அன்று...
சூரஜின் கல்லூரியில் அன்று ஆண்டு விழா சிறப்பாக நடந்துகொண்டிருக்க... மாணவர்கள் அனைவரும் மிகவும் உற்சாகத்துடன் இருந்தனர். விழாவிற்காக அமர்நாத்தும் வந்திருந்தார். விழா ஆரம்பித்து சிறப்பு விருந்தினர் மற்றும் அனைவரின் பேச்சுக்களும் முடிந்து கலைநிகழ்சிகள் ஆரம்பிக்க அனைவரும் கீழே வந்து அமர்ந்து பார்க்க ஆரம்பித்தனர்.
மாணவர்களின் உற்சாக கைதட்டல் விசில் சத்தங்களுக்கிடையில் ஒவ்வொரு நிகழ்சிகளும் அழகாக மாணவர்கள் வழங்க அனைவரும் ரசித்து கொண்டிருந்தனர்.
விழாவை தொகுத்து வழங்கும் பெண்... " அடுத்து தன் அற்புதமான நடனத்தால் நம்மை மழ்விக்க வருபவர் மூன்றாம் ஆண்டு மாணவி உத்ரா!" என்று அறிவிக்க... மாணவர்கள் அனைவரும் கரோஷம் எழுப்ப... மேடையின் நடுவே வந்து தன் கரங்களை குவித்து வணக்கம் சொல்லிவிட்டு...
"கண்ணா வருவாயா... மீரா கேட்கிறாள்..." என்ற பாடலுக்கு நடனமாட ஆரம்பித்தாள் உத்ரா.
ஷிவானி அவளை தன் பொறுப்பில் எடுத்ததிலிருந்து உத்ராவிற்கு நடனத்தில் இருக்கும் ஆர்வத்தை தெரிந்து கொண்டு அவளை முறையாக பரதநாட்டியம் கற்க வைத்திருந்ததால் அவளின் நடனம் அத்தனை அழகாக இருந்தது... பார்த்த அனைவரும் தங்களை மறந்து அவள் நடனத்தை ரசிக்க... சூரஜோ அவள் அழகை கண்டு அசந்து போனான். இவளை எப்படி தன்னிடம் வர வைப்பது என்ற எண்ணமே அவன் மனதில் ஓடியது.
உத்ரா இயற்கையிலேயே நல்ல அழகு. அதுவும் ஆசிரமத்தை விட்டு வெளியே வந்து ஷிவானியின் பாதுகாப்பில் இருக்க ஆரம்பித்த பிறகு நல்ல உணவு, பிடித்த படிப்பு, மகிழ்சியான சூழ்நிலை எல்லாம் சேர்ந்து அவளை அழகியாக காண்பித்து. அதுவும் நடனதிற்கென்று அவள் செய்து கொண்ட அலங்காரம் வேறு இன்னும் அவளை பேரழகியாக காட்ட அதில் மது உண்டவன் போல் மயங்கியே போனான் சூரஜ்.
உத்ரா நடனம் முடிந்து மேடையை விட்டு செல்லும் வரை அவன் கண்கள் வேறெங்கும் திரும்பவில்லை. அவன் மனம் வேகமாக திட்டம் தீட்ட ஆரம்பித்தது.