ஷிவேஷும் ஹரியும் ட்ரைனிங் முடித்து தனி தனியாக போஸ்டிங் ஆகி மூன்று வருடம் கடந்து விட்டது. இப்போது ஆறு மாதத்திற்கு முன்பு தான் இருவருமே சென்னைக்கு மாறுதலாகி வந்திருந்தனர்...
அன்று ஹரிக்கும் பிருந்தாவுக்கும் திருமணம்... அந்த திருமண மண்டபம் உற்சாகத்தில் களை கட்டியிருந்தது... ஹரியுடன் இருந்த ஷிவேஷ் அவனை கேலி செய்து ஒரு வழியாக்கி கொண்டிருந்தான்.
பிருந்தாவுடன் அவளுக்கு அலங்காரம் செய்வதற்கு உதவிக் கொண்டிருந்த ஷிவானி மூன்று மாதம் முன்பு தான் தன்னுடைய ஐ.பி.எஸ் ட்ரைனிங் முடித்து பணியில் அமர்ந்திருந்தாள்... அவளின் நல்ல நேரம் அவளுக்கு சென்னையிலேயே முதல் போஸ்டிங் கிடைத்தது.... அதில் அவளுக்கு மிகுந்த சந்தோசம்... இனி ஷிவேஷை விட்டு பிரிய வேண்டாமே...
ராமநாதனும், விஜயலக்ஷ்மியும் திருமணதிற்கு வர... ஹரியின் பெற்றோர் அவர்களை வரவேற்று முதல் வரிசையில் அமர வைத்தனர்.
மணமேடையில் ஹரியை அமர்த்தி திருமண சடங்குகள் நடந்து கொண்டிருக்க... அதை பார்த்துக்கொண்டிருந்த விஜயலக்ஷ்மியின் மனம் அடுத்து ஷிவேஷின் திருமணத்தை எப்படியெல்லாம் நடத்தலாம் என்று கணக்கிட்டு கொண்டிருந்தது...
மணப்பெண்ணை அழைத்து வர சொல்லவும் பிருந்தாவை உறவினர்கள் அழைத்து வந்தனர்... அவளுடன் வந்த ஷிவானியின் அழகில் அவளையே கண்ணிமைக்காமல் ஷிவேஷ் பார்த்துக்கொண்டிருந்தான்.
நண்பனின் திருமணம் கொடுத்த உற்சாகம் ... தோழியின் திருமணத்திற்காக ஷிவானி செய்திருந்த அலங்காரங்களில் அவளின் அழகு பளிச்சிட... சூழ்நிலையை மறந்திருந்தான் ஷிவேஷ்... அதுவும் முன் வரிசையில் அமர்ந்திருக்கும் தன் அம்மாவை முற்றிலும் மறந்து விட்டான். இருவரும் அதிகம் பேசிக்கொள்ள விட்டாலும் ஷிவேஷின் பார்வை அடிக்கடி ஷிவானியை தழுவ அதிலிருந்த காதலுடன் கலந்த உரிமை விஜயலக்ஷ்யின் கண்களுக்கு தவறமால் பட... அவர் மனம் யோசனைக்கு சென்றது....