சென்னை புறநகர் பகுதியில் அமைந்திருந்த சூரஜின் கல்லூரிக்கு ஷிவேஷ்வரனும் ஹரியும் சென்றதும்... கல்லூரி செக்யூரிட்டி போலீஸ் வந்திருப்பதை முதல்வரிடன் தெரிவிக்க... அவர் இதை எதிர் பார்த்திருந்ததால் வெளியே வந்து "வணக்கம் சார் வாங்க" என்று அவர்களை வரவேற்றார்.
முதல்வருக்கு சிவேஷை உத்ராவின் மூலம் நன்றாக தெரியுமென்பதால் அவருக்கு தயக்கமில்லாமல் அவனிடம் பேச முடிந்தது.
ஷிவேஷ் " சூரஜின் கொலை பற்றி தெரிஞ்சிருப்பீங்க தானே?... "
"எஸ் சார்... காலையில் உங்க டிபார்ட்மெண்ட் மூலமா அமர்நாத் சாருக்கு விஷயம் தெரிந்ததும்... அவர் எனக்கு போன் பண்ணிட்டார். காலேஜும் உடனே லீவ் விட்டுட்டோம் போலீஸ் எப்படியும் விசாரிக்க இங்க வருவாங்க என்பதால் நானும் கொஞ்சம் ஸ்டாப்சும் இருக்கிறோம்."
"ஓகே.. நான் உத்ராவை சேர்க்கும் போது அமர்நாத் சார் தானே சேர்மனா இருந்தார்?... சூரஜ் எப்போ இங்க பொறுப்பு எடுத்துகிட்டார்?"
"அவர் இங்க வந்து ஒன்றரை வருடம் ஆகுது... அமர்நாத் சார் மொத்தமா கொடுக்க மாட்டேன்னு தான் சொன்னாங்க... சூரஜ் தான் பிடிவாதம் பிடித்து எல்லா அதிகாரத்தையும் தன் கைக்கு மாற்றி கொண்டார். இப்போ ஒரு வருசமா அமர்நாத் சார் சுத்தமா காலேஜ் பக்கம் வரதே இல்லை..."
"ஓஹோ... சூரஜோட அட்மினிஸ்ட்ரேஷன் எப்படியிருக்கு?... அவரை பற்றி உங்களுக்கு தெரிஞ்சதை சொல்லுங்க?..."
"அட்மினிஸ்ட்ரேஷன் பற்றி சொல்லனும்னா அமர்நாத் சார் அளவுக்கு இல்லைன்னு தான் சொல்வேன்.. அவர் நேர்மையா எல்லோருக்கும் மரியாதை கொடுத்து அரவணைச்சு கொண்டு போவர்... சூரஜ் பொதுவா யாரையும் மதிக்கிறதில்லை... நிறைய பேர் இவரோட நடவடிக்கை பிடிக்காமல் வேலையை விட்டு போய்ட்டாங்க. அதை பற்றி அவர் கவலைப்பட்டதுமில்லை. நான் நிறைய முறை அமர்நாத் சாரிடம் சொல்லிருக்கேன். அவர் கொஞ்சம் விட்டு பிடிப்போம் என்று சொல்லிருந்தார். மற்றபடி அவருடைய பெர்சனல் பற்றி அதிகமா எனக்கு தெரியாது சார்."