சூரஜ் வருண் சென்றதும் போதையில் வீட்டின் கதவு, கேட்டை பூட்ட மறந்து... உத்ராவின் மேலுள்ள மயக்கத்தில் அவளை நெருங்கும் நேரம்... அவன் பின்னாலிருந்து வந்த "சூரஜ்!!..." என்ற அழைப்பில் அந்த குரலுக்கு சொந்தமானவரை அத்தனை போதையிலும் அடையாளம் கண்டு "அப்பா!!" என்ற அதிர்வுடன் திரும்பி பார்த்தான்.
ஆமாம் அவன் பின்னே அமர்நாத் நின்றிருந்தார்.
அவரை பார்த்ததும் ஏறியிருந்த போதை அத்தனையும் ஒரு நொடியில் இறங்கிவிட சூரஜ்க்கு ஒன்றும் புரியவில்லை. தன் தந்தை எப்படி இங்கே?... அதுவும் அவர் இப்போது ஜெர்மன் செல்ல விமானத்தில் அல்லவா இருக்க வேண்டும்... அவர் எப்படி இங்கு வந்தார்?. அதுவும் நான் கேட் திறக்கவே இல்லையே என்று யோசிக்கும் போது தான் அவனுக்கு கேட்டை லாக் செய்யாதது நினைவு வந்தது.
"அப்பாதாண்டா.... என்ன காரியம் பண்ற நீ?... நான் எத்தனை எடுத்து சொல்லியும் நீ கேட்கலை இல்ல... மறுபடியும் மறுபடியும் தப்பு பண்ணிட்ருக்க... அன்னைக்கு நீ அந்த தனுஜா பற்றி பேசும் போதே உன்னை கண்டிச்சேன்... வெளிய தான் இப்படி நடந்துக்கிறன்னு நினைச்சேன்... ஆனால் இந்த மாதிரி நம்ம காலேஜ் பொண்ணுங்களை... நீ இப்படி பண்ணுவேன்னு எதிர் பார்க்கலை... ஏண்டா இப்படி இருக்க?..இந்த விஷயம் உங்க அம்மாவுக்கு தெரிஞ்சா அந்த நொடியே உயிரை விட்ருவா... என்ன சொல்லியும் ஏண்டா திருந்த மாட்டேங்கிறா?... உன் தம்பியும் உன்னை மாதிரி தானே படிச்சுட்டு எவ்ளோ நல்ல பையனா என்னோட பிசினஸ் பார்க்கிறான்... நீ மட்டும் ஏண்டா இப்படி மாறிட்ட?.... " என்று அமர்நாத் கோபமாக வினவ...
"நான் இப்படி தான்... எனக்கு எது வேணுமோ அது எங்க இருந்தாலும் எடுத்துப்பேன்... இப்ப அதுக்கு என்ன? நான் என்ன பண்ணனும்னு நீங்க அட்வைஸ் பண்ண தேவையில்லை... இது என் வீடு?... நான் என்ன வேணாலும் பண்ணுவேன்... நீங்க இங்க இருந்து கிளம்புங்க..." என்று சூரஜ் திமிராக கூறினான்.
"என்ன உன் வீடா?... இது என்ன நீ சம்பாதிச்சு வாங்கினியா?... காலேஜ்ல வந்த லாபத்தில் வாங்கினது தானே?... நான் காலேஜை நடத்துற உரிமையை உனக்கு விட்டு தந்தால் உனக்கு எல்லாம் சொந்தம் ஆகிடாது... இப்போ சொல்றேன் கேட்டுக்கோ... நீ எனக்கு மகனே இல்லை.... உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது... என் சொத்தில் ஒரு பைசா கூட உனக்கு கொடுக்க மாட்டேன்... எல்லாமே உன் தம்பிக்கு மட்டும் தான்..." .