சீனியர் மாணவர்கள் முதல் வருட மாணவர்களை ராகிங் செய்து கொண்டிருந்தார்கள். ராகிங் செய்யவில்லை என்றால் சீனியருக்கு என்ன மரியாதை என்பது அவர்களின் எண்ணம்... சந்தோஷமான ஜாலியான ராகிங் என்பதால் முதல் வருட மாணவர்களும் அவர்கள் செய்யும் குறும்புகளை ஏற்றுக்கொண்டு அவர்கள் சொல்வதை செய்தனர்.

அங்கிருந்த மரத்தினடியில் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்திருந்த ஷிவேஷ்வரனும், ஹரிஹரனும் மற்ற மாணவர்கள் செய்யும் அலப்பறைகளை பார்த்து ரசித்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு இதிலெல்லாம் விருப்பமில்லை ஆனால் நண்பர்கள் செய்வதை தடுக்கவில்லை. எந்த விதத்திலும் யாரையும் புண்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று முதலிலேயே தன் நண்பர்களிடம் சொல்லி விட்டான் ஷிவேஷ்.

ஷிவேஷின் தந்தையும், ஹரியின் தந்தையும் ஒரு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக சேர்ந்து பணியாற்றுவதால் அவர்களுக்குள் நல்ல நட்பு இருந்தது. அந்த நட்பு ஷிவேஷையும் ஹரியையும் ஒரே பள்ளியில் சேர்க்க வைத்தது... அதனால் இருவரும் பள்ளிக் காலத்திலிருந்தே இணைபிரியா நண்பர்கள். ஷிவேஸ்வரனுக்கு சிறு வயது முதலே காவல் துறை அதிகாரியாக வேண்டும் என்று வெறித்தனமான ஆசை. அதற்கு தகுந்தவாறே சட்ட படிப்பை தேர்ந்தெடுத்தான். அவன் தன் எதிர்காலத்தை பத்தாம் வகுப்பிலேயே முடிவு செய்து விட்டான். பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்றும் சட்டம் பயில்வதற்கு ஏற்ற பிரிவையே பதினொன்றாம் வகுப்பில் தேர்ந்தெடுத்து பயின்றான். அவனின் பெற்றோரும் அவனின் விருப்பத்திற்கு விட்டு விட்டதால் அவனால் சுதந்திரமாக அவனின் எதிர் காலத்தை தீர்மானிக்க முடிந்தது.

நிழலே நெருங்காதே!!Where stories live. Discover now