காலை 7 மணி ஷிவேஷ்வரன் அலுவலகத்திற்கு கிளம்பிகொண்டிருக்கும் வேளை அலைபேசி அழைத்து அவன் கவனத்தை கலைக்க... அதை எடுத்தவன் அழைத்தது ஹரி என்று தெரிந்ததும் "சொல்லு ஹரி..." என்றான்.
மறுமுனையில் சொன்ன எல்லாவற்றிக்கும் "ஓகே.. ஓகே..." என்றவன் முடிவில் "நான் கிளம்பி ஸ்பாட்டுக்கு வரேன், அங்க வந்து பார்த்துக்கலாம்..." என்று சொன்னவன் விரைந்து கிளம்பி வெளியே வரவும் அவனின் அம்மா...
"ஷிவா டிபன் ரெடி ஆகிடுச்சு, சாப்ட்டுட்டு போப்பா..., நைட்டும் லேட்டாக வந்து எதுவுமே சாப்படல..., இவ்ளோ நாளா வெளியவே சாப்ட்டுட்டு இருந்த... இங்க இருக்கும் போதாவது வீட்டில் சாப்ட்டுட்டு போக கூடாத?..." என்று அவன் முகம் பார்த்து என்ன சொல்வானோ என்ற தயக்கத்துடனேயே சொல்ல..
நிமிர்ந்து அம்மாவை பார்த்தவன் மனதில் என்ன தோன்றியதோ அமைதியாக சென்று டைனிங் டேபிளின் ஒரு நாற்காலியை இழுத்து போட்டு உட்கார்ந்தான். பார்த்த விஜயலக்ஷ்மிக்கு சந்தோஷத்தில் கண்கள் கலங்க... அவனுக்கு பிளேட்டை வைத்து டிபன் பரிமாற ஆரம்பித்தார்.
விஜயலக்ஷ்மியின் முகத்திலுள்ள சந்தோஷத்தை பார்த்துக்கொண்டே அங்கு வந்த ராமநாதன் "என்னப்பா நைட்டும் லேட்டாதான் வந்த... காலையிலேயே சீக்கிரமா கிளம்பிட்ட... திடீர் ட்ரான்ஸ்பர் வேற போட்ருக்காங்க... எதுவும் முக்கியமான கேஸா?..." என்று கேட்டார்.
ஷிவேஷ்வரன் சாப்பிட்டு கொண்டே "ஆமாம்ப்பா, ஒரு கான்பிடென்ஷியல் அண்ட் கிரிடிகல் கேஸ்... சோ கமிஷ்னர் ரெகமென்ட் பண்ணி ட்ரான்ஸ்பர் போட்ருக்காங்க. நானும் ஹரியும் தான் டீல் பண்ணறோம்... கொஞ்சம் சீக்கிரமா வேற முடிக்க வேண்டியது... அதனால் தான் டே நைட் பார்க்காமல் வொர்க் பண்ண வேண்டியதா இருக்கு." என்றான்.
இதற்கு மேல் அவன் கேஸ் பத்தி சொல்லமாட்டான் என்று தெரிந்ததால் "சரிப்பா" என்பதோடு நிறுத்திக்கொண்டார்.
ஷிவேஷ்வரன் அமைதியாக சாப்பிட்டு கொண்டிருக்க விஜயலக்ஷ்மி ராமநாதனை பார்த்து கண்ணசைத்தார்... அவர் சரியென்று தலையாட்டிவிட்டு...