நிழல் - 6

78 5 0
                                    


கதிரவன் பூமியின் மறுபுறம் ஒளிகொடுக்க விடைபெறும் அந்திமாலை நேரம் பிருந்தா வீட்டு மொட்டை மாடி ... ஷிவேஷ்வரன் தோளில் சாய்ந்தமர்ந்திருந்த ஷிவானி அவன் கை விரல் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தாள்.

ஷிவேஷ்வரன் அந்த இனிமையான தருணத்தை கண்மூடி அமைதியாக அனுபவித்துக் கொண்டிருந்தான்.

"மாமா" என்று ஷிவானி அழைக்க,

கண் திறக்காமலேயே "ம்" என்றான் ஷிவேஷ்வரன்.

"மாமு"

"என்ன?"

"டேய் மாமு"

"என்னடி சொல்லு"

"அன்னைக்கு என்னை பார்த்ததும் ஏன் உங்களுக்கு அப்படி சொல்லணும்னு தோணிச்சு?" என்றாள்.

"ஏன்டி இதே கேள்வியை கடந்த இரண்டு வருடத்தில் நீ ஆயிரம் தடவை என்னிடம் கேட்டிருப்பாய்?. நானும் தெரியலை... சொல்லணும்னு தோணிச்சு சொல்லிட்டேன்னு... பதில் சொல்லியிருக்கேன்..." என்றான்.

"அதுதான் ஏன் சொல்லணும்னு தோணிச்சுன்னு கேட்கிறேன்?..."

"தெரியலை ஹனி உன் வருத்தமான முகம் பார்த்து இங்கே வலித்தது..." என்று தன் இதய பகுதியை கை வைத்து காண்பித்து பின் "இது" என்று தன் தலையை சுட்டிக்காட்டி "அப்படி சொல்லுன்னு ஆர்டர் போட்டுச்சு உடனே சொல்லிட்டேன்" என்று பதிலளித்து அவள் கையோடு கை கோர்த்து

"ஹனி! என் கடைசி மூச்சு வரை உன்னோடவே இருக்கணும்... உன்னை சந்தோசமா வச்சிக்கணும்... உனக்கு யாரும் இல்லேன்னு நீ ஒரு செகண்ட் கூட வருத்தப்படாதளவு பார்த்துக்கணும்... இது தான் என் ஆசை, கனவு எல்லாம்."

என்று சொல்லி தன் கையோடு கோர்த்திருந்த அவள் கையை தூக்கி புறங்கையில் மென்மையாக இதழ் பதித்தான்.

ஷிவானி அவனின் மீசை முடி கையில் ஏற்படுத்திய குறுகுறுப்பை மனதிற்குள் ரசித்தவாறு அன்று நடந்ததை நினைத்து பார்த்தாள்.

அன்று ஷிவேஷ்வரன் அவளை தன் சரி பாதியாக உறுதி செய்து விட்டதை சொல்லியதும் உறைந்து நின்ற அவளை பார்த்த வண்ணமிருந்த ஷிவேஷ்வரனை தோள்தட்டி உணர்வுக்கு கொண்டு வந்தான் ஹரி.

நிழலே நெருங்காதே!!Where stories live. Discover now