நிழல் - 13

63 5 0
                                    

அன்று...

பிருந்தா வீட்டிலிருந்து கிளம்பிய சிவேஷ் தன் வீட்டிற்க்கு வந்து வண்டியை நிறுத்தி விட்டு வீட்டிற்குள் செல்ல அங்கே ஹாலில் அவனின் அப்பா அமர்ந்திருக்க... அம்மா சமையலறையில் ஏதோ செய்து கொண்டிருந்தார்.... அவன் வந்ததை பார்த்த ராமநாதன்..

"வா ஷிவா...எங்க போயிருந்தாய்? ஏன் இவ்ளோ நேரம்?... அம்மா கேட்டுட்டே இருந்தாள்... இப்போ தான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்னு உள்ளே போனாள்..." என்றார்.

தந்தையிடம் வந்தவன் அவர் அமர்ந்திருந்த சோபாவில் அவரருகில் அமர்ந்தான்.

"அப்பா! நான் உங்கட்ட கொஞ்சம் பேசணும்..."

அவன் பேசிய விதமே அவரை சிந்திக்க வைக்க... "என்கிட்டே மட்டுமா?... இல்லே அம்மாவோடும் சேர்ந்தா?..." என்றார்.

"அம்மா வேண்டாம்... உங்கட்ட தான் பேசணும்..."

விஷயம் பெரிதென்று நினைத்தவர் "ம்ம்.. சரி பேசலாம்.... நீ பேசுற விஷயம் எப்படியும் சீக்கிரம் முடியாதுன்னு நினைக்கிறேன்... சோ முதல்ல சாப்பிடுவோம்... உங்க அம்மா ரொம்ப நேரமா வெயிட் பண்றா... அப்புறமா வெளியே ஒரு வாக் போயிட்டே பேசலாம்..." என்றார்.

அவனும் சரி என்று சம்மதிக்க... அதே நேரம் வெளியே வந்த விஜலக்ஷ்மி " ஷிவா வந்துட்டியா?... இவ்ளோ நேரம் இங்க தான் உனக்காக வெயிட் பண்ணினேன்.. வா! வா!! சாப்பிடலாம்... இன்னும் ஒரு மாசம் தான் வீட்டு சாப்பாடு கிடைக்கும்... அப்புறம் ட்ரைனிங் போய்டுவ... அது முடிஞ்சு எங்க போஸ்டிங் கிடைக்குமோ தெரியாது... அதனால இங்க இருக்கிறவரை நல்ல சமைச்சு தரேன் சப்ட்டுக்கோ..." என்றார்...

"விஜி!!... நீ நல்ல சமைச்சு?..." என்று ராமநாதன் கேலியாக இழுக்க...

"ஏன்?... ஏன்?... என் சமையலுக்கு என்ன குறை... 27 வருசமா என் சமையலை தானே சப்டுறீங்க... என்ன குறை கண்டு பிடிச்சீங்க?... நல்ல மூக்கு பிடிக்க சாப்ட்டுட்டு இப்படி கேலி வேற பண்ணுவீங்களா?..." என்று சண்டைக்கு வர...

ஷிவேஷ் அம்மாவின் தோளில் கை போட்டு தன்னோடு சேர்த்து பிடித்து கொண்டு "விடுங்கம்மா... அப்பாக்கு உங்க சமையலோட அருமை தெரியல... நீங்க எவ்ளோ சூப்பரா சமையல் பண்றீங்கன்னு சாப்டற எனக்கு தான் தெரியும்..." என்று ஒரு புன்னகையுடன் தன் அப்பாவை பார்த்து அம்மாவிற்கு தெரியாமல் கண்ணடித்தான்.

நிழலே நெருங்காதே!!Where stories live. Discover now