ஷிவேஷ்வரன், ஹரி, ஷிவானி மூவரும் ஹரி வீட்டிற்க்கு வரும் போது வீட்டில் எல்லோரும் தூங்காமல் இவர்களுக்காக காத்திருந்தனர். ஷிவேஷ்வரன் அக்ஷயாவை கண்டதும் ஆசையுடன் அவளை கையில் எடுத்து முத்தமிட்டான். ஹரியிடம் வீடியோ கால் பேசும் போது அவளிடமும் பேசுவதால் அவனை குழந்தைக்கு அடையாளம் தெரிந்திருந்தது.
"ஹாய் குட்டிமா!! நீங்க ஏன் இன்னுமும் தூக்காமல் முழிச்சிருக்கீங்க?..." என்று கேட்டபடியே உள்ளே வர...
"தூக்கம் வரலை அங்கிள்... ஆமா நீங்க முன்னாடியே வருவேன்னு சொன்னீங்க... ஆனால் இப்போதான் வந்திருக்கீங்க ஏன்?" என்றாள்.
"அங்கிள்க்கு நிறைய வேலைடா, சோ சீக்கிரமா வர முடியலை" என்று பதிலளித்து நிமிர்ந்து பார்க்க அங்கே பிருந்தா முறைப்புடன் நிற்க...
"என்ன பிருந்தாவனம் ஏன் இந்த பார்வை? மீ பாவம்டா பார்வையாலே எரிச்சுடதா?..." என்று வழக்கம் போல் கேலி செய்தான்.
"போங்கண்ணா நான் உங்க கிட்ட பேச மாட்டேன்... எங்களையெல்லாம் வருத்தப்பட வச்சீங்கல்ல... எத்தனை முறை வரச்சொல்லி கேட்டேன்... நீங்க வந்தீங்களா? பாவம் வாணி நீங்க இல்லாம எவ்ளோ கஷ்டப்படுறா தெரியுமா?" என்று கோபத்துடனும் வருத்ததுடனும் கூறினாள்.
அவளின் வருத்தம் கண்டு ஷிவேஷின் முகம் வாடிவிட அவனை பார்த்து ஷிவானியின் கண்களிலும் கண்ணீர் திரண்டது. அதை பார்த்த ஹரி...
"பிருந்தா ரொம்ப நாளைக்கப்பறம் அவன் வீட்டுக்கு வந்திருக்கான்... அதையும் இதையும் பேசி அவனை வருத்த பட வைக்காதே... சாப்பாடு எடுத்து வை சாப்ட்டுட்டு அவன் கிளம்பட்டும் இப்பவே டைம் ஆகிடுச்சு...எல்லாம் அப்புறம் பேசிக்கலாம்..." என்று அதட்டலிட்டான்.
பிருந்தா "சரி" என்று தலையாட்டி விட்டு எல்லோருக்கும் சாப்பாடு எடுத்து வைக்க செல்ல அவளுடன் ஷிவானியும் உள்ளே சென்றாள். அவர்கள் இருவரும் சென்றதும் அக்ஷயாவும் ஷிவேஷின் கையிலிருந்து இறங்கி அவர்களின் பின்னால் ஓடினாள்.