எபிலாக்

93 5 2
                                    

பத்து வருடங்களுக்குப்பின்...

"அம்மா கிளம்பியாச்சா?... லேட் ஆகுது... அக்ஷயா அக்கா போன் பண்ணிட்டாங்க... நானும் அப்பாவும் கார்ல இருக்கோம்... நீங்க சீக்கிரமா கிளம்பி வாங்க..." என்று அறை வாசலின் கதவைத்தட்டி ஷிவேஷ்வரன்- ஷிவானியின் சீமந்த புத்திரன் 9 வயது கார்த்திக் என்ற கார்த்திகேயன் சத்தமிட... அவனின் கத்தலில் உள்ளிருந்த ஷிவானி..

"பொறுடா இதோ கிளம்பிட்டேன்... கொஞ்சம் வெயிட் பண்ணுங்க..." என்றவள்... "அப்பாவும், மகனும் முதலில் கிளம்பியிருந்துட்டு நம்மளை இப்படித்தான் எப்பவும் விரட்டுவாங்க... ஆம்பிளைங்க அவங்க மாதிரி நம்மால் சீக்கிரம் கிளம்ப முடியுமா?... அதுவும் இன்னைக்கு பார்த்து கமிஷனர் மீட்டிங்... அவருக்கு என்ன மீட்டிங்க முடிச்சுட்டு அவர் பாட்டுக்கு கிளம்பிடுவார்... நாம அவர் சொல்ற வேலையை முடிச்சு கிளம்ப இவ்வளவு நேரம் ஆகிடுச்சு... இது எங்க இவனுக்கு புரியுது..." என்று புலம்பிக் கொண்டே புடவை மாற்றி தலை வார ஆரம்பிக்க...

அறைக்கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்த ஷிவேஷ்வரன் "என்ன என்னை ஏதோ திட்ற மாதிரி இருக்கு?" என்றான்.

"உங்களை ஒன்றும் சொல்லவில்லைப்பா... எங்க கமிஷனரைத்தான் திட்டிட்டுருக்கேன்...எல்லா வேலையும் எங்க தலையில் கட்டிட்டு மனுசன் வீட்டுக்கு போய் அவர் பையனோடா ஜாலியா இருக்கார்" என்று சொல்லி நமட்டு சிரிப்பு சிரித்தாள்...

"அடிங்க, உங்க வேலையை சரியா செய்ங்கன்னு சொன்னா அது தப்பா?... அதுக்கு கமிஷனரை திட்டுவியா நீ?..." என்று கேட்டுக்கொண்டே பின்னிருந்து மனைவியை அணைக்க...

"அய்யோ கார்த்திக் வரப்போறான்..." என்று ஷவானி பதறினாள்...

"அவன் அப்பவே கீழே போய் அப்பாக்கூட பேசிட்ருக்கான்... நீ என்னை கொஞ்சம் கவனி ஹனி..." என்று அவளின் கன்னத்தோடு கன்னம் வைத்து அவளின் இதழோரம் சிறு முத்தம் ஒன்று வைக்க...

"அதெல்லாம் அப்பப்போ கவனிச்சுட்டு தானே இருக்கேன்..." என்று ஷிவானி கன்னம் சிவக்க கூறினாள்...

நிழலே நெருங்காதே!!Where stories live. Discover now