நிழல் - 20

69 3 0
                                    


அன்று ஷிவேஷ்வரன் - ஷிவானியின் பதிவு திருமண நாள்...

காலை எழுந்தது முதல் ஷிவேஷுக்கு பதட்டமாகவே இருந்தது... தாய்க்கு தெரியாமல் அவன் வாழ்வில் செய்யப்போகும் மிகப்பெரிய விஷயம் ... அந்த படபடப்பு மனதுக்குள் இருக்க... சாதரணமாக என்றும் போல் கிளம்பி கீழே வரவும்... தந்தை பள்ளிக்கு செல்வது போல் கிளம்பியிருந்தார்...

ஷிவேஷை கண்ட விஜயலக்ஷ்மி "காலையிலேயே அவசர வேலையா ஷிவா?..." எங்கே செல்கிறாய்? என்று கேட்காமல் கேள்வியை திருப்பி போட்டு கேட்க....

"எஸ்மா... நானும் ஹரியும் ட்ரைனிங் போறதுக்கான வேலைகள் கொஞ்சம் பார்க்கணும்... அதுக்குதான் கிளம்பியிருக்கேன்மா" என்று கூறினான்...

ராமநாதன் ஷிவேஷிடம் "ஷிவா உன்னோட வண்டி சர்வீஸ் விட்ருக்கியே எப்படி போகப்போற?..." என்று கேட்டு யோசித்தவர் அதற்கு விடையாக "நீ ஒன்னு பண்ணு என்னோட கார் எடுத்துக்கோ போகும் போது என்னை ஸ்கூலில் ட்ராப் பண்ணிட்டு போ... சாயங்காலம் நான் போன் பண்ணறேன் வந்து பிக்கப் பண்ணிக்கோ" என்றார்...

வண்டியை சர்வீஸ் விட சொன்னதே அவர்தான்... இரண்டு பேரும் சேர்ந்தே போகலாம் என்ற திட்டத்திற்கு அதுதான் சரியாக இருக்கும் என்று முந்தைய நாளே அதை செய்ய வைத்திருந்தார்.

அவருக்கு மனதில் ஷிவேஷ் -ஷிவானிக்கு விஜயலக்ஷ்மியால் பெரிதாக பிரச்சினை வரும்... கண்டிப்பாக அவர் இதற்கு சம்மதிக்காமல் பெரியளவில் எதிர்ப்பு தெரிவிப்பார்... பல பிரச்சினைகளை சமாளிக்க வேண்டி வரும்... அந்த சமயத்தில் ஷிவானியின் பாதுகாப்புக்கு இந்த பதிவு திருமணம் அவசியம் என்று தோன்றியது... தவறு தான்... இத்தனை வருட குடும்ப வாழ்க்கையில் மனைவிடம் மறைத்து அவர் எதுவும் செய்ததில்லை... ஆனால் ஷிவானியின் நிலை... கண்டிப்பாக மனைவி மகன் காதலை ஒத்துக்கொள்ள மாட்டார்... அப்படிஏதாவது பிரச்சினை வரும் பட்சத்தில் பேசி புரிய வைக்க வேண்டும் அதிலும் ஒத்துக்கொள்ளவில்லையென்றால் இந்த விசயத்தை சொல்லிவிடலாம்... அதோடு ஷிவானி மனதளவில் பாதுகாப்பாக உணர இது தேவையான ஒன்றாக எண்ணினார் மேலும் அவர் ஷிவேஸ்வரனுக்கு மட்டுமல்ல ஷிவானிக்கும் ஒரு தகப்பன் ஸ்தானத்திலிருந்து எல்லாவற்றையும் யோசித்தே இந்த முடிவெடுத்திருந்தார்.

நிழலே நெருங்காதே!!Where stories live. Discover now